இரட்சிப்புமாதிரி
இரட்சிப்பின் குடும்பம்
“எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படு கிறவர்களு மாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்: இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” எபிரேயர் 2 : 11-14
இரட்சிப்பின் குடும்பத்தின் தகப்பனார் தேவன். மூத்த குமாரர் இயேசுகிறிஸ்து. அன்பு குடும்ப மொழி– உறவுஒப்புரவாகுதல்மன்னிப்புமகிழ்ச்சிஇக்குடும்பத்தில்
மூத்தகுமாரர் நமக்கெல்லாம் மூத்த சகோதரராவார். அவரது சுத்திகரிப்பின் மூலம் இந்த கனமான அந்தஸ்தை பெறுகிறார். அழுக்கான கந்தையான நம்மை கன்னியப்படுத்துகிறார். தன் இரத்தம் தெளித்ததினால் சுத்தமானீர்கள் என்று சொன்னார். சுத்தப்படுத்தினவர் அவரே, சுத்தமாக்கப்பட்டவர்கள் நாமே சுத்தமாக்கியவருக்கும் சுத்தப்படுத்தப்பட்டவருக்கும் ஒரே தகப்பன். கடவுளை அப்பா என அழைக்க புத்திர சுவீகார ஆவியை தந்தவரும் அவரே. பயப்படுத்தும் உறவல்ல அப்பா பிதாவே என்றழைக்க புத்திர சுவீகார உறவு பெற்றோம். அவரே பரிசுத்தமானார். அவரே பரிசுத்தவான்களென்றும் அழைக்கிறார்.தேவனுடைய பிள்ளை என்ற அச்சாரத்தை கொடுத்தவரும் அவரே. கடவுள் எனக்குக் கொடுத்த பிள்ளைகளென குடும்ப உறவை பலப்படுத்துகிறார்.நாம் மாம்சமும் இரத்தமும் கொண்டவர்களாயிருப்பதனால் அவரும் மாம்சமும் இரத்தமும் கொண்டு மனிதனானார். மனிதனாகிய என்னை வாழ வைத்து உண்மை மனிதனாக்கினார். மனிதனை மனிதனாக வாழ வைத்ததே இந்த சுவிசேஷம். மிருகமாய் அலைந்த என்னை தன் அன்பின் இரத்தம் கொண்டு கழுவி சொந்த குடும்பத்தில் குழந்தை பாசத்தோடு சகோதர பாசத்தோடு குடும்ப பாசத்தோடு நிலை நாட்டினார். இதுவே இரட்சிப்பின் குடும்பம் பிசாசானவனை அழிக்கவே இப்படி செய்தார். இனி மரண பயமுமில்லை இரட்சிப்பு. பயத்திலிருந்து விடுதலை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. இயேசுவின் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு. அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு. ஆமென்.
இரட்சிப்பின் விடுதலை
“ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்”. எபிரேயர் 2: 15
விடுதலை விடுதலை பெற்றேன்.வித விதமான பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை அச்சுறுத்தும் பயங்களிலிருந்து விடுதலை. அடிமைத்தனத்தினின்று விடுதலை. இரட்சிப்புக்குள்ளாக வந்தவர் சுதந்திரத்தின் ஆவிக்குள்ளாவார். அடிமை சங்கிலிகளெல்லாம் விலங்கொடிக்கப்பட்டன.பாவத்தினால் கூனிப் போயிருந்த எனக்கு விடுதலை இந்த விடுதலை செய்தி அறிவிப்பு வேத வசனத்தின் மூலம் வருகிறது. ஆட்டுக்குட்டி சேற்றிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டால் எழுந்து ஒடும். பாவத்தின் ஆணிவேர் அறுக்கப்பட்டதினாலே விடுதலை. இனி பாவத்தின் விளைவு என்னை தொடாது. பழைய பாவம் என்னை தொடராது. சாபம் அகன்று போனது. அடிமைத்தன வாழ்வை என்னிலிருந்து அகற்றிப்போட்டார்.எண்ணத்தில் உணர்வில் பல விதமான அடிமைத்தனத்தில் இருந்த நாட்கள் உண்டு. அவைகள் இனி என்னை அனுகாது. மரணபயம்
என்னை ஆட்கொண்டிருந்தது விடுதலை. மரணமே உன் கூர் எங்கே?பாதாளமே உன் ஜெயம் எங்கே? என் மரணத்தின் கூரைமுறித்தவர். பாதாளத்தின் ஜெயத்தை விழுங்கியவர் எனக்கு விடுதலை தந்தார். முற்றிலும் மரண பயம் நீங்கி விடுதலை பெற்றேன். விடுதலையை அனுபவமாக்கவேண்டும். பல நாட்கள் கட்டி வைக்கப்பட்ட யானை சங்கிலியை தரித்தெரிந்த பின்னும் அந்த யானை அதே நிலையிலே சுற்றி சுற்றி நிற்கும். அதுபோல பழைய நிலையிலே நின்று போகக்கூடாது. விடுதலையை ஏற்று புதிய நிலைக்குள் பிரவேசிக்க வேண்டும். புதிய அறிக்கைகள் வெளி வர வேண்டும். புதிய செயல்கள் புதிய புதிய சாட்சிகள் கூற வேண்டும். எல்லாம் புதிதாயின என்பதற்கு சாட்சி பகர வேண்டும். விடுதலை பெற்றவர்கள் மற்றவர்களையும் இந்த இரட்சிப்பின் விடுதலைக்கு அழைப்பு கொடுக்க வேண்டும். சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இயேசுகிறிஸ்துவே சத்தியம். இயேசு கிறிஸ்துவே உங்களை விடுதலையாக்குகிறவர். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இரட்சிப்பு மனுக்குலம் முழுவதும் முழு ஏக்கத்தோடு வேண்டிநிற்பது இரட்சிப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலும் இரட்சிப்பு தேவை. கடின உழைப்போடு பல கஷ்டங்கள் பிரயாசங்கள் ஏற்று மனிதன் இந்த இரட்சிப்புக்காக பல திசை நோக்கி இடம் நோக்கி புண்ணிய ஸ்தலம் நோக்கி அலைந்து திரிகிறான். மனிதன் கடவுளை அடைய விரும்புகிறான் ஆனால் கடவுளோ மனிதனை தேடி சிலுவையில் வந்து தனது இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டாரென்ற இந்த உண்மையே இரட்சிப்பின் அடிப்படை. இயேசுகிறிஸ்து எனது பாவங்களுக்காக மரித்தாரென ஒப்புக்கொண்டு விசுவாசத்தோடு அவரது இரத்தத்தினால் தன்னை கழுவி சுத்திகரித்துக்கொள்வதே இரட்சிப்பு. இது இன்றைக்கே சொந்தமாக வேண்டியது. என்றைக்கும் நிலைத்து நிற்பது. இது இலவசமானது உண்மையான மனந்திரும்புதலை கொண்டு இலவசமான இந்த பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதே இரட்சிப்பு. இன்றே இரட்சிப்பின் நாள். இதை அனுபவமாக்க வேண்டும்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக சி.ஜெபராஜ் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க: http:// jebaraj1.blogspot.com