இரட்சிப்புமாதிரி
விலையேறப் பெற்ற இரட்சிப்பு
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரேயர் 2 : 4
இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா ? ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறீர்களா? இது போன்ற கேள்விகளுடே நாம் நடந்து வந்திருக்கிறோம். இக்காலத்திலே இக்கேள்விகள் குறைவாகவே கேட்கப்படுகின்றன. இரட்சிப்பு ஒவ்வொரு வருடைய வாழ்விலும் அவசியம். பாவங்களிலிருந்து விடுதலை அவசியம். வியாதிகளிலிருந்து பயங்கரங்களிலிருந்து, பாதுகாப்பற்ற தன்மைகளிலிருந்து விடுதலை அவசியம். மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் ஆதிமுதல் சொல்லப்பட்டு வரும் ஒன்று.பழையன களைந்து புதியன தரித்துக் கொள்ளுதல் முக்கியம். புதிய வாழ்வு புதிய திருப்பம் தேவை. இது நமது வாழ்விலே ஒரு நாள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று. இந்த விடுதலை வாழ்வை மீட்பை காலந்தொட்டு கேட்டு வந்திருக்கிறோம். சிறு வயது முதல் வாலிபர் வட்டத்திலும், நடுவயதிலும் தெரிந்தே வந்திருக்கிறோம். இவ்விடுதலை வாழ்வு மூதாதையர் மூலம் கேள்விப்பட்ட ஒன்று. --- உண்மை என உணர்த்தப்பட்ட ஒன்று. பிரசங்கிக்கப்பட்ட ஒன்று. கேள்வி கேட்கப்பட்ட ஒன்று இந்த செய்தியை உறுதியாய் பிடித்திருக்கிறோமா? என்னை தேடி வந்த இந்த இரட்சிப்பின் செய்தியை உறுதியாய் ஏற்றுக் கொண்டிருக்கிறேனா? இயேசு கிறிஸ்து எனக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்து உயிர்த்தெழும்பி பரிசுத்த ஆவியானவரை அனுப்பி, அவர் மூலம் அவரது இரத்தத்தின் மூலம் பாவமன்னிப்பு உண்டாயிற்று என்ற மாறாத பிரமாணத்தை சொந்த வாழ்வில் சொந்தமாக்கியிருக்கிறோமா? இதற்கு சம்மதம் சொல்லி இருப்போமென்றால் நல் திருப்பங்கள் நம்மில் ஏற்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருக்கிறோமா? இந்த இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவால் உறுதி பண்ணப்பட்டு அற்புத அடையாளங்களால் நிருபணம் பெற்று தூய ஆவியானவரால் சாட்சியிடப்பட்டு,வருகிறது. அவராலே சுத்திகரிப்பு பெற்றும் சுத்திகரிப்பாக்கப்பட்டும் இருக்கிறோம்.பழைய காணியாட்சியிலே இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு, புதிய தளத்திலே நாட்டப்பட்டிருக்கிறோம். இரட்சிப்பின் அனுபவத்தில் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டை தந்திருக்கிறார். புதிய ஆவியை தந்திருக்கிறார். எல்லாம் புதிதாயின, பழைய பழக்க வழக்கங்களிலிருந்து வெளி வர பெலனும் ஆவியானவரே தந்திருக்கிறார் இனி நானல்ல கிறிஸ்து இயேசுவே எனக்குள் ஜீவிக்கிறாரென உன்னத அனுபவத்தையும் அச்சாரமாக தந்தவரும் அவரே. இயேசுவே கர்த்தர் என அறிக்கையிட கற்றுத்தந்தவரும் அவரே. பழைய வாழ்வுக்கும் புதிய வாழ்வுக்கும் வேறு பிரித்து ஒரு அறுவை சிகிச்சை துண்டிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். துவக்க நாள் ஒன்று வேண்டும்.கிருபையினால் இந்த துவக்கம் ஒரு நாளிலே துவக்கம் பெற வேண்டும். அன்றாடகம் இந்த இரட்சிப்பு நடை பெற வேண்டும். இன்றே இரட்சிப்பின் நாள் என எல்லாருக்கும் சொல்லியாக வேண்டும். இவ்வாறான பெரிய இலவசமான இரட்சிப்பை குறித்து கவலையற்றிருப் போமென்றால் தண்டனைக்கு தப்ப முடியாதே. இன்றைக்கே இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவின் மூலமே இரட்சிப்பு. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழே பூமியின் மேலே இயேசுகிறிஸ்துவின் நாமமே அல்லாமல் வெறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.
இரட்சிப்பின் திட்டம்
ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எபிரேயர் 2 : 7 -10
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது உலகெங்கும் சொல்லப்பட்டு வந்த வேதமொழி. மனிதன் செய்த பாவத்துக்கு ஆடு மாடு இரத்தம் சிந்துவது கொடுமை. பிராயசித்தம் பரிகாரம் என்ற பெயரில் விலங்கினங்களை பறவையினங்களை சிதைப்பதென்பதை சகித்துக்கொள்ள முடியாது. பரிகாரம் தேடி தேடி பலனில்லை, கடவுளே பரிகாரியாக பதிலாளாக நமக்காக தண்டிக்கப்பட்டு நமது பாவத்தை மன்னிக்க அவரே இரத்தம் சிந்த முடிவு எடுத்ததே கல்வாரி காட்சி. அதுவே பரிகாரம். அப்படி பரிகாரம் செய்ய இறை மைந்தரே இயேசுவே இந்த பூலோகத்துக்கு அனுப்பப்படும் திட்டமே இரட்சிப்பின் திட்டம். காலம் நிறைவேறின போது தன்னையே பாவ நிவாரணமாக கொடுப்பதற்கு பாவமில்லாத அவரை பாவமாக்க தேவனே சம்மதம் தெரிவித்ததே தேவ திட்டம். இவ்வளவாய் அன்பு கூறுவதே கடவுளுடைய சம்மதம்.ஒரே பேறான குமாரனை தேவ தூதரில் மகிமை குறைந்தவராக மாற்றுவதே இதற்கு வழியாக தெரிந்தது. அப்படி சிறுமைப் படுத்தப்பட்டு இப்பூமிக்கு அனுப்பப்பட்டு நமது பாவங்களுக்காக சரித்திரத்திலே பிறந்து ஊரறிய வாழ்ந்து மரித்து, சிலுவையிலே அந்த கோலமெடுத்து பாவத்துக்கு பரிகாரம் செய்தார். அவர் நமக்காக மரித்தார். அப்படி அவர் நமக்காக சிலுவை பரியந்தம் மரணத்தில் தன்னை ஊற்றி கொடுத்து ஒப்புக்கொடுத்ததினாலே பிதாவானவர் அவருக்கு எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் தந்தருளி மகிமைப் படுத்தினார். பூலோகக் குடும்பமும் பரலோக குடும்பமும் இனைப்புப் பெற்றது. திருச்சீலை கிழிந்தது. நம்மை அவரது இரத்தத்தினாலே கடவுளோடு ஒப்புரவாக்கினார். பாவத்தின் சம்பளம் மரணம் என்ற சட்டத்தை திருத்தி இயேசுகிறிஸ்துவின் கிருபை வரமோ நித்திய ஜீவன் என மாற்றி எழுதப்பட்டது. நமக்கெதிராக இருந்த குற்றம் சாட்டும் எல்லா கையெழுத்தும், அதிகாரமும் குலைத்துப் போடப்பட்டன. தொலைந்து போயின இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக் குமென்ற சுத்திகரிப்பின் தொனி எல்லா இடமும் சென்றடைந்தன. இதுவே தேவ திட்டம். இரட்சிப்பின் திட்டம். மனுக்குலம் மீட்பு கண்டது. சத்துருவாகிய பிசாசின் தலை நசுக்கப்பட்டது. நானே பரிகாரியாகிய கர்த்தர் என்ற வேத வாக்கு மெய்யானது. பிரகடனப்படுத்தப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும் அப்போஸ்தலர் காலம் துவங்கி இன்றும் பெருகி வருகின்றன. இரட்சிப்பின் திட்டம் செயலாகிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இரட்சிப்பு மனுக்குலம் முழுவதும் முழு ஏக்கத்தோடு வேண்டிநிற்பது இரட்சிப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலும் இரட்சிப்பு தேவை. கடின உழைப்போடு பல கஷ்டங்கள் பிரயாசங்கள் ஏற்று மனிதன் இந்த இரட்சிப்புக்காக பல திசை நோக்கி இடம் நோக்கி புண்ணிய ஸ்தலம் நோக்கி அலைந்து திரிகிறான். மனிதன் கடவுளை அடைய விரும்புகிறான் ஆனால் கடவுளோ மனிதனை தேடி சிலுவையில் வந்து தனது இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டாரென்ற இந்த உண்மையே இரட்சிப்பின் அடிப்படை. இயேசுகிறிஸ்து எனது பாவங்களுக்காக மரித்தாரென ஒப்புக்கொண்டு விசுவாசத்தோடு அவரது இரத்தத்தினால் தன்னை கழுவி சுத்திகரித்துக்கொள்வதே இரட்சிப்பு. இது இன்றைக்கே சொந்தமாக வேண்டியது. என்றைக்கும் நிலைத்து நிற்பது. இது இலவசமானது உண்மையான மனந்திரும்புதலை கொண்டு இலவசமான இந்த பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதே இரட்சிப்பு. இன்றே இரட்சிப்பின் நாள். இதை அனுபவமாக்க வேண்டும்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக சி.ஜெபராஜ் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க: http:// jebaraj1.blogspot.com