திட்ட விவரம்

திருமணம் கனத்துக்குரியதுமாதிரி

திருமணம் கனத்துக்குரியது

5 ல் 2 நாள்




நாள் 2: திருமணம் ஒரு உடன்படிக்கையின் உறவு. ஆகையால் திருமணம் கனத்துக்குரியது.

பழைய ஏற்பாட்டில், தேவன் தாம் தெரிந்து கொண்ட மனிதனோடு அல்லது ஜனங்களோடு, அநேக உடன்படிக்கை செய்கிறதை பார்க்கிறோம். தேவன் அந்த உடன்படிக்கைகளை எப்பொழுதும் வாக்குத்தத்தங்களோடு துவக்குகிறார். உடன்படிக்கைகளை ஏற்படுத்துகிறவராகவும், அதை காக்கிறவராகவும் நாம் தேவனை காண்கிறோம்.

திருமணமும் ஒரு உடன்படிக்கை. திருமண உடன்படிக்கைக்குள் நுழையும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும், உடன்படிக்கை செய்கிறவர்களாக மட்டுமல்ல, அவரைப் போலவே உடன்படிக்கையைக் காக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். இவ்விதத்தில், நாம் திருமணத்தையும், திருமண உடன்படிக்கையின் தேவனையும் கனப்படுத்துகிறோம்.

திருமண உடன்படிக்கை உறவை ஒரு முக்கோணமாகக் குறிப்பிடலாம். அதின் உச்சியில் தேவனும், அடித்தளத்தில் கணவன் மற்றும் மனைவி இரு முனைகளிலும் உள்ளனர். முக்கோணத்தின் இரு பக்கத்தில் உள்ள கோடுகள், ஆணும் பெண்ணும் தேவனோடு வைத்திருக்கும் உடன்படிக்கை உறவைக் குறிக்கிறது- இயேசுவை அவர்கள் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது இந்த உறவு துவங்குகிறது. இந்த முக்கோணத்தின் அடித்தளம், திருமண நாளன்று, நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சாட்சியாக தேவன் முன்னிலையில் நுழையும் திருமண உடன்படிக்கையை குறிக்கிறது. எனவே, திருமண ஐக்கியம் முதலில் ஒரு ஆவிக்குரிய ஐக்கியம்.

மல்கியா 2:11ல்,(ஆங்கில வேதாகமம் NIV version) தேவன் திருமணத்தை பரிசுத்த ஸ்தலமாக அழைக்கிறார். பரிசுத்த ஸ்தலம் என்றால் தேவன் தங்கும் இடம் என்று அர்த்தம். கணவன், மனைவி இருவரும் “விசுவாசிகளாக” இருக்கும்போது, அவர்களது திருமணம் கர்த்தர் தங்குமிடமாக மாறும். நம் திருமணத்தில் தேவன் இருக்கிறார் என்பதை நம்மில் பலர் அங்கீகரிப்பதில்லை மற்றும் உணர்வதும் இல்லை.

பிரசங்கி 4:12 ன்படி, ‘முப்புரி நூல் சீக்கிரமாய் அறாது.’ மேலும் பரிசுத்த ஆவியானவர் கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை பலப்படுத்துகிறார்.

ஜெபம்: தேவனே, எங்கள் திருமணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி. எங்கள் திருமணத்தை, நீர் தங்குமிடமாக உருவாக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவே, நாங்கள் உம்மை எங்கள் வீட்டின் தலைவராக சிங்காசனத்தில் ஏற்றி, நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உமது வழிகாட்டுதலை நாடுகிறோம். இயேசுவின் நாமத்தில். ஆமென்.




வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

திருமணம் கனத்துக்குரியது

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்க வேண்டும் என்று எபிரெயர் 13:4ல் தேவனுடைய வார்த்தை கூறுகிறது.இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை நமக்கு என்ன பொருள்படுகிறது? இது ஏன் முக்கியம் என்றும், திருமணத்தை தேவன் நினைத்தபடி எப...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக SOURCE க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://sourceformarriage.org/

சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்