இரக்கத்தின் தேவன் - இயேசுவைப் போல நேசிக்க கற்றல்மாதிரி
கிறிஸ்துவை போன்ற இரக்கத்தின் உதாரணங்கள்
பூவுலகில் அவர் வாழ்ந்த போது நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். (அப்போஸ்தலர் 10: 38). தனிநபரின் தேவையோ அல்லது கூட்டத்தினரின் தேவையோ அவரின் அக்கறை அவரின் உடனடி நடவடிக்கையை ஊக்குவித்தது. அவர் ஆகாரம் தந்து, குணமாக்கி, போதித்து, கடலை அதட்டி, பிசாசுகளை துரத்தி, மற்றும் மரித்தோரை எழுப்பினார். அவர் சொன்ன, செய்த எல்லாவற்றிலும் அவர் தம் சீடர்களுக்கு மாதிரியை பின் வைத்துப் போனார். (1 பேதுரு 2: 21) இயேசுவைப் போன்று அவர்களும் இரக்கத்தின் முகவர்களாய் தங்களின் வார்த்தை, செயல்கள் மூலம் தேவ கிருபையை செய்தியாக தந்தனர். இயேசுவின் இரக்கம் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியதை பாராட்டுவதற்கு சிறந்த வழி, அவரின் அக்கறையான அன்பை மக்களிடம் கொண்டு சேர்த்த வழியாய் வாழ்ந்த மக்களின் வாழ்வைப் பற்றி அறிவதாகும். அவர்களின் வாழ்வு இருளில் ஓளியாகவும் அவர்களின் குரல் இரக்கத்தின் குரலாகவும் ஒலித்தன. கிறிஸ்துவைப் போன்று இரக்கம் பெற்ற வழியாய் இருந்த இரு பெண்மணிகளின் உதாரணங்களை காண்போம்.
ஜாக்கி பொலிங்கர், கிரேட் பிரிட்டனில் வாழ்ந்தவர், ஒரு பாடகர் மற்றும் கிறிஸ்தவர். ஐந்து வயதிலிருந்தே தேவன் மிஷனரி சேவைக்காய் வழிநடத்தினார். ஹாங்காங்கில் அவரின் இரக்கத்தின் பணி தொடர்ந்தது. அது 50,000 மக்கள், 6.5 ஏக்கர் இடம் உள்ள குற்றவாளிகள் தங்குமிடம். கஞ்சா அபின் போன்ற போதை பொருட்களின் கூடாரம். ஜாக்கி 20 வயதான பெண். அவர் கிறிஸ்துவின் மன்னிப்பையும் அன்பையும் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்தார். அவர் வன்முறை மற்றும் பகைமையை சந்தித்தார். அவரின் இரக்கம், வீரம், கிறிஸ்து மையமான போதனை தாக்கத்தை ஏற்படுத்தின. அவருடைய ஊழியம் சக்தி வாய்ந்ததாய் மாற்றத்தைக் கண்டு, மீட்பிற்கான தேவ வல்லமையை வெளிப்படுத்தியது. ஜாக்கி மூலம் இயேசுவின் இரக்கத்தின் பணி தொடர்ந்தது.
மேரி ரீட், 1858 ல் அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்து கிறிஸ்துவின் இரக்கத்தை மக்களிடம் கொண்டு சென்ற வழியாக இருந்தார். இந்தியாவில் தொழுநோயாளிகளின் அவல நிலையை உணர்ந்து அவர்களுக்கு தேவ அன்பின் நற்செய்தியை அறிவித்து அவர்களின் துன்பத்திலிருந்து காத்திட பாடுபட்டார். கான்பூருக்கு வந்து எட்டு ஆண்டுகள் பணியாற்றி பின் ஓய்வெடுக்க தம் நாட்டிற்கு சென்றார். மறுபடியும் இந்தியா வந்து இமயமலை அருகில் பித்தோரடெர்த் என்னும் இடத்திற்கு வந்தார். அங்கே 500 தொழுநோயாளிகளின் அவல நிலையை கண்டு அவர்களுக்காய் வாழ்ந்தார். ஓராண்டுக்கு பிறகு அவருக்கு நோய் தொற்ற அமெரிக்கா சென்றார். நோயை தேவனுடைய ஈவாக நினைத்து திரும்பவும் இந்தியாவிற்கு வந்தார். “தேவனால் அழைக்கப்பட்டு உங்களுக்கு உதவ வந்தேன்” என்றார். தேவனுடைய முகவராக கிறிஸ்துவைப் போன்ற இரக்கத்துடன் குணமாக்குவது, உதவி மற்றும் நம்பிக்கையை நம்பிக்கையற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தார். 1943 ஆம் ஆண்டு அவருடைய 53வது வயதில் சான்பாக் என்னுமிடத்தில் மறைந்தார்.
இந்த இரண்டு, தேவ ஊழியர்களும் இயேசுவின் சீடர்களின் கூட்டத்தின் பிரதிநிதிகள் ஆவர். அநேகரை அறிய மாட்டோம். அவர்களின் பெயர்கள் பரலோகத்தில் அறியப்பட்டிருக்கும். தேவன் “நல்ல விசுவாசமுள்ள வேலைக்காரர்கள்” என்று பாராட்டுவார். இயேசுவே நம் மீட்பர், நம் எஜமான், இரக்கத்தின் உருவெடுத்த இயேசுவைப் போலவே அவரின் அடிச்சுவடுகளை பின்பற்றிய ஜாக்கி, மேரியின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்ற வேண்டும். நம்மை காக்கும் கிருபையை பெற்றவர்களாய் நம் கிறிஸ்துவின் அன்பு நம் மூலம் பாய்ந்து உலகின் தேவையை சந்திக்க வேண்டும். ஹென்ரி நோவன் இயேசுவின் இரக்கத்தின் வழியாய் எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். “கோடிக்கணக்கான மக்களின் தேவைக்காக ஜெபிக்கும்போது என் ஆத்துமா விரிவடைந்து, அனைவரையும் அரவணைத்து அவர்களை தேவபிரசன்னத்திற்கு முன்பு கொண்டுவருகிறது. அவ்வாறு உணரும் போது, இரக்கம் என்னுடையது அல்ல. ஆனால் தேவனுடைய ஈவு என உணர்கிறேன். என்னால் உலகை அரவணைக்க முடியாது. ஆனால் தேவனால் முடியும். என்னால் ஜெபிக்க முடியாது ஆனால் என்னுள் இருந்து தேவனால் ஜெபிக்க முடியும். தேவன் நாமாக மாறுகிற போது… அவர் நம்மை தெய்வீக வாழ்வின் நெருக்கத்திற்கு அனுமதிக்கிறார். தேவனாலே, தேவனின் எல்லையற்ற இரக்கத்தை நாம் பகிர்வது சாத்தியமாகிறது. தேவனின் இரக்கத்தை அவரின் கிருபையால் நாம் பகிர்கிறோம். அவரின் கிருபையால், நாம் அவரின் இரக்கத்தின் வழியாய், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். கிறிஸ்துவை பின்பற்றி, பவுல் 1 கொரிந்தியர் 11:1ல் குறிப்பிட்டது போல நம் இரக்கம் உடல் சார்ந்த தேவைகளுக்கு மட்டுமல்லாது, ஆவிக்குரிய தேவைகளுக்கு உச்சபட்சமான முன்னுரிமையை தர வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவைப் போல தேவனின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒரு வழியாக நீங்கள் எப்படி மாறலாம் என்பதைக் கண்டறியுங்கள் - அவரின் இரக்கம் ஒருபோதும் தோல்வியடையாது.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக எங்கள் தினசரி ரொட்டி - இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/