இரக்கத்தின் தேவன் - இயேசுவைப் போல நேசிக்க கற்றல்மாதிரி

 இரக்கத்தின் தேவன் - இயேசுவைப் போல நேசிக்க கற்றல்

4 ல் 3 நாள்

இயேசுவின் வாழ்வில் இரக்கம்

இயேசு தேவனுடைய இராஜ்ஜியம் பற்றிய புரட்சிகரமான செய்தியுடன் வந்தார். ஒர் இராஜ்ஜியம் விசுவாசத்தினால் மட்டுமே அடைய முடியும். அது தேவனுக்கும் பிதாவுக்குமான அன்பான கீழ்ப்படிதல் மற்றும் தேவனுடைய குடும்பத்தில் உள்ள சகோதரர் சகோதரிகளுக்கு அன்பான சேவை மற்றும் மனித குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரியது. அன்பே அனைத்தும் உள்ளடக்கிய ஒரே சட்டம் ஆகும். இயேசு மலைப் பிரசங்கத்தில் வெளிப்படுத்திய அன்பு (மத்தேயு 5). அந்த பேரன்பே பத்து கட்டளைகளை நிறைவேற்றியது. (ரோமர் 13:10) அந்தக் கட்டுப்படுத்தும் மனப்பாங்கு மற்றும் நடத்தை உள்ள மீண்டும் பிறந்த இந்த சமூகமானது இரக்கமும், அன்பின் செய்கையிலும் மற்றவர்களுக்கு அக்கறை காட்டுவதிலும் எல்லா செயல்களும் இயேசுவையே உதாரணமாய் கொண்டுள்ளது.

“அன்பானது பிறனுக்கு பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கிறது.” (ரோமர் 13: 10)

தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தார். கிறிஸ்து மாசில்லாத தூயவராய் தம் பிதாவின் இயல்பை பிரதிபலித்தார். தெய்வீக பரிசுத்தத்தை மட்டும் அல்லாமல் தெய்வீக இருதயத்தை பிரதிபலித்தார். அவர் பாவம் அற்றவராக இருந்தார். ஆனால் பாவத்தின் கடுமையான உணர்வை அறிந்திருந்தார். பாவிகள் தங்கள் துன்மார்க்கத்தால் வரும் பாவத்தாலும் தனிப்பட்ட பாவத்தாலும் துன்பப் படுவதை கண்டு இயேசு இரக்கப்பட்டார். மக்கள் கூட்டம் பாவிகளாய், ஆவிக்குரிய பலவீனம் மற்றும் உணர்ச்சிகளால் உடைந்தவர்களாய் இருந்ததை அறிவார். அவரைச் சுற்றியுள்ள கூட்டத்தில் மக்கள் விசுவாசத்தால் அக்கினியாக பற்றி எரியாமல், அவிந்த அக்கினியாக உள்ளூர மங்கி எரிந்தனர் என்பதை உணர்ந்தார் (மத்தேயு 12: 20). இயேசு அவர்களை நியாயம் தீர்க்காமல், பலவீனர்களை பலப்படுத்தி அவர்களின் விசுவாசத்தை எரியச் செய்தார். இயேசு பழைய ஏற்பாட்டின் ஓசியா 6:6 ல் தேவன், “பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன்” என்பதை வலியுறுத்தினார். (மத்தேயு 9:13, 12:7) இயேசு தேவனின் வார்த்தைளில் உள்ள பாரம்பரிய சடங்குகளை மீறிய இரக்கத்தை பற்றி எடுத்துரைத்தார்.

குழந்தைகளிடம் இயேசுவின் இரக்கம்

இஸ்ரவேல் மக்கள் சமூகம், தங்கள் பிள்ளைகளை பொக்கிஷமாக நினைத்தது. கருச்சிதைவு மற்றும் குழந்தைகளை இறக்க விட்டுவிடும் மற்ற புற தேசங்களைப் போல் இல்லை. பரிசுத்த ஸ்தலத்தில் தேவன் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அது பாவமாயிருந்தது. அவர்கள் ஒவ்வொரு பிள்ளைப் பிறப்பையும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கொண்டாடினர்.

இஸ்ரவேல் மக்கள் தங்கள் பிள்ளைகள் மேல் வைத்த உயர்ந்த மதிப்பீடு :. “இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும். வால வயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத் துணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணம் அடையாமல் ஒலிமுக வாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.”(சங்கீதம்127:4–6).

இயேசு தம்பி தங்கைகளுடன் சேர்ந்து வளர்ந்ததால், அவர்களை கவனித்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. அதனால் குழந்தைகளின் குணாதிசயங்களும் தேவைகளும் பற்றிய மெய்யான உள்ளுணர்வு அவருக்கு இருந்தது. (மாற்கு -3:31-32; 6:3) சுவிசேஷத்தில் மரியாள் யோசேப்பு அவர்களின் குடும்ப உறவுகள் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர்கள் உணர்வுபூர்வமாய் அன்பான தேவனுக்கு பயந்த பெற்றோர்களாய் இருந்தனர் என்பதை அறியமுடிகிறது. இயேசுவின் மனப்பாங்கு அவரின் பெற்றோர்களின் மனப்பாங்கினால் செல்வாக்கு பெற்றதால் இயேசு குழந்தைகளை நேசிக்கிறவராய் இருந்தார். அவருடைய ஊழியத்தில் அவர் மகிழ்ச்சியாய் பிள்ளைகளை வரவேற்றார். அவர் பெரியவர்களின் உதவியும் ஏற்றுக்கொள்ளலும் பிள்ளைகளுக்கு தேவை என உணர்ந்து இருந்தார். அவரைப் பின்தொடர்ந்த கூட்டத்தில் பிள்ளைகள் பசியுடனும் ஊட்டச்சத்து குறைவு உள்ளவர்களாயும் இருந்தார்கள். சிலர் நோய்வாய்பட்டு இருந்தனர். சிலர் குறை உள்ளவர்களாயும் பார்வையற்றவர்களாயும் இருந்தார்கள். சிலர் ஆவிக்குரிய போராட்டத்தில் இருந்தனர். (மாற்கு 9: 17-18).

இயேசுவின் சீடர்கள் சிறுபிள்ளைகளின் துறு துறுப்பான செயல்களால் வெறுப்படைந்து அவர்களை கூட்டத்திலிருந்து வெளியே தள்ள முற்பட்டனர். அவர்கள் குழந்தைகளை அமைதியாய் இருக்குமாறு அல்லது வெளியே செல்லுமாறு கட்டளையிட்டனர். இயேசுவின் அன்பை உணர்ந்த பிள்ளைகள் அவரை சுற்றி அவர் தூக்கி அணைப்பார் என காத்திருந்தனர். இயேசு அவர்களை அணைத்து ஆசீர்வதித்தார். தடுத்த சீடர்களை கண்டித்தார் (மாற்கு10: 13-16). இயேசு பிள்ளைகளை அவருடைய நாமத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிள்ளைகள் சார்ந்திருப்பவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள், கற்பிக்கப்பட வேண்டியவர்கள், அப்பாவிகள், தேவனுடைய பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டிய விசுவாசத்தை உடைய உதாரணங்களாய் திகழ்கிறார்கள். (மத்தேயு 18:1- 5) யாராவது ஒரு சிறிய குழந்தைக்கு துன்பம் உண்டாக்கினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எச்சரித்தார். (மாற்கு 9: 35-37,42)

சிசுக்கொலை கிரேக்க-ரோமன் கலாச்சாரத்தில் அடிக்கடி நிகழ்ந்த சம்பவம். கிறிஸ்துவுக்கு முன்பும் பின்பும் நடந்தது. குழந்தைகளிடம் பாரபட்சம் பார்க்கும் செயலுக்கு முதல் நூற்றாண்டின் ஒரு கடிதமே உதாரணமாய் இருக்கிறது. ரோமனான இலேரியன் என்பவர் தம் மனைவி ஆலிஸ் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் வாழ்த்துகளை கூறிவிட்டு,”மகனைப் பெற்றால் அவனை வாழவிடு அல்லது மகளை பெற்றால் தூக்கி எறிந்து விடு” என எழுதியுள்ளார். இயேசுவின் இளகிய மனம், இந்தக் கொடூரமான செயலுக்கு எதிராக இருந்தது.

பெண்கள் மீது இயேசுவின் இரக்கம்

இஸ்ரவேல் ஒரு ஆணாதிக்க சமூகம். பெண்கள் கீழ்நிலையில் வாழ்ந்தனர். சமூகத்திலும் ஆவிக்குரிய நிலையிலும் கீழ் நிலையில் இருந்தனர். இந்த விஷயத்தில் ரபீக்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். தந்தைகளும் தங்கள் மகள்களை வளர்ப்பதில் வேறுபட்டனர். கணவர்களும் தங்கள் மனைவிகளை அடக்கி வைத்தனர். அன்பும் ஆளுமையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசப்பட்டதால் பெண்களின் வாழ்வில் அநேக அனுபவங்கள் இருந்தன. ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் நிலை துயரமானது என்பதை மறுக்கமுடியாது.

இயேசு பிள்ளைகளிடம் இரக்கம் காட்டியது போல பெண்களிடமும் தனித்துவமான இடத்தை காட்டினார். அவர்களைப் பற்றிய அவரின் மனப்பாங்கும் அவர்களுடன் அவருக்கிருந்த உறவும் புரட்சிகரமானது. பெண்களை தாழ்த்தும் வாக்கியங்கள் யூத ஆண்களின் ஜெபத்தில் இடம்பெற்றுள்ளன. “தேவனே நான் நாயாய் பிறக்காததற்காய் நன்றி சொல்கிறேன். நான் புற ஜாதியாக பிறக்காததற்காய் நன்றி செலுத்துகிறேன். பெண்ணாய் பிறக்காததற்காய் நன்றி செலுத்துகிறேன்.”

மகள்களை சிறிய வயதில் சந்தேகத்துடன் நடத்தினர். அவர்களை தூய்மையற்றவர்களாய் கண்காணித்தனர். அவளின் பூப்புக் காலம் தொடங்கும்போது அவளுக்கு தீட்டு, அவளுக்கு சுத்திகரிப்பு தேவைப்பட்டது. (லேவியராகமம் 15: 19-30) தீட்டான பெண்ணை தொட்டால் சுத்திகரிப்பு தேவைப்பட்டது.

தற்செயலாக கூட ஒரு ஆண் தன் மனைவியை தவிர ஒன்றுவிட்ட சகோதரியை கூட தொடக்கூடாது. பெண் திருமண வயதை அடைகிற போது, அவளுடைய தகப்பன் அவளை பண்டமாற்று செய்கிறான். திருமணத்திற்குப் பிறகு அவளைக் கணவன் பண்டமாற்று செய்கிறான். பெண்ணின் பங்கு வீட்டை நிர்வகிப்பது, நேரம் எடுக்கும் உடல்ரீதியான துன்பமான தொடரும் வேலைகள். அவளுடைய அடுத்த பங்கு அடிக்கடி பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது. அதிக பிள்ளைகளைப் பெறுவதே அவளை உயர்த்தும். மகப்பேற்றுக்கு பிறகு அவளை தீட்டாகக் கருதி அவளுக்கு சுத்திகரிப்பு தேவைப்படும். (லேவியராகமம் 12) மனைவி கணவனின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால் கணவன் அவளை விவாகரத்து செய்ய முடியும். ஆனால் மனைவிக்கு அந்த உரிமை கிடையாது. (உபாகமம் 24: 1-4) மனைவி தன் கணவனுக்கு துரோகம் செய்ததாக கணவனுக்கு சந்தேகம் எழுந்தால் அவளுக்கு கசப்பான சாபமான ஜலத்தை குடிக்க தருவர். (எண்ணாகமம் 5: 11-31) ஆனால் கணவன் மேல் சந்தேகம் வந்தால் மனைவிக்கு கணவனை சோதிக்க கூடிய எந்த வழியும் இல்லை. பெண்ணுக்கு சொத்துரிமை இல்லை. அவளால் சாட்சி சொல்ல முடியாது. அவளால் சமமாக ஆராதனையில் கலந்து கொள்ள முடியாது. பாடுவதும், கோஷமிடுவதும் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும். பெண்கள் தேவாலயத்தின் தடுக்கப்பட்ட அறைகளில் இருந்து கேட்க மட்டுமே முடியும். பத்து ஆண்கள் ஆராதனையில் இடம் பெற வேண்டும். அதில் ஒன்பது ஆண்களும் ஒரு பெண்ணும் கூட இல்லை.

விதிமுறைப்படி, சிறுவர்களைப் போல சிறுமிகளுக்கு தோராவை கற்பிப்பதில்லை. சில ரபீக்கள், “சட்டத்தை பெண்களுக்கு கற்பிப்பதை காட்டிலும் அதை எரித்துவிடலாம். ஒரு மனிதன் தன் மகளுக்கு சட்டத்தை கற்றுக் கொடுப்பது என்பது துரோகமாகும்” என்றனர்.

இயேசு மக்கள் ஆணோ பெண்ணோ அனைவரின் தேவைகளையும் உணர்ந்தவர். அவர் பாரம்பரிய பாலின கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தம்முடைய அனைத்தும் உள்ளடக்கிய இரக்கத்தால் தகர்த்தார். இயேசு 12 ஆண்டுகளாய் பெரும்பாடுள்ள ஒரு பெண் குணமடைய வேண்டி தம்மை தொட அனுமதித்தார். அவர் அவளின் செயலுக்காய் நடுங்கவில்லை. சுத்திகரிப்பு முறைகளையும் கையாளவில்லை.

இயேசு ஆணை தீட்டுப்படுத்தும் செயலாக அவள் செயலை எண்ணாமல் அவளுக்கு தொடுதலினால் ஏற்படும் அதிசயத்திற்கும், தேவ கிருபையால் பெறும் மீட்பின் விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரியவைத்தார். (லூக்கா 8: 42- 48).
இன்னொரு பெண் ஒரு பாவி இயேசு பரிசேயர் வீட்டில் விருந்து உண்ணும் போது வந்தாள். இயேசுவின் பாதங்களில் பரிமள தைலத்தை வார்த்து தன் கண்ணீரால் அவர் பாதங்களை கழுவினாள். அவர் இரக்கத்துடன் அவள் விசுவாசத்தையும் அவளின் பாவத்திற்காய் மனம் வருந்துவதையும் உணர்ந்தார். அவளுக்காக அவளின் வெளியரங்கமான செயலுக்காய் அவள் பக்கம் நின்று அவளை சமாதானத்துடன் ஆசீர்வதித்தார். (லூக்கா 7:36-50)

இயேசு பெண்களிடம் இரக்கத்துடன் நடந்துகொண்டார். தங்கள் பாவத்தால் ஒதுக்கப்பட்டிருந்த பெண்களை காத்தார். ஒரு பாவியான பெண்ணை அனைவரும் கல் எறிய துணிந்த போது அவர் நியாயமாக அந்த சூழ்நிலையை கையாண்டு அதை தடுத்து அவளை மன்னித்தார். மீண்டும் தவறு செய்யாமல் இருக்க எச்சரித்து புதுவாழ்வு வாழ சொன்னார். (யோவான் 8:1-11) சமூகம் ஒதுக்கிய நீதியற்ற பெண்களுக்கு அவர் அன்புடன் மன்னிப்பையும் நம்பிக்கையையும் வழங்கினார்.

இயேசுவின் இரக்கத்தையும் உதவியையும் விதவைகள் வெளிப்படுத்தினர். பழைய ஏற்பாடு விதவைகளை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் என்று கட்டளையிடுகிறது. (உபாகமம் 14: 28-29; 24: 19-21; 26: 12-13; ஏசாயா 1:17). இருப்பினும் சில குடும்பங்கள் அவர்களுக்கு தோழமையை தருவதில்லை, சொந்தத்தில் உள்ள விதவைகளை குடும்பத்தை விட்டு ஒதுக்கி விட்டனர்.

இயேசுவிற்கு விதவைகள் மேல் இருந்த இரக்கத்தை ஒரு உதாரணம் மூலம் அறியலாம். அது நாயீ ன் ஊரில் நடந்த அடக்க ஊர்வலத்தில் நடந்தது. ஒரு வாலிபன் மரித்து விட்டான். அவன் தாய்க்கு ஒரே மகனாய் இருந்தான். அவளோ கைம் பெண்ணாய் இருந்தாள். அவர் அதை பார்த்தபோது அந்தத் தாயின் அழுகையை கேட்டு இரக்கப்பட்டார். “அவள் மேல் மனதுருகி” (லூக்கா 7:13) அவர் எதற்காகவும் காத்திருக்கவில்லை. உடனடியாக செயல்பட்டார். அவர் பாடையைத் தொட்டு சடங்காசார தீட்டை சட்டை செய்யாமல், வாலிபனே எழுந்திரு என்று கட்டளையிட்டார். அற்புதமாக மகன் கீழ்ப்படிய அவன் உடலுக்குள் உயிர் வந்தது. அந்த தாயின் நன்றியுணர்வை நினைத்துப் பார்க்கவும். ஆறுதல் படுத்த முடியாத சோகத்திற்கு பதில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஏற்பட்டது. (வசனம் 11: 17)

இயேசு நாசரேத்தில் ஊழியத்தை ஆரம்பித்த போது அவருடைய பிரசங்கத்தில் ஒரு விதவையை பற்றி குறிப்பிட்டார். (சீதோன் நாட்டிலுள்ள அந்நியர்) தேவனின் மீட்கும் கிருபையின் பாத்திரர் ஆனார். அந்தக் குறிப்பு வேண்டும் என்றே சொல்லப்பட்டது, சபையிலிருந்த மக்களின் கருத்துக்கு வேறுபட்டிருந்தது. (லூக்கா 4: 25-26) இயேசு குறிப்பிட்ட சீதோன் விதவை மட்டுமே ஒரு உதாரணம் அல்ல, அவர் அன்றைய சமகாலத்தவர்களுக்கும் இன்றைய வாசகர்களுக்கும் சவால் விடுகிறார். இயேசுவின் காலத்தில் ஆண்களுக்கு தேவனைப் பற்றிய சிறிய அறிவு இருந்தது. மற்றும் அற்பமான ஐக்கியமே இருந்தது. பெண்களின் நிலை மோசமானது. அதனால் இயேசு பாரம்பரியத்தை எதிர்த்து பெண்களை தம் சீடர்களாக ஏற்று அவர்களை தம்முடைய சேவையிலும் ஊழியத்தில் உதவுவதிலும் ஈடுபடுத்தினார். (லூக்கா 8:1-3) பெண்கள் ஆண்களுடன் பாலின பேதங்களைக் கடந்த தேவனின் கிருபை பற்றி கற்பிக்கப்பட்டனர்.

கிறிஸ்து, இரக்கம் ஒன்றினால் மட்டுமே ஊக்குவிக்கப்பட்டார். அவர் மக்களின் அனைத்து தேவைகளையும் கண்டார்.

கிறிஸ்து இரக்கம் ஒன்றினால் மட்டுமே ஊக்குவிக்கப்பட்டார். அவர் மக்களின் தேவைகளை பார்த்தார். அவர் இரக்கத்துடன் பெண்களுக்கு தனித்தனியாகவும் கூட்டமாகவும் தேவனைப் பற்றியும் அவர் இராஜ்ஜியத்தை பற்றியும் கூறினார்.
அவர் பெத்தானியாவை சேர்ந்த மேரிக்கு நேரமெடுத்து அறிவுறுத்தினார். (லூக்கா 10:39) மேரியின் சகோதரியான மார்த்தாவை அன்பாய் கடிந்து கொண்டு வீட்டு வேலைகளை விட தேவனை பற்றி அறிந்து கொள்வது சிறந்தது என்றார். அவ்வாறு சொல்லும்போது அவர் பாரம்பரியமான பெண்ணின் பங்களிப்பை தலைகீழாக மாற்றினார். யாக்கோபின் கிணற்றடியில் சமாரியப் பெண்ணுக்கு இறையியலை சுருக்கமாய் போதித்தார். மற்றவர்கள் பிரமித்தனர். அவர் ஒரு பெண்ணுடன் தனியாகப் பேசினார். மற்ற யூதர்கள் அவர்களை ஒதுக்கினர். (யோவான் 4: 1-30)

கிறிஸ்து இரக்கம் ஒன்றினால் மட்டுமே ஊக்குவிக்கப்பட்டார். அவர் மக்களின் அனைத்து தேவைகளையும் அறிவார். அவர் மக்களை ஆண்கள் மற்றும் பெண்கள், யூதர்கள் மற்றும் யூதர்கள் அல்லாதோர், அந்நியர் மற்றும் குடிமக்கள், பெரியவர்கள் மற்றும் பிள்ளைகள் என்று பிரிவுகளாக பார்க்கவில்லை. அவர் மக்களை தேவ சாயலில் தனிப்பட்டவர்களாய் கண்டார். ஒவ்வொருவரும் தேவனுடைய மனித குடும்பம் மற்றும் ஆவிக்குரிய குடும்பமாகும்.

மற்றவர்களின் மீது இயேசுவின் இரக்கம்

இயேசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேல் மட்டுமல்லாமல் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடமும் இரக்கம் காட்டினார். இஸ்ரவேலின் முதல் நூற்றாண்டில் வரி வசூலிப்பவர்களை மக்கள் வெறுத்தனர். அவர்கள் ரோம அரசின் முகவர்களாக இருந்த யூதர்கள். அவர்கள் மற்றவர்களிடம் பணம் வசூலிக்க வேண்டும். அதிகப்படியான பணத்தை அவர்கள் தம்மிடமே வைத்துக்கொள்வர். இயேசு சபையில் பாவத்தை பற்றி சொல்லும் போது அவர்கள் மனம் வருந்தி திருந்தவில்லை எனில் அவர்களை வரி வசூலிப்பவர்களைப் போல நடத்த வேண்டுமென்றார். (மத்தேயு 18:17) இயேசு வரி வசூலிப்பவர் வீட்டில் சாப்பிட்டதும் சீடர் ஆக்கியதும் கண்டு மக்கள் அவர் மீது வீண் பழி சுமத்தினர். அவர் சகேயு என்னும் ஆயக்காரனிடம் தேவனின் இரக்கத்தை பெற்றுக்கொள்ள அழைத்தபோது மக்கள் கோபப்பட்டனர். (லூக்கா 19: 1-10) இயேசு வின் போதனையில் தன்னை உயர்த்திய பரிசேயனை காட்டிலும் தன்னைத்தாழ்த்திய ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டான் என்ற போது மக்கள் குழம்பினர். (லூக்கா 18: 9-14) இயேசு ஆயக்காரர்கள் மற்றும் பாவிகளின் சிநேகிதர் என்ற போது கூட்டம் கோபப்பட்டு இருக்கும். அவர் ஆயக்காரர்களும் பாவம் செய்த பெண்களும் யோவான்ஸ்நானனின் போதனைகளை கேட்டுத் திருந்தி இருந்தால் அவர்கள் மதத் தலைவர்களுக்கும் முன்பே தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள் என்றார். (மத்தேயு 21: 31- 32) தெய்வீக இரக்கம் ஒதுக்கப்பட்டவர்களை தேவன் உடையவர்களாய் மாற்றும்.

அவருடைய மீட்கும் இரக்கத்தால் எல்லா தடைகளையும் உடைத்தார். அவர் தொழு நோயாளிகளை தொட்டார். (மத்தேயு 8:1-4, மாற்கு 1: 40-44) அவர் தம்முடைய வல்லமையால் மற்றவர்கள் எந்த வம்சமாக இருந்தாலும் அவர்கள் தேவைகளை சந்தித்தார். அவர் ரோமர் படையின் நூற்றுக்கு அதிபதியின் மகனை குணமாக்கினார் (மத்தேயு 8:5-13). அவர் கானானியப் பெண்ணின் மகளை குணமாக்கினார் (மத்தேயு 15: 21-24). அவர் சமாரிய பெண்ணுடன் பேசி தேவனைப் பற்றியும் ஆராதனைப் பற்றியும் எடுத்துரைத்தார். (யோவான் 4). அவர் தேவனின் இரக்கத்திற்கு உதாரணமாய் ஒரு சமாரியனை தேர்ந்தெடுத்தார். ஒரு சமாரியன், கள்ளர் கையில் அகப்பட்டு காயப்பட்ட மனிதனுக்கு இரக்கம் காட்டினான் (லூக்கா 10).

“இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்றார் (லூக்கா 19:10). இயேசுவுக்கு சமூகத்தில் “இழந்தது” என்பது குழந்தைகள், பெண்கள், விதவைகள், தொழுநோயாளிகள், ஆவிக்குரிய போராட்டத்தில் இருப்பவர்கள், மதம் சார்ந்த அறிவற்றவர்கள், கால் இல்லாதவர்கள், பார்வையற்றவர்கள், பாவிகள், ஆயக்காரர்கள், சமாரியர்கள், கானானியர்கள், யூதரல்லாதவர்கள், ரோம போர் வீரர்கள் ஆவர். அவர் தீண்டத்தகாதவர்களை தொட்டார். பசி உள்ளவர்களுக்கு ஆகாரம் தந்தார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், அவர் மற்றவர்கள் எதிர்பார்க்காததை செய்து உலகையே மாற்றினார்.

இயேசு தம்முடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்கும் சாதாரண மக்களை வரவேற்றார் (மாற்கு 12:37). யூத மதத் தலைவர்கள் மக்களை அவர்கள் மதரீதியான கல்வியறிவு அற்றவர்களாக கருதியதால் தாழ்த்தினர் (யோவான் 7:49) ஆனால் இயேசு இரக்கத்துடன் கூட்டத்தினருக்கு போதித்தார். தொடர்ந்து ஆகாரம் கொடுத்தார், நோய்களை குணமாக்கினார், ஆவிக்குரிய பிரச்சினையில் இருந்து விடுவித்தார், (மாற்கு 5:1-17; 8:1-10), இயேசு ஏழைகளின் நோய்களுக்காகவும் பசிக்காகவும் துன்பத்திற்காகவும் இரக்கப்பட்டது லாசருவின் கதையின் மூலம் (லூக்கா 16: 19-31) மற்றும் அவருடைய தீர்ப்பு பற்றிய தரிசனத்திலும் அறிகிறோம் (மத்தேயு 25: 31-46) அவருடைய இருதயமும் கரங்களும் இன்னமும் கீழ்ப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கக்கப்பட்டவர்கள் மற்றும் இழந்து போனவர்களுக்காக விரிந்து இருக்கின்றன (லூக்கா 15)

ஆவிக்குரிய தேவை உள்ளவர்களுக்கு இயேசுவின் இரக்கம்

இயேசு மக்களின் பசி, நோய், அநீதி பற்றிக் கவலைப் பட்டாலும் மக்களுக்கு தேவன் உடனான உறவு பற்றியும் வரப்போகும் உலக முடிவு பற்றியும் அவர் அதிக அக்கறைப் பட்டார். அவர் நாசரேத்து தேவாலயத்தில் ஏசாயா 61 வாசித்தார்: “கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்; தரித்திரருக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் படி என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கவும் சிறை பட்டவர்களுக்கு விடுதலையையும் குருடர்களுக்கு பார்வையையும் பிரசித்தப்படுத்தவும் நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தை பிரசித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார்” (லூக்கா 4: 18-19). ஏசாயா வசனத்தை வாசித்த பின்பு இயேசு தம் ஊழியத்தை இரு பிரிவுகளாக அறிவித்தார். முதலாவது பார்வையடையவும் ஆறுதல் தரவும் தீய பழக்கம் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவும் உதவுவார். இரண்டாவது அவர் ஆவிக்குரிய புதுப்பித்தல், ஆவிக்குரிய பார்வையற்ற நிலையிலிருந்து தெளிவாக்குவது (யோவான் 6), ஆவிக்குரிய போராட்டத்தில் உள்ளவர்களை விடுதலையாக்குவதும் துன்பத்தில் இருப்பவர்களை ஆறுதல் படுத்துவதும் ஆகும்.

இயேசு மானுட துன்பத்தை தம் இரக்கத்தால் எடுத்துக்கொண்டு, தம் குணமாக்கும் அற்புதங்களால் துயரை நீக்கினார். அவரிடம் ஆவிக்குரிய அக்கறை இருந்தது. அவருடைய சமூகம் மதத்தால் ஊடுருவப்பட்டது. ஆனால் மக்களின் ஆசீர்வாதத்திற்காய் தேவன் நிறுவிய மதமோ கட்டுப்பாடு மிகுந்ததாய் சீரழிந்தது. இயேசு “அறிவாகிய திறவுகோலை” (லூக்கா11:52) எடுத்துக்கொண்டு, மக்களின் ஆன்மாவை வெறுமையாக்கி தேவனை பற்றிய அறியாமையில் வைத்திருந்த பரிசேயர்களின் பாரம்பரியத்தை கடுமையாய் எதிர்த்து கண்டித்தார்.

இயேசு அவரின் தரிசனத்தில் அவர்களுடைய நித்தியத்தில் ஒளி, அன்பு, தேவனுடைய நித்திய வாழ்வில் இருந்து வெளியேற்றப்பட்டு இருளிலும் விரக்தியிலும் மூழ்கியதை கண்டு அதிர்ந்தார். அவர் கூட்டத்திடம் தப்பி ஓடுங்கள் என்றார். அவரின் மனம் உருகும் கருத்துள்ள பேச்சுத் திறனால் அக்கறையின்றி இருந்த அலட்சியத்துடன் பாவத்திற்கு வருந்தாத மக்களை நடுங்கச் செய்தார். அதன் விளக்கம்: நியாயத்தீர்ப்பு நாளிலே உனக்கு நேரிடுவதை பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் (மத்தேயு 11: 24). ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்ல மன்னிப்பு அளிக்கும் தேவ கிருபையை மறுத்து விடாதீர்கள். (மத்தேயு 10: 28) இயேசுவின் இருதயம் துக்கத்தால் நிறைந்தது. அவர் பாவிகளுடன் உண்டும் பருகியும் இருந்தாலும் திருமண விருந்தில் மகிழ்ந்திருந்தாலும், “தேவனின் முகத்திலிருந்த இருளின் கோட்டை” பார்க்காமல் இல்லை. இயேசு பாவிகள் அழிந்துவிடாமல் நித்திய வாழ்வு வாழ அவர்களுக்காய் மரிக்க ஒப்புக்கொடுத்து இரக்கத்தின் பூரண வடிவாய் இவ்வுலகிற்கு வந்தார்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

 இரக்கத்தின் தேவன் - இயேசுவைப் போல நேசிக்க கற்றல்

கிறிஸ்துவைப் போல தேவனின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒரு வழியாக நீங்கள் எப்படி மாறலாம் என்பதைக் கண்டறியுங்கள் - அவரின் இரக்கம் ஒருபோதும் தோல்வியடையாது.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக எங்கள் தினசரி ரொட்டி - இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/