உங்களுக்குச் சமாதானம்மாதிரி

உங்களுக்குச் சமாதானம்

5 ல் 4 நாள்

விலை கொடுக்கப்பட்ட சமாதானம்

இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி ~ எபேசியர் 2:15

கிளாட் மோனெட்டின் மிகவும் பிரபலமான ஓவியங்களில் ஒன்றான “நீர் அல்லிகள்” அவரது கொல்லைப்புற குளத்தின் அமைதியான மலர்களை சித்தரிக்கிறது. அது பார்வையாளர்களுக்கு அமைதியின் புகலிடமாக இருக்க வேண்டும் என்று அதனை உருவாக்கினார். இந்த நோக்கம் 1920 களில் பாரிஸில் உள்ள ஆரஞ்சரி அருங்காட்சியகத்தில், மோனெட்டின் எட்டு ஓவியங்களை வைப்பதற்காக, இரண்டு காட்சியகங்கள் கட்டப்பட்டபோது, அடையப்பட்டது. இது முதலாம் உலகப் போரின் அழிவுக்குப் பிறகு அமைதியின் புகலிடமாக உருவாகியது.

முரண்பாடாக, நீர் அல்லிகள், எண்ணற்ற மக்களுக்கு அமைதியைக் கொடுத்தாலும், அவைகளை வரையும்போது மோனெட் ஒரு அமைதியான நிலையில் இல்லை. அவரது கேன்வாஸ்களில் காற்று வீசியது, மேலும் சாலை தூசி அல்லிகள் மீது படிந்தது. அது அவருக்கு ஆழ்ந்த விரக்தியை ஏற்ப்படுத்தியது. அவர் விரும்பாத டஜன் கணக்கான ஓவியங்களை மிதித்தார் . "நான் வண்ணம் தீட்டும்போது அடிக்கடி வேதனைகளையே அனுபவிக்கிறேன்," என்று தன் மன உளைச்சல்களை பகிர்ந்தார் . அவருடைய வேலையிலிருந்து நாம் அனுபவிக்கும் அமைதிக்கோவிலையே இல்லை.

எபேசியர் 2 ல், பவுல், யூதருக்கும்புறஜாதிகளுக்கும் இருந்த விரோதம் இயேசு கிறிஸ்துவால், தேவனோடும் அவர்களுக்குள்ளும் சரிக்கட்டப்பட்டதையும்(வ.11-15). இயேசு கிறிஸ்துவின் வேதனை நிறைந்த மரணம் அதற்குக் காரணமாக இருந்ததென்பதையும், நினைவுகூர்ந்தார்(வச. 16). சுவிசேஷத்தின் சமாதானம் இயேசு கிறிஸ்து விலைக்கிரையமாக்கப்பட்டதினாலே நமக்குக் கிடைத்தது. மோனட்டின் நீர் அல்லிகளைப் பார்க்கும்போது, கடவுளுடனும் ஒவ்வொருவருடனும் நாம் அனுபவிக்கும் சமாதானம், இயேசுவின் வேதனை நிறைந்த மரணத்தினால் கிடைத்ததென்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

சிந்தனைக்கு

எங்கே, எப்பொழுது, நீ தேவனுடன் நெருங்கியிருப்பதாக உணர்கிறாய்? எவ்வாறாக இந்தச் சமாதானம் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகள் மூலம் கிடைத்ததென்பதை உன்னில் தானே ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும்?

ஜெபம்

தேவனே, என் சமாதானம் உமது வேதனையாகிய விலைக்கிறையத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது. நான் அதை ஒருக்காலும்எனக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது. நன்றி.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

உங்களுக்குச் சமாதானம்

"என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக" - யோவான் 14:27 எங்கள் தியானங்கள் மூலம் இயேசுவின் சமாதானத்தை பற்றி மேலும் இங்கு கற்றுக்கொள்ளுங்கள் : 

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக எங்கள் தினசரி ரொட்டி - இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/