உங்களுக்குச் சமாதானம்மாதிரி
நேசிப்பதற்காக படைக்கப்பட்டது
நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாய் இருக்கிறது. ~ 1 யோவான் 3:11
1962 இல் அல்பானி சிட்டி ஹால் முன் ஒரு பிரார்த்தனை விழிப்புணர்வை நடத்திய பிறகு, டாக்டர் ரெவரெண்ட் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக, சிறையில் கழித்தார். அந்த அநியாயமான சிகிச்சையை சகித்துக்கொண்டு, “எதிரிகளை நேசிப்பது” என்ற தலைப்பில்பிரசங்கங்களை எழுதினார்.அது பின்னர் அவரது “அன்பின் வலிமை” புத்தகத்தின் ஒரு பகுதியாக மாறியது. அவரது வல்லமையான செய்தி சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான கருவியாகஅன்பை அறிவித்தது.
பல ஆண்டுகளாக டாக்டர் கிங்கின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, நிறத்தால் வித்தியாசத்தைக் கொண்ட எங்கள் இரு, வயது வந்தமகன்களுக்காக ஜெபம் செய்தேன்.என் கணவரும் நானும் வெறுப்பை அன்புடன் எதிர்த்துப் போராட அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம், இது எளிதானது அல்ல.வெறுப்பு வெற்றி பெறுவது போல் தோன்றும் போது, நான் , ”கர்த்தாவே, உமது சாயலில் எங்களைப் படைத்து, உம்மையும் பிறரையும் நேசிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டதை அறிந்திருந்தால், எவ்வளவு காலம் நாங்கள் வெறுப்பினால் பிளவுபடுவோம்”? என்றுஜெபிப்பேன்.“
ஆதிமுதலே” நேசிக்கும்படி தேவன் தம் மக்களுக்கு அறிவுறுத்தினார்(1 யோவான் 3:11). தன் சகோதரனைப்பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாய் இருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராதென்று அறிவீர்கள்(வச. 15). ஒருவரிலொருவர் வார்த்தையிலும், செய்கையிலும், மனப்பான்மையிலும் அன்பைக்காட்ட தம் மக்களுக்கு வலியுறுத்தினார்(வ. 16-18).
அநீதிக்கு விரோதமாக நாம் நிற்கும் போது, தேவன் பரிசுத்த ஆவியின் மூலமாய் நம்மை பலப்படுத்துகிறார்:”நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய கற்பனையாய் இருக்கிறது” (வ. 23).நாம் நேசிப்பதற்காகப் படைக்கப்பட்டோம்.
சிந்தனைக்கு
உன்னைவிட வித்தியாசமாயிருப்பவர்களை நேசிப்பதற்கு தேவன் எவ்வாறு உனக்கு உதவினார்? ஏன் பகைக்குப் பதிலாக அன்பைக் காட்டுவது முக்கியமானதாக இருக்கிறது.
ஜெபம்
எங்களை அன்பாய் சிருஷ்டித்துக் காப்பவரே,வித்தியாசங்களைக் கொண்டாடி உம்மை நேசிக்கவும், மற்றவர்களுக்கு அதைக் காட்டவும் எனக்கு உதவியருளும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
"என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக" - யோவான் 14:27 எங்கள் தியானங்கள் மூலம் இயேசுவின் சமாதானத்தை பற்றி மேலும் இங்கு கற்றுக்கொள்ளுங்கள் :
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக எங்கள் தினசரி ரொட்டி - இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/