தைரியம்: குறைவுள்ள மக்களின் துணிச்சலான நம்பிக்கையின் ஒரு பார்வைமாதிரி

Bolder: A Look at the Audacious Faith of Imperfect People

7 ல் 6 நாள்

நாள் 6: பெண் குணமடைந்தார்

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரும் இந்த குறிப்பிட்ட பெண் இயேசுவிடமிருந்து குணமடைவதைப் பற்றி கூறுகிறர்கள். இயேசுவிடம் குணமடையுமாறு கேட்க அவள் மிகவும் பயப்படுகிறாள், எனவே அவருடைய மேலங்கியின் ஒரத்தைத் தொட்டால், அவள் குணமடைய அவருக்கு போதுமான சக்தி இருப்பதாக நம்பி, தொடுகிறாள். ஒரு நிமிடம் அவளது நிலையில் இருந்து பார்க்கவும். பன்னிரண்டு வருடங்களாக அவள் நோய்வாய்ப்பட்டிருக்கிறாள். உங்களுக்குத் தெரிந்த பன்னிரெண்டு வயது உள்ளவரை நினைத்துப் பாருங்கள் அல்லது உங்களுக்குப் பன்னிரண்டு வயது இருக்கலாம். அது அவர்களின் (அல்லது உங்கள்) முழு வாழ்க்கை! நீங்கள் எவ்வளவு வயதானாவராய் இருந்தாலும், பன்னிரெண்டு வருடங்கள் உடம்பு சரியில்லாமல் இருப்பது மிக நீண்ட காலம். அந்தப் பெண்ணின் நோய் அவளுக்கு இரத்தப்போக்கு ஏற்படுத்தியது. மருத்துவரீதியாக, அவள் எல்லா நேரத்திலும் சோர்வாக இருந்திருப்பாள், அநேகமாக சாதாரண அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் போகலாம். மதரீதியாக, ஒரு யூதராக, அவள் “அசுத்தமானவள்” என்றும், சில மத நடவடிக்கைகளில்—பன்னிரெண்டு வருடங்களாக பங்கேற்க முடியவில்லை என்றும் அர்த்தம். அவள் சோர்வையும் தனிமையையும் உணர்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதற்கு மேல், எந்த மருத்துவராலும் அவளுக்கு உதவ முடியவில்லை, மேலும் பல முயற்சிகளுக்கு அவளிடம் பணம் இல்லை. எப்படியும் வேறு என்ன செய்ய முடியும்?

பின்னர் இயேசு நகரத்திற்கு வந்தார், ஒரு பணக்காரர், முக்கியமான மனிதர் தனது மகளைக் குணப்படுத்த தனது வீட்டிற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பெண் இயேசுவைப் பற்றி தெளிவாகக் கேள்விப்பட்டிருந்தாள், அவரால் என்ன செய்ய முடியும் என்று தெரியும், அவருடைய அங்கிகளைத் தொட்டால் அவள் குணமடையும் என்று நம்பினாள். அவள் இயேசுவைத் தொந்தரவு செய்யாமல் இருக்க முயன்றாளோ அல்லது அவரிடம் உதவி கேட்க வெட்கப்பட்டாளோ (அல்லது இரண்டின் கலவையாக) அவள் அதை செய்தாள் - அது வேலை செய்தது! ஆச்சரியமடைந்த அந்தப் பெண் கவனிக்கப்படாமல் இருக்க விரும்புகிறாள், ஆனால் இயேசு பேசுவதை நிறுத்தி, அவளிடம் நேரடியாகப் பேசினார்.

இப்போது அந்த தருணத்தை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ரேடாரின் கீழ் பறக்க முயற்சித்தீர்கள், நீங்கள் எதை எதற்காக வந்தீர்களோ அதை பெற்றுக் கொண்டிர்கள், பின்னர் இயேசு கூட்டத்தை நிறுத்தி, "யார் என்னைத் தொட்டது?" என்று கேட்கிறார். நீங்கள் ஓடினால், அது வெளிப்படையாக இருக்கலாம். நீங்கள் இல்லை என்பது போல் நீங்கள் சுற்றிப் பார்த்தால், அவர் எப்படியும் தெரிந்து கொள்ளப் போகிறார், பின்னர் நீங்கள் எதுவும் சொல்லாமல் இருக்கும் போது, அவர் அழைத்து அவள் நிலையை மோசமாக்குவாரா? அந்தப் பெண் அதைச் சொந்தமாக்க முடிவு செய்து, கண்களை தாழ்த்தி, எல்லோருக்கும் முன்பாக அது தான் தான் என்று ஒப்புக்கொள்கிறாள். வேதாகமத்தைப் படிக்கவும், இயேசு மக்களை எப்படி நடத்துகிறார் என்பதைப் பார்க்கவும் நமக்கு வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, இயேசுவின் அன்பான பதிலில் ஆச்சரியப்படுவதில்லை, ஆனால் இந்த பெண்ணும் அவளைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். வேறொருவருக்கு உதவி செய்ய அவசரமாக போகையில் இயேசு சிறிது நேரம் எடுத்து அந்தப் பெண்ணிடம் பேசுகிறார், அவளுடைய விசுவாசத்தை அவளைப் பாராட்டுகிறார். அவளுடைய விசுவாசமே அவளை நலமாக்கியது என்று இயேசு கூறுகிறார். அவளுடைய நம்பிக்கை? அவள் முடிந்தவரை அநாமதேயமாக, மறைவாக இருக்க முயன்றாள். அவள் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை மற்றும் அவநம்பிக்கையாக உணர்ந்திருக்கலாம்; உதவி கேட்கும் அளவுக்கு அவள் தகுதியுடையவளாக உணரவில்லை. ஆனால் நாள் முடிவில், அவள் தைரியத்துடன் இயேசுவிடம் வந்தாள், அது போதும். இயேசு யாரையும் ஒப்பிடுகையில் பெரிய நம்பிக்கையைக் கேட்கவில்லை; நாம் எந்த நம்பிக்கை கொண்டோமோ அதைக் கொண்டு அவரிடம் வருமாறு அவர் கேட்கிறார். அதற்கு தைரியம் தேவை, அவர் அதை அங்கிருந்து எடுத்துக்கொள்வார் என்பது உறுதி.

பிரதிபலிப்பு/கலந்துரையாடல் கேள்விகள்:

1. உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் உங்களுக்கு தைரியம் இல்லை, ஏனென்றால் நீங்கள் தகுதியானவர் இல்லை என்று நினைக்கிறீர்களா?

2. நீங்கள் எப்பொழுதாவது, நல்லதல்ல என்று நினைத்ததை இயேசு எடுத்துக்கொண்டு ஆச்சரியமான ஒன்றைச் செய்வதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? விளக்கவும் அல்லது பகிரவும்.

3. நீங்கள் பயந்தாலும் இயேசுவிடம் கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம் என்ன?

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Bolder: A Look at the Audacious Faith of Imperfect People

தைரியம் பிரமாண்டமாக, அனைவரும் பார்க்க இருக்க வேண்டிய அவசியமில்லை; அது, உங்களிடம் உள்ள அனைத்தையும் இயேசுவிடம் கொண்டுவந்து, அதினால் வரும் விளைவுகளில் அவரை நம்பும் செயல். குறைபாடுள்ள மக்களின் துணிச்சலான நம்பிக்கையைப் பார்க்க ஏழு நாள் சாகசப் பயணத்திற்கு வாருங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய பெரெயா அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அறிந்துகொள்ள http://berea.org/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்