தைரியம்: குறைவுள்ள மக்களின் துணிச்சலான நம்பிக்கையின் ஒரு பார்வைமாதிரி
நாள் 1: பேதுரு
வேதாகமத்தைப் படித்த அல்லது அதைப் பற்றி வெளியான எதையும் பார்த்த பெரும்பாலான மக்கள், பேதுரு தண்ணீரில் நடந்து சென்றதையும், விசுவாசத்தோடே தைரியமாய் "படகை விட்டு வெளியே வா" என்று சவால் விடப்பட்டதையும் கேட்டிருக்கிறார்கள். இயேசு தண்ணீரில் நடப்பது இயேசுவின் வாழ்க்கையின் நான்கு பதிவுகளில் மூன்றில் (மத்தேயு, மார்க் மற்றும் யோவானில்) பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேதுருவின் பங்கேற்பைக் குறிப்பிடுவது மத்தேயு மட்டுமே. மத்தேயுவின் பதிவில் இயேசு சீடர்களுக்கு நேரடியாகப் போதித்ததைக் கவனியுங்கள். மத்தேயு உண்மையில் இயேசு அவர்களைப் படகிற்குள்ஏறும்படி கூறுகிறார். மூன்று பதிவுகளும் இயேசு கூறியதை மேற்கோள் காட்டுகின்றன, “நான்தான்; பயப்படாதிருங்கள்." இயேசு தம் சீடர்களிடம் கேட்டது பயப்படவேண்டாம் என்பது. அவர் இயேசு என்பதால் பயப்படுவது தேவையற்றது, அவர் கூட இருக்கிறார். ஆனால் பேதுரு படகில் இருந்து இறங்குவது யாருடைய யோசனை? இது பேதுருவின் யோசனை. இயேசு அதை ஒப்புக்கொண்டார், ஆனால் இயேசு முதலில் அவரிடம் கேட்கவில்லை. பயப்படாமல், பேதுரு அவரிடம் கேட்ட காரியம் (வ. 30) உண்மையில் தோல்வியடைகிறது. ஆனால் கதையின் முடிவைப் பார்ப்போம். சீஷர்கள் வியப்பையும், ஆராதனையையும் வெளிப்படுத்தினர். இயேசு “உண்மையிலேயே கடவுளுடைய குமாரன்” என்று அவர்கள் உறுதியாக நம்பியிருக்கிறார்கள்.
இந்த வகையான மிகையான மற்றும் அடிக்கடி பொறுப்பற்ற நடத்தை பேதுருவுக்கு சாதாரணமானது, இதை நாம் சுவிசேஷப் பதிவுகளில் பார்க்கிறோம். அவரால் பின்பற்ற முடியாத பெரிய கூற்றுகளை அவர் செய்வதைப் பார்க்கிறோம் (உதாரணமாக, அவர் இயேசுவை அறியவில்லை என்று, உமக்காக மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன் என்ற சொன்ன உடனே மறுதலித்தார்). ஓரு மனிதனின் காதை வெட்டினார், பலமுறை யோசிக்காமல் பேசினார், அவர் இயேசுவையே கடிந்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் அவர் ஆரம்பகால சபையை நம்பமுடியாத வகையில் வழிநடத்துவதையும் நாம் காண்கிறோம். அப்போஸ்தலர் 2-ல், பேதுரு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு-ஒரு முடவரைக் குணப்படுத்துவதில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம், துன்புறுத்தலின் கீழ் எழுந்து நின்று செய்த சக்திவாய்ந்த பிரசங்கத்தின் மூலம்மூவாயிரம் பேர் இயேசுவை நம்புகிறார்கள். இவர் அதே மனிதன் தானா?
இயேசு பேதுருவை அடிக்கடி திருத்துகிறார் (பேதுருவால் காது துண்டிக்கப்பட்ட மனிதனை அதிர்ஷ்டவசமாக குணப்படுத்துகிறார்!), ஆனால் பேதுரு யோசிக்காமலே செயல்பட்டாலும், இயேசு பேதுருவை அழைத்துச் சென்று, அவரைத் தேவாலயத்தை கட்ட எடுக்கிறார். ஏன்? பேதுரு பல வழிகளில் தெளிவாக பலவீனமாக இருந்தார், மேலும் அவர் அடிக்கடி தோல்வியடைந்தார். ஆனால் பேதுருவில் பயன்படுத்தக்கூடிய ஒன்றை இயேசு கண்டார். பேதுரு வளர வேண்டும், அதற்கான கூறுகள் அவரிடம் இருந்தன. பேதுரு அவற்றை வழங்கவும், தேவைப்படும்போது இயேசுவால் திருத்தப்பட்டு திருப்பிவிடப்படவும், இயேசுவின் மீது கண்களை வைக்கவும் தயாராக இருந்தார்.
பிரதிபலிப்பு/கலந்துரையாடல் கேள்விகள்:
1. ஒரே நிகழ்வை, மூன்று வெவ்வேறு ஆண்களின் பதிவுகளைப் படிப்பதன் மூலம் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
2. இந்த நிகழ்வின் மூன்று பதிவுகளில் ஒன்று மட்டும் ஏன் பேதுருவின் பங்கேற்பைக் குறிப்பிடுகிறது?
3. மாற்குவின் நற்செய்தி உண்மையில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய பேதுருவின் கணக்கு என்று சில அறிஞர்கள் நம்புகிறார்கள், மேலும் மாற்கு அதை அவருக்காக எழுதினார். இது உண்மையாக இருந்தால், நீங்கள் தண்ணீரில் நடந்த நேரத்தில் நடந்த எதைப் பற்றி ஏன் எல்லோரிடமும் சொல்ல விரும்ப மாட்டீர்கள்?
4. உங்களிடம் இயேசு பயன்படுத்த அனுமதிக்கக்கூடிய பலம் மற்றும் பலவீனம் என்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தைரியம் பிரமாண்டமாக, அனைவரும் பார்க்க இருக்க வேண்டிய அவசியமில்லை; அது, உங்களிடம் உள்ள அனைத்தையும் இயேசுவிடம் கொண்டுவந்து, அதினால் வரும் விளைவுகளில் அவரை நம்பும் செயல். குறைபாடுள்ள மக்களின் துணிச்சலான நம்பிக்கையைப் பார்க்க ஏழு நாள் சாகசப் பயணத்திற்கு வாருங்கள்.
More