மோட்சம் உலகத்தை சந்தித்தபோதுமாதிரி

மோட்சம் உலகத்தை சந்தித்தபோது

5 ல் 5 நாள்

ஆராதனை மோட்சத்தை உலகத்துக்குக் கொண்டுவருகிறது

எங்கேயோ ஒரு இடத்தில் விலை உயர்ந்த பொருட்களை அர்ப்பணித்து ஒரு சிறு குழந்தையை ஆராதிப்பது என்பது எத்தனை வினோதமானதாக இருக்கும்? சாதாரணமாகத் தோன்றும் அந்தக் குழந்தையை ஆராதிக்க வானத்தின் தூதர்கள் நடு இரவில் வழிகாட்டுவார்கள் என்றால் அது எத்தனை விசித்திரமாக இருக்கும்? இது ஒரு அரைகுறையான செயலாக, புரியாத ஒன்றாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அது தான் உண்மையிலேயே ஆராதனை. கிழக்கு திசையிலிருந்து வந்த அதிகம் கற்ற ஞானிகள் ஒரு வானத்து அடையாளத்தைப் பின்பற்றி மேசியாவைக் காண வந்தார்கள். அவர்களது தேடல் அர்ப்பணிப்புள்ளது. அவர்களை ஒரு எரிச்சலடைந்த அரசனாலும் அவனது அடியாட்களாலும் தடுக்க முடியவில்லை. தங்கள் தேடலில் அவர்கள் சோர்ந்து போகவே இல்லை. அந்த புதிதாய்ப்பிறந்த குழந்தையை தரிசித்து ஆராதித்தார்கள். அது வெறும் வாய்ச்சொல்லின் ஆராதனை அல்ல. அவர்களது நாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த விலை மதிப்புள்ள, தியாகமான பரிசுகள் அவைகள். பட்டணத்தார்கள் கண்டுகொள்ளாத, படிப்பறிவு இல்லாத, முரட்டுத்தனமான மேய்ப்பர்களைப் பெரும் கூட்டமான தேவதூதர்கள் வரவேற்கிறார்கள். புதிதாகப் பிறந்த அரசனைக் காண, வானத்தில் பெரும் வாண வேடிக்கை போன்ற காட்சிகளின் பின்னணியில் அழைப்புக் கொடுக்கிறார்கள்.  சாதாரணமான அந்தக் கூட்டமானது, வேகமாகப் போய் அந்தக் குழந்தையைக் கண்டார்கள். அந்த செய்தியை பட்டணம் முழுவதும் சொன்னார்கள். தேவதூதர் கூட்டமானது கர்த்தரை ஆராதித்து பெரும் துதியை செலுத்தியதைக் கண்ட அவர்கள் தங்கள் பங்காக இதைச் செய்தார்கள்.


இந்தக் காலத்தில் ஆராதனை என்பது சில நேரங்களில் ஒரு பாடலில் அல்லது பாடகரில், இசைக்கலைஞர்களில் அல்லது சூழ்நிலையில் சுருக்கிவிடப்படுகிறது. உண்மையில் ஆராதனை என்பது ஒரு உடல்நிலை, அது பின்னர் வாழ்க்கை முறையாக மாறிப்போகிறது. கர்த்தரை இன்னும் வேண்டும் என்று தேடும் ஒரு இதயம் அது. கர்த்தரின் பிரசன்னத்துக்காக பசியெடுத்து இருக்கும் வாழ்க்கை அது. வாழ்வின் ஊற்றாகிய கர்த்தருடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் ஒரு ஆள்த்தத்துவம் அது. நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தருக்கு முன்பாக அர்ப்பணிப்பது தான் இப்படிப்பட்ட ஆராதனையின் முக்கிய அம்சமாகும். நாம் யாராக இருக்கிறோமோ அதை அப்படியே அவர் முன் கொண்டுவந்து, நம்மிடம் இருக்கும் அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிட ஆயத்தமாவது ஆகும். அதிகாரப்பூர்வமானதும், கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதுமான ஆராதனை என்பது மற்றவர்களையும் உயிருள்ள கர்த்தரைக் காணச் செய்யும். அவர்களும் கர்த்தரை ஆராதிக்க உந்துதல் கொடுக்கும்.


நீங்கள் எப்போதுமே ஆராதனை மனப்பான்மையில் இருக்கிறீர்களா?

உங்கள் முழு ஆள்த்தன்மையுடனும் உங்களிடம் இருப்பவைகளாலும் இயேசுவை ஆராதிப்பதற்கு ஏதாவது தடையாக இருக்கின்றதா? 

உங்கள் வாழ்க்கையில் ஆராதனையை மீண்டும் கொண்டுவருவீர்களா?


நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

மோட்சம் உலகத்தை சந்தித்தபோது

கிறிஸ்மஸ் என்பது நம்மைப் பற்றியும் இயேசு இந்த உலகத்துக்கு வந்தது நம் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதையும் உற்றுப் பார்க்கும் மாபெரும் காலமாகும். மோட்சம் உலகத்தை வெற்றி கொண்டது, நித்தியகாலத்துக்கும் அதை மாற்றிவிட்டது. நமது வாழ்க்கை கடினமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் இயேசு உள்ளே இருந்தால் அது நோக்கம் அற்றதாக இருக்காது. மோட்சம் உங்கள் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பீர்களா? கர்த்தரின் பிரசன்னமும் அவரது நோக்கமும் பற்றிய மாபெரும் புரிதலுடன் வாழத்துவங்குவீர்களா?

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan