மோட்சம் உலகத்தை சந்தித்தபோதுமாதிரி

இயேசு உலகத்தில் மோட்சத்தைக் கொண்டுவருகிறார்
நம்மை மனச்சோர்புக்குள்ளாக்கும் நிலையில் இருந்து மாற்றும் ஒரு திருப்புமுனையானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் இயேசு இந்த உலகத்தில் வந்தபோது ஏற்பட்டது. தனது பிரசன்னத்தால், வல்லமையால், பாடுகளால், மரணத்தால், உயிர்த்தெழுதலால் அவர் இந்த உலகத்தில் ஒரு மோட்சத்தைக் கொண்டுவந்தார். அவரது வருகையானது சாதாரணமானது, பிரம்மாண்டம் இல்லாதது. ஆனால் முழு உலகத்துக்குமே வாழ்வை மாற்றிப் போட்ட ஒன்று. மதங்களைத் தலைகீழாக்கி அதை ஒரு உறவாக மாற்றினார். மக்களைத் தங்கள் வசதிப்பிரதேசத்தில் இருந்து அழைப்புக்கு நேராகத் தூண்டிவிட்டார். கரடுமுரடான 11 பேரின் வாழ்வுகளை வல்லமையான அவரது பிரதிநிதிகளாக மாற்றினார். நம்பிக்கையே இல்லாத சூழல்களில் நம்பிக்கையை புகுத்தினார். அவர் சந்தித்த அனைவரையுமே சுகமாக்கினார். தீண்டத்தகாவர்கள் என்று எண்ணப்பட்டவர்களை அவர் தொட்டார். வெளியே தெரியாதவர்களை அழைத்தார். எதிர்பாராத மக்களை அனுப்பித் தன் பணியை இந்த உலகத்தில் தொடரச் சொன்னார். இன்றும் அவர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். இன்றும் அவர் மக்களின் வாழ்வுகளில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் இன்றும் இதயங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். இன்றும் நம்பிக்கையைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார். உலகத்திலேயே மோட்சத்தின் சிறு காட்சிகள் தெரியும் வகையில் மக்களின் கண்ணோட்டங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். இயேசு இறங்கி வந்து நம்மில் ஒருவரைப் போல மாறவில்லை என்றால், நாம் ஒருக்காலத்திலும் கர்த்தரை அறிந்திருக்கவே மாட்டோம். நாம் அவரைப்பற்றி அறிந்திருக்கலாம், ஆனால் அவர் எங்கேயோ தூரத்தில் இருக்கும் ஒரு உண்மையாக இருந்திருப்பார். அவர் நம்மைப் பற்றிய அனுபவம் இல்லாதவராக இருந்திருப்பார். இயேசு ஒரு மனித உடலில் நம்மைப் போன்ற காலத்தாலும் இடத்தாலும் கட்டுப்படுத்தப்பட்ட நபராக வந்ததன் மூலம், கர்த்தரை நம்மிடம் கொண்டுவந்தார். நாம் நம் வாழ்வை அவருக்கு என்று அர்ப்பணிக்கும்போது முடிவே இல்லாத நித்திய காலமாக நம்முடனே இருக்கிறார். கர்த்தரின் சத்தத்தைக் கேட்க நம்மை சரிப்படுத்தி வைத்தால் நமது தினசரி வாழ்வில் மோட்சமானது எட்டிப் பார்க்கும். நாம் பார்க்கும் மக்களில் அவரைப் பார்க்கும்போது, மோசமான நிலையிலும் கூட சமாதானம் நமக்குள் புகுந்து கொள்ளும்போது நாம் இவற்றை அனுபவிக்கலாம்.
நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்மஸ் என்பது நம்மைப் பற்றியும் இயேசு இந்த உலகத்துக்கு வந்தது நம் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதையும் உற்றுப் பார்க்கும் மாபெரும் காலமாகும். மோட்சம் உலகத்தை வெற்றி கொண்டது, நித்தியகாலத்துக்கும் அதை மாற்றிவிட்டது. நமது வாழ்க்கை கடினமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் இயேசு உள்ளே இருந்தால் அது நோக்கம் அற்றதாக இருக்காது. மோட்சம் உங்கள் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பீர்களா? கர்த்தரின் பிரசன்னமும் அவரது நோக்கமும் பற்றிய மாபெரும் புரிதலுடன் வாழத்துவங்குவீர்களா?
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்
