துக்கத்தை கையாளுதல்மாதிரி
"இவைகள் எல்லாம் நடக்கையில் தேவன் எங்கே இருந்தார்?"
நம்முடைய வாழ்வின் இருண்ட தருணங்களில், மனக்கசப்பால் அழுத்தம் நிறைந்திருக்கும்போது “இதில் எல்லாம் தேவன் எங்கே இருந்தார்?" என்று நம் கைகளை நீட்டி, தேவனை நோக்கி கோபமாக கேள்வி கேட்கலாம், அல்லது வாழ்வு மற்றும் மரணத்தின் மீது இயேசுகிறிஸ்துவின் ஆளுகையில் விசுவாசம் வைக்கலாம்.
நம் விருப்பத்திற்கு ஏற்ப தேவன் பதிலளிக்காதபோது, தேவன் சரியான நேரத்தில் செயல்பட வேண்டும்; மேலும் நாம் எதைக் கேட்டாலும் அவர் செய்ய வேண்டும் என்பதே நாம் கிளர்ந்தெழுவதற்குக் காரணமாகிறது. நாம் அவரை வழிநடத்த விரும்புகிறோம். வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளை செய்வதற்கு இது மற்றொரு வழியாக இருக்கிறது, தேவனை தேவனாக இருக்க விடாமல் நாம் தேவனாக மாற விரும்புகிறோம். அதனால்தான் நாம் கேட்பதை தேவன் செய்யாதபோது அவரை குறைகூறுகிறோம்.
நம் அனைவரும் அற்புதங்களை காண விரும்புகிறோம். அற்புதங்கள் நல்லது தான்; ஆனால் அவை நமது ஆழமான பிரச்சனையை தீர்ப்பதில்லை. ஆம், துன்பகரமான வாழ்க்கையை விட நாம் ஒரு இன்பரகமான வாழ்க்கையைப் பெற விரும்புகிறோம்; கொந்தளிப்பான வாழ்க்கையை விட சாதாரண வாழ்க்கை வாழ விரும்புகிறோம். ஆனால் விரும்பும் அளவுக்கு நம்மில் யாருக்கும் கட்டுப்பாடு இருப்பதில்லை. இறுதியில் நஷ்டம் அடைவோம்; அன்புக்குரியவர்களின் மரணத்தை சந்திப்போம், நம்முடைய குழந்தைகள் வலியையும் ஏமாற்றத்தையும் அனுபவிப்பார்கள்; வாழ்க்கை திட்டமிட்டபடி நடக்காது. நாம் நினைத்த, எதிர்பார்த்த, எதிர்பார்க்கிற வாழ்க்கை அமையாது.
டல்லாஸ் வில்லார்ட் இவ்வாறு எழுதினார்: “அதிக துன்பங்களை அனுபவிக்காதவர்களிடம் நீங்கள் காணும் விஷயங்களில் ஒன்று என்naவென்றால், அவர்கள் சுய உரிமையை நம்புகிறவர்கள்.” அவர் சொல்வது சரியானது தான். நம் அன்புக்குரியவரின் மரணம் - மற்றும் நமது துக்கம் ஆகியவை எப்படி இருக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலான ஒரு சிறப்பு என்னவென்றால், இயேசு கிறிஸ்து இந்த உலகில் ஆரோக்கியம் மற்றும் சகமாக்கும் அற்புதங்களை விட மேலான மற்றும் சிறந்த ஒன்றை வழங்குகிறார். மரியாள் மற்றும் மார்த்தாளைப் போல, மரித்தவர்கள் மீண்டும் உயிரோடு எழுப்பப்படுதலை நாம் காண வேண்டியதில்லை. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதி நமக்கு இருக்கிறது. “உலகின் முடிவுபரியந்தம் எப்பொழுதும் நான் உங்களுடனே இருக்கிறேன்” என்ற இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கலாம்.
தேவன் நம்முடன் வெறுமனே அழுதுக்கொண்டிருக்கவில்லை. அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலையும் ஜீவனையும் கொண்டுவருகிறார்.
இயேசு கிறிஸ்து மற்றும் லாசரு ஆகியோருடைய சம்பவத்தில், இயேசுகிறிஸ்துவே இந்த சம்பவத்தின் உண்மையான அதிசயம்; அவரே ஜெபத்திற்கு இறுதியான பதில். அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமானவர். அவரே மறுவாழ்வு தருபவர் அல்ல உயிர்தெழ செய்கிறவர். பாவத்தையும் மரணத்தையும் நரகத்தையும் தோற்கடிக்கிறவர்
நாம் அவரை விசுவாசித்தால் ஜீவனைப் பெறுவோம் என்பதே யோவான் நற்செய்தி நூல் முழுவதும் காணப்படும் கருத்து—நமக்கு உண்மையான, நிரந்தரமான, பரிபூரணமான, நித்திய ஜீவன் கிடைக்கும். நாம் மரித்தாலும் அந்த வாழ்க்கையை அனுபவிப்போம். அதே போன்று நாம் உயிரோடு இருக்கும்போதும் அந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியும், ஏனென்றால் அது நாம் அறிந்திருக்கும் தற்போதைய வாழ்க்கையை விடவும், எதிர்கொள்ள பயப்படும் மரணத்தை விடவும் பெரியது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்”
பிறகு இயேசு, “இதை விசுவாசிக்கிறாயா?” என்று கூறுகிறார். “இதில் எல்லாம் தேவன் எங்கே இருந்தார்?” என்ற கேள்வி எழும்போது, இதை விசுவாசிக்கிறாயா? என்று இயேசுகிறிஸ்து கேட்ட அதே கேள்வியை தான். நாம் நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்தக் கேள்விக்கான பதில் என்னவென்றால், அவர் நம்முடன் இருந்தார், இருக்கிறார், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை நமக்கு வழங்குகிறார். எனவே, இதை வாசிக்கும் நீங்கள் அவர் தரும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, துயரத்தின் மத்தியில் புதிய வாழ்க்கையை அனுபவிப்பீர்களா?
மேற்கோள்: “வலியும் துன்பமும் நம்மீது வரும்போது, இறுதியாக நம்முடைய வாழ்க்கையை நாம் கட்டுப்படுத்தவில்லை என்பதை மட்டும் பார்க்கிறோம், அப்படி அது நம்முடைய கட்டுப்பாட்டில் ஒருபோதும் இருந்ததில்லை." - தீமோதி கெல்லர்
ஜெபம்: ஆண்டவரே, நீர் இருக்கிறீரா என்று நான் கேள்விக்கேட்ட நேரத்தில், நீர் மிக அருகில் இருந்தீர் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியதற்கு நன்றி. இதைப் பார்க்கவும் விசுவாசிக்கவும் எனக்கு உதவும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay