துக்கத்தை கையாளுதல்மாதிரி

துக்கத்தை கையாளுதல்

10 ல் 7 நாள்

விரைவில் மீண்டும் இணைவோம் 

மிகப்பெரும் முரண்பாடுகள் நிறைந்த உலகில், மகிழ்ச்சியும் துக்கமும் எதிரெதிரானது அல்ல. உண்மையில், நாம் துக்கத்தை அனுமதிக்கும் பட்சத்தில் அது புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்திற்கு வழிவகுக்கும்.

எவ்வளவு சீக்கிரம் நாம் நம் துக்கத்தை உணரவும், அதைப் பற்றி பேசவும், அதைச் செயல்படுத்துவும் அங்கீகரிக்கிறோமோ அவ்வளவாக அதன் நிழலில் இருந்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகி, நமது நேர்மை மற்றும் நமது நம்பிக்கை மேலும் மீள்தன்மை அடைய வழிவகுக்கும்.

நம் வாழ்க்கையின் இருண்ட தருணங்களில், மனக்கசப்பு நிறைந்த வாழ்க்கையை நாம் வாழலாம், கால்களை தரையில் உதைத்து, தேவனை நோக்கி கோபமாக நம் கரங்களை நீட்டலாம். அல்லது, வாழ்விலும் மரணத்திலும் கர்த்தருடைய கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைக்கலாம். தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதி நமக்கு இருக்கிறது.  “உலகின் முடிவுபரியந்தம் எப்பொழுதும் நான் உங்களுடனே இருக்கிறேன்” என்ற இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கலாம். 


லாசருவின் உயிர்த்தெழுதல் யோவான் நற்செய்தி ஏழு  “அற்புதங்களின் தொகுப்பில்” இறுதி அற்புதமாக கூறுகிறது. அவர் அவற்றை “அடையாளங்கள்" என்று அழைக்கிறார். அடையாளங்கள்  அவற்றை தாண்டி வேறு சில மற்றும் பெரிய யதார்த்தத்தை சுட்டிக்காட்டுகின்றன.

 

மார்த்தாளும் மரியாளும் ஒரு அற்புதத்தைக் காண விரும்பினர், அவர்கள் காண விரும்பின அந்த அற்புதத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்களின் மன்றாட்டு நிறைவேற்றப்பட்டது, அவர்களின் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. ஆனால் அதை ஒரு அடையாளம் என்று யோவான் கூறுகிறார். மேலும் அடையாளங்கள் அவற்றை தாண்டி வேறொன்றை, மிக முக்கியமான ஒரு சத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றன.


நாம் அடிக்கடி ஒரு தலைகீழான அனுபவத்தை அல்லது புத்துணர்ச்சியை பெற விரும்புகிறோம்; கிறிஸ்து உயிர்த்தெழுதலை வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறார். கடைசி மற்றும் சிறந்த அடையாளமாக லாசருவை இயேசு உயிர்ப்பிக்கிறார்; ஆனால் இயேசுவே உயிர்த்தெழுதலும்  ஜீவனுமானவர்.


இயேசுகிறிஸ்து மேன்மையான ஒன்றை வழங்குகிறார்.  ஜீவனை அல்ல; மாறாக புதிய ஜீவனை தருகிறார். அவரே இந்த சம்பவத்தின் உண்மையான அற்புதம்; அவரே ஜெபத்தின் முடிவு  மற்றும் இறுதியான பதில். அவரே உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவன்.  புத்துணர்ச்சியை தருகிறவர் அல்ல மாறாக உயிர்த்தெழுதலை தருகிறவர். தலைகீழாக மாற்றுபவரல்ல, மாறாக புதுப்பிக்கிறவர். இயேசு பாவத்தையும் மரணத்தையும் நரகத்தையும் தோற்கடித்தார்.


நாம் அவரை விசுவாசித்தால், நமக்கு உண்மையான, பரிபூரண, நித்திய ஜீவன் கிடைக்கும். நாம் மரித்தாலும் அந்த வாழ்க்கையை அனுபவிப்போம்.  உலகில் வாழும்போதும் அந்த வாழ்க்கையை நாம் அனுபவிக்க முடியும், ஏனென்றால் அது நாம் அறிந்திருக்கிற வாழ்க்கை மற்றும் நாம் பயப்படும் மரணம்ஆகிய இரண்டையும் விட பெரியது. 


1 தெசலோனிக்கேயர் 4:13-14 இவ்வாறு கூறுகிறது  “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.”


தாவீது ராஜா தனது பிள்ளை மரித்தபோது இந்த சத்தியத்தால் ஆறுதலடைந்ததைக் காண்கிறோம். “நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை” (2 சாமுவேல் 12:20-23) என்று அவர் விசுவாசத்துடன் கூறினார்.


இழப்பின் புயல் மேகங்களால் நாம் மூழ்கடிக்கப்படும் போது நம் கவனத்தை ஈர்க்க வேண்டிய நேர்மறை நம்பிக்கை இதுதான்.


நம் அன்புக்குரியவர்களை “கடந்த காலத்தில் மரித்துவிட்டவர்களாக" பார்க்காமல் – “பரலோகத்தில் முழுமையாக உயிருடன்" இருப்பதைப் பார்க்கத் தொடங்குங்கள் - மேலும் மிகக் குறுகிய காலத்தில் அவர்களுடன் மீண்டும் ஒன்றிணைவோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


பரலோகத்தில் இருக்கும் நித்திய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த பூமியில் நம் காலம் ஒரு கண் இமைக்கும் நேரம் கூட இல்லை.


மேற்கோள்: நான் கல்லறைக்குச் செல்லும்போது, மரித்தவர்கள் தங்கள் கல்லறையிலிருந்து எழுந்திருக்கும் நேரத்தை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன். .. தேவனுக்கு நன்றி, எங்கள் நண்பர்கள் புதைக்கப்படவில்லை; அவர்கள் விதைக்கப்படுகின்றனர்! – டி.எல்.மூடி


ஜெபம்: ஆண்டவரே, நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களுடன் விரைவில் ஐக்கியப்படுவோம் என்ற உறுதிக்காக நன்றி. ஆமென்


நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

துக்கத்தை கையாளுதல்

நாம் நேசிக்கும் ஒருவர் மரித்துவிட்டால், பலவிதமான உணர்வுகளை எதிர்கொள்கிறோம். இந்த 10 நாள் தியானத்தில், நம் அன்புக்குரியவர்கள் கர்த்தருடன் குடியிருக்க செல்லும்போது துக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 2021 இறுதியில் கர்த்தருடன் இருக்க என் அன்பு மனைவி அவருடைய வீட்டிற்குச் சென்ற பிறகு, கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய விஜய் தங்கையாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/ThangiahVijay