வேதாகமம் உயிருள்ளதுமாதிரி
வேதாகமம் இருளை ஊடுருவி செல்லும்
சுமு கிறிஸ்துவ மார்க்கத்தை வெறுத்த நாட்கள் உண்டு. ஆனால் 2017-இல், சுமு-வின் நெருங்கிய நண்பர் ஒரு நியூசீலாந்து சபையில் அவளுடைய சாட்சியை பகிர்ந்தார். இதை கேட்டதில் இருந்து சுமு திரும்ப திரும்ப சபைக்கு வர துவங்கினாள். அவள் அந்த வருடத்திலேயே தன் ஜீவியத்தை இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தால், பிறகு இந்தியா-விற்கு செல்ல அவளுக்கு தேவை வந்தது.
ஒரு புதிய பக்தி மார்க்கத்தை, ஒரு புதிய தேசத்தில், உதவி செய்ய ஒரு கிறிஸ்துவ சகவாசம் இல்லாமல் வளருவது மிக கடினமாக இருந்தது, சுமு முடிவில் மன அழுத்தம் பெற்று ஒவ்வொரு நாளும் படுக்கையில் இருந்து எழும்ப கூட கஷ்டப்பட்டாள்.
“நான் தனிமையாக உணர்ந்தேன், மக்களோடு தொடர்பு கொள்ள மிகவும் கடினப்பட்டேன். நான் இந்தியா-விற்கு வந்தபோது என்னுடைய சுயாதீனத்தை இழந்ததுபோல உணர்ந்து, அநேக மோசமான சிந்தனைகள் என் மனதில் ஏற்பட்டன. ஆனால் நான் யூவெர்ஷன் மூலம் வேதாகம தொடர்பு கொள்ள துவங்கியபோது இந்த நிலை மாறியது, என்னால் என் சிந்தனைகளை மாற்ற முடிந்தது.”
யூவெர்ஷன் சுமு-விற்கு மற்ற கிறிஸ்துவர்களோடு தொடர்பில் இருக்க ஒரு வழியை கொடுத்தது, வேதாகம திட்டங்கள் மூலம் அவர்களிடம் கற்று கொண்டாள். 2018-இல் இருந்து அவள் 428 தியான திட்டங்களை வாசித்து முடித்தாள்.
சுமு-விற்கு கேள்வி ஏற்படும்போதெல்லாம், அவள் யூவெர்ஷன்-ஐ திறந்து அந்த தலைப்பில் திட்டத்திற்கு தேடுவாள். அதிக அதிகமாக திட்டங்களை வாசிக்க, அவள் விசுவாசமும் வளர்ந்தது.
“சில நாட்கள் நான் 11 திட்டங்களை துவங்குவேன், சத்தியத்தில் என்னை மூழ்க வைப்பதற்காக. உன்னை போல கஷ்டங்களை கடந்துவந்த மக்களிடம் இருந்து கேட்பது மிகவும் பெரிய சிலாக்கியம். நான் என் போராட்டங்களில் தனியாக இல்லை என்பதை உணர துவங்கியிருக்கிறேன். மன அழுத்தம் கொண்டு அதை கடந்து வந்தவர்களிடம் இருந்து அனுபவங்களை கேட்டிருக்கிறேன், அது இயேசுவை பின்பற்றுகிறவர்கள் மன ரீதியிலான கஷ்டங்களுக்குள்ளும் செல்கிறார்கள் என்று அறிந்தேன்.”
இப்போது, சுமு தனிமையாக, மன அழுத்தத்தோடு உணரும்போதெல்லாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களில் பிடித்து இயேசு சொல்கிற வார்த்தைகளை கொண்டு அவள் பிரச்சனைகளை சந்திக்கிறாள்.
“சிலவேளைகளில், தனிமையாக உணரும்போது, ஒரு வார்த்தை தான் உனக்கு தேவை. வேதாகமத்தையும் விசுவாசத்தையும் அறிந்துகொள்ள எனக்கு இந்த தொழில்நுட்பம்தான் குறுக்கு வழியாக இருந்தது. தொழில்நுட்பம் தேவ தொடர்பு நமக்கு உண்டாக்குவது மிக சுவாரசியமான ஒரு காரியம். கிறிஸ்துவோடு தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால் நான் இம்மட்டும் ஜீவித்திருக்க மாட்டேன், ஏனென்றால் அந்த நேரங்கள் மிக இருளாக இருந்தன அவரே வெளிச்சமாக வந்தார்-இன்னமும் இருக்கிறார்.”
தேவனுடைய வார்த்தையின் வல்லமையினால், தனிமை தொடர்பாக மாற்றப்பட்டது, துன்பங்கள் நடுவில் நம்பிக்கை கொள்ள முடிகிறது.
சுமு-வின் ஜீவியத்தை யோசித்து பாருங்கள், தேவனோடு சிறிது நேரம் பேசி நீங்கள் இருக்கும் இந்த நாட்களை குறித்து சொல்லுங்கள். இவ்வாறு செய்யும்போது, உங்கள் நிலையில் எது உண்மையென்று தேவன் உங்களுக்கு உணர்த்த கேளுங்கள், பிறகு வேதாகமத்தை வாசித்து நம்பிக்கை, உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளை வாசியுங்கள். உங்கள் ஜீவியத்தின் இருளை ஊடுருவ அவர் வார்த்தைக்கு இடம் கொடுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஆதிமுதல், தேவனுடைய வார்த்தை இருதயங்களையும் மனதுகளையும் மாற்றிவருகிறது-தேவன் அந்த கிரியையை முடித்துவிவில்லை. இந்த விசேஷித்த 7-நாள் திட்டத்தில், தேவனுடைய வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கொண்டாடி, வேதாகமத்தை கொண்டு தேவன் எவ்வாறு சரித்திரத்தையும் உலகத்தையும் மாற்றினார் என்று தெளிவாக காண்போம்.
More