வேதாகமம் உயிருள்ளதுமாதிரி
வேதாகமத்தை தடுக்க முடியாது
1500-களில், வேதாகமம் அநேக மொழிகளில் அச்சிடப்படவில்லை. நன்கு படித்த, பணக்காரர்களிடம் மாத்திரமே வேதாகமத்தை எபிரேய, கிரேக்க, லாத்தின் மொழிகளில் படிக்க முடிந்தது.
ஆனால் ஒரு படித்த மேதை வில்லியம் டின்டேல் என்பவர் எல்லோருமே வேதாகமத்தை வாசித்தாக வேண்டும் என்று உணர்ந்தார். ஆகவே அவருடைய மொழிக்கு வேதாகமத்தை மொழிபெயர்க்க துவங்கினார்: ஆங்கிலம்.
அநேக ஆட்சியாளர்கள் இந்த யோசனைக்கு எதிராக இருந்தார்கள், ஆகவே டின்டேல் இங்கிலாந்து தேசத்தை விட்டு தப்பி அங்கிருந்து புதிய ஏற்ப்பாட்டை தன்னுடைய சொந்த நாட்டிற்கு கடத்தி கொண்டுவந்தார். ஒன்பது ஆண்டுகளாக, டின்டேல் கைதாகமல் தப்பி வேதாகமத்தை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தார். முடிவில், அவர் கைதுசெய்யப்பட்டு, மதவெறி தூண்டியதாக சொல்லப்பட்டு தீயில் எரிக்கப்பட்டார்.
ஆனால் தேவன் ஒரு காரியத்தில் பங்காக இருக்கும்போது-அவரை ஒன்றும் நிறுத்த முடியாது.
டின்டேலின் தியாகம் மாற்றத்தை கோரி ஒரு ரகசிய இயக்கத்தை உருவாக்கியது. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பிறகு, மாற்றம் உண்டானது. கிங் ஜேம்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு வேதாகமம் ஆங்கிலத்தில் முழு வேதாகமமாக வெளிவந்தது-முதல் பிரதியில் டின்டேலின் மொழிபெயர்ப்பில் அநேகவற்றை கொண்டிருந்தது.
காலம் செல்ல செல்ல, இங்கிலாந்து வேதாகமத்தினால் மாற்றப்பட்டது. உயிர்மீட்சி மற்றும் விழிப்புணர்வு உண்டானது, மிஷனரி இயக்கங்கல் துவங்கின, வேதாகமத்தை மொழிபெயர்க்க அநேக ஊழியங்கள் துவங்கின. வேதாகமம் ஒரு தேசத்தை எழுப்பியது-ஆனால் எழுப்புதல் ஆரம்பகால ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தேவனுடைய வார்த்தையை அனைவரும் பெற்று இருக்க வேண்டும் என்று நினைத்தபோது துவங்கியது.. அதற்காக அவர்கள் தியாகம் செய்து உழைத்தார்.
ஆரம்பகால ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களின் தைரியம் உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது?
இப்போதே, டின்டேல் சென்ற பாதையை யோசித்து பாருங்கள், பின்னர், உங்களை சுற்றிலும் இருப்பவர்களுக்கு எந்த விதத்தில் வேதாகமத்தை பகிரலாம் என்று தேவனிடம் வழிக்காக கேளுங்கள். ஒரு வேளை ஒருவருக்கு ஒரு வசனத்தை அனுப்புவதோ, வேதாகம மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு உதவுவது, எதுவாகவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தை உன்னிடம் இல்லையென்றால் உன் ஜீவியம் எவ்வாறு மாறிப்போய் இருக்கும் என்று யோசி. பிறகு மற்றவர்களுடைய ஜீவியத்தின் மாற்றத்தில் பங்காக இரு.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஆதிமுதல், தேவனுடைய வார்த்தை இருதயங்களையும் மனதுகளையும் மாற்றிவருகிறது-தேவன் அந்த கிரியையை முடித்துவிவில்லை. இந்த விசேஷித்த 7-நாள் திட்டத்தில், தேவனுடைய வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கொண்டாடி, வேதாகமத்தை கொண்டு தேவன் எவ்வாறு சரித்திரத்தையும் உலகத்தையும் மாற்றினார் என்று தெளிவாக காண்போம்.
More