முக்கியங்களுக்கு முக்கியத்துவம்மாதிரி

முக்கியங்களுக்கு முக்கியத்துவம்

3 ல் 3 நாள்

திருப்பந்தியில் ( ஆராதனையில் ) கவனம்

இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.
பந்தியில் பங்கெடுப்பின்போது பிளவு பட்ட சூழல்களை பவுல் சபையில் கண்டிக்கிறார். கூடி வரும்போது இது பக்திவிரயத்துக்குரியது. கடவுளது பந்தி என பக்தியோடு கூட வேண்டும். கடவுளது பந்தியை பரிசுத்த சிந்தையோடு காணவேண்டும். ஒவ்வொரு முறையும் பரிசுத்த பந்தியில் இனணயும் போது ஆயத்தத்தோடு இனணய வேண்டும். நீங்கள் பெறப்போகிறது அவரது அன்பின் அடையாளங்கள். நாம் பெற்றுக் கொள்ள பாத்திரர் அல்ல. அது அவரது உடன்படிக்கை. அவரை நினைவு கூற நாம் கலந்து கொள்ளும் அன்பின் வெளிப்பாடு. இத்திருப்பந்தி, சம்பிரதாயமல்ல, சடங்கு அல்ல, பரிசுத்த உறவு. பரிசுத்தரோடு உறவு. மனம் புதிதாகிறதினாலே மறு ரூப அனுபவம் பெறும் நிகழ்வு. பயத்தோடும், பக்தியோடும் கலந்து கொள்ளும் விசுவாச நேரமிது. பரிசுத்தமில்லாமல் இந்த ஒழுங்கில் , பந்தியில் பங்கு பெறுபவர்கள் குற்றமுள்ளவராவர். ஆகவே பங்கு பெறுபவர் தன்னைத்தான் சோதித்து அறிந்து பங்கு பெற வேண்டும். இந்த அடிப்படை உண்மையை மறுப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வர வழைத்துக் கொள்வர். எச்சரிப்போடு அதிகக் கவனத்தோடு இப்பந்தியை அணுகுவோம். இப்படி செய்யாதவர்கள் பெலவீனப்பட்டும், வியாதியடைந்தும் மரித்தும் இருக்கிறார்கள். நம்முடைய மனசாட்சியே நம்மை குற்றமாகத் தீர்க்குமானால் திருந்திக் கொள்வோம். திருமேசை, திருப்பந்தி, திருப்பணி, திருச்சபை, பரிசுத்தத்தின் அச்சடையாளங்களாக மறு உருவாக்கம் பெறுவதாக . ஆமென்.

அன்பே பிரதானம் 1 கொரிந்தியர் 13 : 13
மொழியாற்றல் பேச்சாற்றல், சப்தங்கள் எல்லாம் அன்பின் முன் வெறும் சப்தங்களே. துணிவுடன் உடலை சுடக்கொடுத்தாலும் அன்பில்லையெனில் அதில் பயனில்லை ! மறை பொருள் வெளிப்படுவது, மலை அசைந்து போவது பார்த்து மலைத்து நிற்கும் அனுபவங்கள் அனைத்திலும் அன்பில்லையெனில் அதில் பயனில்லை. தர்மகாரியம், தசமபாகம் .ஈகை என செய்யும் அத்தனையும் அன்புக்கு அஸ்திபாரமிடவில்லையென்றால் அவை நம்புவதற்கு இல்லை.
அன்பு பிறரோடு கொண்டுள்ள தொடர்பிலே வெளிப்படும் . அன்பு நமது சிந்தையின் வெளிப்பாடுகளை சரியான கட்டுப்பாட்டு நிலைக்குள் வைத்துக் கொள்ளும். சுயத்தை ஒடுக்கி பிறரை உயர்வாக மதிப்பீடும். அன்பு ஒரு செயல். அன்பு கூறுங்கள் அன்பு செய்யுங்கள். இது ஒருசெயல் வினை. அன்பு எதிர் இருப்பவர்களின் அணுகுமுறை கண்டு தன்னை மாற்றிக்கொள்ளாது. அவர்கள் இப்படிச் செய்கிறார்களே என மாற்று சிந்தை கொள்ளாது தான் கொண்ட நல் பண்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கும். அடுத்தவர்களின் அழுத்தங்களை பதிவு செய்து கொள்ளாது. மாறாக அடுத்தவருக்கு நன்மையை பயக்கும் செயல்களைச் செய்து கொண்டே இருக்கும். அன்பு இது தேவனுடைய வரம். இது நித்தியமானது, நிரந்தரம், உணர்ச்சி கொப்பழிக்கும் சொற்களும் , நாவன்மையும் தற்காலிகங்களே. இவை மறைந்து போகும். அன்பு நிறைவானது. அன்பு நிறைவாக ஆளூகை செய்யும்போது தற்காலிகங்கள் வழிவிட்டு நிற்கும். அன்பே ஆண்டவருடைய தத்ரூப வெளிப்பாடு. அன்பில்லாதவன் தேவனை அறியான். விசுவாசம் அன்பு , நம்பிக்கை இம்மூன்றில் அன்பே பெரியது. விசுவாசமும், நம்பிக்கையும் மேல் நாடு சேர வழி வகுக்கும். ஆனால் மேல் நாட்டில் நிலைத்து நிற்கும் மொழி அன்பு ஒன்றே தான்
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

முக்கியங்களுக்கு முக்கியத்துவம்

சபையானது எச்சரிப்பும் கவனமும் பெற்று முடிவுகால சிந்தையோடு முக்கியமான காரியங்களுக்கு முக்கியம் கொடுத்து திருச்சபையிலும், திருப்பந்தியுலும், திருப்பணியிலும், பரிசுத்தத்தின், அன்பின் அச்சடையாளங்களாகவும் மரு உருவாக்கம் பெற்று கடவுள் நோக்கத்தை சபை மூலமாக உலகிற்கு சாட்சி பகர்தல்.

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.