முக்கியங்களுக்கு முக்கியத்துவம்மாதிரி
முடிவு சீக்கிரம்
முடிவு சீக்கிரம் 1 கொரிந்தியர் 10 : 11
உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்குஎச்சரிப்புண்டாக்கும்படிஎழுதப்பட்டிருக்கிறது
முன் நடந்தவையே இன்றும் இன்னும் நடக்கிறது ! எச்சரிப்பு பெற்றும் எதிர்வினையே செய்கிறோம். வாழ்வின் விழிம்பில் எச்சரிப்பு , முடிவு கால எச்சரிப்பு திரும்பவும் கொடுக்கப்படுகிறது, விழிப்போடிருந்து தப்பித்துக் கொள்வோம். எதிர் கொள்ளுகிறவையெல்லாம் எல்லா மனிதருக்கும் உரித்தான ஒன்று தான். ஜெயித்து வாழ முடிவு எடுக்கும்போது எதிர் கொள்கிற சோதனை பொதுவானதுதான். எனக்குமட்டும் ஏன்? என கேள்வியை விட்டு சோதனையில் நின்று சகித்து வென்று வாழ வழி உண்டா? என நோக்குங்கள், கடவுள் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் – திராணிக்கு மேல் சோதிக்கப்படபோவதில்லை –சோதனையினின்று தப்பித்துக்கொள்ள மார்க்கம் உண்டு, வழி உண்டு, நீங்கள் எச்சரிப்புப் பெற்று திரும்பப் புது வாழ்வு துவங்கும்போது உங்களுக்கு எற்படுகிற சோதனையினின்று வெளி வர கடவுளே பெலன் அருளுவார். இருளாய்த்தோன்றுகிற எல்கைகளில் வெளிச்சமாய் தோன்றுகிற நம்பிக்கையை விட்டு விடாதிருங்கள்.காண்பவை அனைத்தும் அநித்தியம். காணப்படாததே நித்தியம். சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் கடைசிகால போர்வீரர்! முடிவு கால சாட்சிகள். நல் ஆலோசனை பண்ணி யுத்தம்பண்ணுங்கள்.
வரங்களில் வித்தியாசங்களுண்டு அருளும் ஆவியானவர் ஒருவரே 1கொரிந்தியர் 12:4
சரீரம் ஒன்றே ! உறுப்புகள் வெவ்வேறானவை 1.கொரிந்தியர் 12: 12
இயேசுவே கர்த்தர் எனும் அறிக்கை நம்முள் சுயமாய் வந்ததல்ல . பரிசுத்த ஆவியானவர் நம்முள் வந்ததால் வெளிவந்த அறிக்கை இது. தொண்டாற்றும் முறைகள் அநேகம் ஆனால் ஆண்டவரே பணிவிடைக்குறியவர். பணிவிடை செய்ய திறனளிப்பவரும் அவரே. நெருப்பு காலில் பட்டால் சுடும். இது அறிவு, ஆனால், நெருப்பினால் கால் சுடப்படாதபடி பார்த்துக் கொள்வது ஞானம். இவ்விரண்டையும் தருபவர் ஆண்டவரே. அற்புத அடையாளாங்கள், போதகங்கள் பலபாஸை பேசுதல் இவைகளெல்லாம் அவரால் ஆட்கொள்ளப்பட்டதால் வருகின்ற வல்லமைகள் ! ஒரே ஞான ஆகாரத்தினாலே வேறுபட்ட நம்மை ஒரே சரீரமாக இணைத்தவரும் அவரே, அவரே அதனதன் இயக்கங்களுக்கு இடமளித்து அவரது நோக்கத்தை செயல்படுத்துகிறார். எனக்கு இந்த வரம் இல்லையே நான் அப்படி ஆக முடியவில்லையே எனக்கு கடவுள் குறைவாக வரம் தந்துள்ளாரே என மன மடிந்து போகத் தேவையில்லை. கடவுள் தனது மனவிருப்பத்தின்படி அவரவர்களுக்கு தகுந்த அளவு ஆற்றலை ஈந்தளித்திருக்கிறார். நாம் செயல்படும் முயற்சியிலே எல்லாரும் ஒன்றாகத் திறமையோடு செயல்படவேண்டும். கொடுத்ததில் முழு திறமையைக் காட்டி அவர் தந்த வரத்தை பயன்படுத்துவதே அவர் அமைத்த ஒன்றுபட்டு இயங்கும் சரீரத்துக்கு நாம் சேர்க்கும் புகழ். பெலவீனரைத் தாங்குவோம். இனைந்து அவர் நாமத்துக்கு மகிமை சேர்ப்போம்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சபையானது எச்சரிப்பும் கவனமும் பெற்று முடிவுகால சிந்தையோடு முக்கியமான காரியங்களுக்கு முக்கியம் கொடுத்து திருச்சபையிலும், திருப்பந்தியுலும், திருப்பணியிலும், பரிசுத்தத்தின், அன்பின் அச்சடையாளங்களாகவும் மரு உருவாக்கம் பெற்று கடவுள் நோக்கத்தை சபை மூலமாக உலகிற்கு சாட்சி பகர்தல்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.