சபையை ஓழுங்கு பண்ணுங்கள்மாதிரி

சபையை ஓழுங்கு பண்ணுங்கள்

3 ல் 3 நாள்

அழைப்பில் பிழைப்பா ? பிழைப்பே அழைப்பா ? 1.கொரிந்தியர் 9:7

முந்தி கடவுளால் கண்டு கொள்ளப்பட்டு, பிந்தி கடவுளைக் கண்டு கொள்பவர் அழைக்கப்பட்டவர்கள். இவர்களே அனுப்பப்பட்டவர்கள் – இவர்களே அப்போஸ்தல ஊழியர். பயனாளிகளால் அங்கீகரீக்கப்பட்டவர்களே இந்த பணிவிடையாளர்கள். இவர்களே கடவுளின் நற்கிரியையின் கைக்கிரியைகள் . இப்படிப்பட்ட கனமான ஊழியத்தை பெற்றவர்கள் பிறரது விமரிசனங்களுக்கு ஆளாகினாலும் தங்களது வாழ்வின் நற்கிரியையினாலே பிறரை வாயடைப்பவர்கள். தங்களது வாய்சாமர்த்தியத்தினாலே அல்ல. தோட்டப்பணியாளன் தோட்டத்தின் கனி கையில் ஒட்டப்படாதபடி பணி புரிவது எப்படி? மந்தை மேய்க்கிறவன் மந்தையிலே பெலனும் பெறுவான் - இது ஒரு புதிதான புதிர் அல்ல. சட்டத்தின் விளக்கமிது - போரடிக்கும் மாட்டின் வாயை கட்டாயாக ! அறுவடையில் அவருக்கு பங்கு உண்டு! உங்களுக்குள் நற்கிரியைகளை விதைக்கும் ஊழியருக்கும் நற்கிரியையின் அறுவடையில் பங்கு உண்டு. அழைப்பு பெற்ற ஊழியருக்கு கடவுள் அவர் தம்பணியிலே போஷிப்பை கொடுக்கிறார். ஆனால் பிழைப்பையே அழைப்பாக்கிக் கொண்டவர்கள் நற் பணிவிடைக்கு களங்கம் விளைவிப்பவராவார் . இவர்கள் நிமித்தம் ஊழியர்கள் விவாத மேடைக்கு வருவர். கடவுள் நாமம் தூஷிக்கப்பட்டுப்போய்விடும். விழிப்புள்ளவர்களாக சாட்சியுள்ள ஊழியத்தை அதில் பெறும் உரிமைகளை சுத்தமனசாட்சியோடே நிலைநாட்டி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பிழைப்பே அழைப்பாகாது. உரிமையின் வேள்வியே பொறுப்புதராது .! பொறுப்பு செய்தலுக்குள் உரிமை கூட்டி வழங்கப்படும்.

ஆலய ஊழியர்களும் ஆலய பொறுப்பும ? 1.கொரிந்தியர் 9:13

ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்கள்
ஆலய பணிவிடையாளர்களுக்கு ஆலய வழங்குதலே அவரது வருமானம். ஆலய சேகரிப்புகளில் அவர்களுக்கு பங்கு உண்டு. அக்காலத்து கிராமங்களில் வாத்தியார் உபதேசியார் என்ற சொல் கொண்ட ஆலய பணியாளர்களுக்கு சபை தனது முதல் ஈகையை தரும் _ அவர் கனப்படுத்தப்படுவார். சுவிசேஷப்பணிக்கு அதனல் பயன் பெற்ற மக்களே ஆதரவு. பவுலைபோல கூடை பின்னி பணி செய்தவர்களும் உண்டு. ஊழியத்தின் பயன்களை பலன்களை வேண்டாமென்று கூறும் தன்னார்வ ஊழியர்களும் உண்டு. பகுதி நேர உழியர்களும் உண்டு. மொத்ததில் ஊழியம் இலாபத்துக்காக அல்ல என உறுதி கொள்பவர்களே தரமான ஊழியர்கள் - கடவுளது பரிசு பொருளையே நாட்டமாகக்கொள்பவர்கள் . கடவுளே இவர்களுக்கு எல்லாவற்றுக்கும் எல்லாம். கடவுளை சார்ந்த பணியாளர்களும் கடவுளது ஆலயத்தை சார்ந்த பணியாளர்களும் கடவுளது பணிசெய்பவர்களே ! கடவுளை போதிப்பவர் எல்லாம் கடவுளுக்கே சொந்தம்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

சபையை ஓழுங்கு பண்ணுங்கள்

மக்கள் கூடி வாழ்வதே சபை. சச்சரவுகள் உரசல்கள் இவைகளின் நடுவில் ஒழுங்கு முறைகள் முக்கியம் .வெளி உலகில் காணப்படும் பாவமான காரியங்கள் சபையில் காணப்படுமாயின் அவைகள் உடனே அகற்ற முற்படவேண்டும். கலாச்சாரம் நடத்தை உறவு முறை தொடர்புகள் நல்லொழுக்கத்துடன் சீராக்கப்படவேண்டும். சபை மூலமாகவே தேசம் மாற்றம் பெறவேண்டும். ஒழுங்கு படுத்த வேண்டியவைகளை ஒழுங்கு படுத்துங்கள்.

More

நாம் இந்த திட்டத்தை வழங்குவதற்கு ஜெபராஜ் சி நன்றி கூற விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு செல்க: jebaraj1.blogspot.com