சபையை ஓழுங்கு பண்ணுங்கள்மாதிரி

சபையை ஓழுங்கு பண்ணுங்கள்

3 ல் 1 நாள்

சபையில் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது ஒன்று துன்மார்க்கம்
இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும்

இறுமாப்படைந்திருக்கீறீர்கள். 1 கொரிந்தியர் 5:2

சுற்றியுள்ள மக்களில் காணப்படும் துன்மார்க்க செயலுக்கு மிஞ்சிய துன்மார்க்க செயல் சபையில் உண்டென பவுல் கண்டித்திருக்கிறார்.மீறுகிறவர்கள் மிஞ்சுகிறவர்களக இருக்கிறார்கள். தவறுக்காக வருந்தினதாக இல்லை. இப்போதே, சபைக்கு களங்ம் விளைவிக்கும் நபர்களை முடியுமானால் புறக்கணிப்பு செய்யுங்கள்.கடவுளுடைய ஆவியின் துணை கொண்டு சபையை கூட்டுங்கள். கலந்திருக்கும் இந்த புளித்தமா சபை யின் நற்பெயருக்கு தீமை கற்பிக்குமென அறிந்து அவசர கால நடவடிக்கை எடுங்கள். சுத்திகரிப்பு நாளை குறியுங்கள். துப்புரவுபண்ணுங்கள். ஆசரிப்புகளை உண்மையாக, நேர்மையாகக் கொண்டு, கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக்குங்கள். துன்மார்க்கத்தோடு கலவாதிருங்கள். விபசாரக்காரர் பிடிவாதக்காரர்,குடிகாரர், ஊழல்புரிவோர், போராட்டக்காரர் இவர்கள் மத்தியில் உங்களை சுத்தவான்களாகக் காத்துக்கொள்ளுங்கள். அவர்களுடன் சம்பந்தம் கலவாதிருங்கள். முதலாவது உங்களது செயல்பாடுகளை சரி செய்யுங்கள்.

வழக்காட வெளிமன்றம் செல்லாதீர் 1 கொரிந்தியர் 6: 1

வழக்காடுவோம் வாருங்கள் என கூறும் கர்த்தர் உங்களுக்கு உண்டு - உங்கள் வழக்குகளை உங்களுக்குள்ளே சாட்சிப் பெற்ற மனிதர்களைக் கொண்டு தீர்ப்பு சொல்லி சமாதானப்படுத்துங்கள் – அநீதக்காரர் நிற்கும் தீர்ப்பாயத்துக்கு சென்று உங்கள் வழக்குகளை முறையீடாதீர்கள்- உங்களில் ஒருவர் பேரில் குற்றமென்றால் சகோதர சிநேகத்தோடு உங்களுக்குள்ளே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். இராஜ்யத்தின் புத்திரரே, இராஜாவின் பிள்ளைகளாக வாழப்பழகுங்கள் ! ஒருவரையொருவர் விசாரியுங்கள்.
முற்காலத்து சடங்குகளை திரும்ப சபைக்குள் அறிமுகம் செய்யாதிருங்கள். முற்காலத்திலே கிறிஸ்துவை அறியாதிருந்தீர்களே. இப்போதோ இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஒப்புரவாக்கப்பட்டவர்களானீர்கள். மேலானவைகளை நாடுங்கள். சுத்திகரிப்போடு சுத்தவான்களாக வாழுங்கள். ஒருவரையொருவர் மன்னியுங்கள். கிறிஸ்து நமக்காகச் செய்த இரட்சிப்பை இலவசமாய் பெற்றீர்களே ! இலவசமாய் மன்னிப்பு வழங்குங்கள். உங்களின் வழக்காடுதல் மன்னிப்பையும், ஒப்புரவாகுதலையும் திரளாகத் தரட்டும்..
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

சபையை ஓழுங்கு பண்ணுங்கள்

மக்கள் கூடி வாழ்வதே சபை. சச்சரவுகள் உரசல்கள் இவைகளின் நடுவில் ஒழுங்கு முறைகள் முக்கியம் .வெளி உலகில் காணப்படும் பாவமான காரியங்கள் சபையில் காணப்படுமாயின் அவைகள் உடனே அகற்ற முற்படவேண்டும். கலாச்சாரம் நடத்தை உறவு முறை தொடர்புகள் நல்லொழுக்கத்துடன் சீராக்கப்படவேண்டும். சபை மூலமாகவே தேசம் மாற்றம் பெறவேண்டும். ஒழுங்கு படுத்த வேண்டியவைகளை ஒழுங்கு படுத்துங்கள்.

More

நாம் இந்த திட்டத்தை வழங்குவதற்கு ஜெபராஜ் சி நன்றி கூற விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு செல்க: jebaraj1.blogspot.com