தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
பக்தி
பக்தி என்றால் என்ன என்பதுவே பலருக்குத் தெரியவில்லை. ஒரு இறையியல் அறிஞர் எளிமையாக பக்தி என்றால் என்ன என்று விளக்கம் தருகிறார்:
1. ஆவியானவரின் வழிகாட்டுதலின்படி தினசரி வேதாகமத்தை தியானித்துப் படிப்பது.
2. தனிப்பட்ட ஜெபம் உள்ள உண்மையான வாழ்வு. தினசரி துதித்தல், பாவ அறிக்கை, மன்னிப்புப் பெறுதல், கிருபைக்காக வேண்டுதல்.
3. சிறு குழுக்களாக ஒருவர் ஆத்துமாவுக்கு ஒருவர் அக்கறை காட்டி கணக்கு ஒப்புவிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
4. தினசரி பணியில் ஒழுங்கைக் கடைப்பிடித்தல். பரிசுத்த வழியில் கிருபையின் உதவியால் உண்மையாக நடத்தல். நமது மனம் இருதயம் மற்றும் சித்தம் ஆகியவற்றை கடவுளின் மகிமைக்கு என்று அர்ப்பணிப்பதை உலகம் எப்படி எடுத்துக் கொண்டாலும் நாம் அதில் உண்மையாக இருக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் பக்தி என்பது பைத்தியக்காரத்தனம் என்று கருதப்படுகிறது. பொய் சொல்லாதவன் பிழைக்கத் தெரியாதவன் என்னும் கருத்தே எங்கும் பிரபலமாக இருக்கின்றது. ஆனால் கடவுளின் வார்த்தையோ புடமிடப்பட்ட சுத்தமான வார்த்தைகளாக இருக்கின்றன. தாவீதின் காலத்தில் மட்டுமல்ல நமது காலத்திலும் எல்லாக் காலத்திலும் மாறாதது கடவுளின் வார்த்தையாகிய வேதமாகும். உலகத்தில் பக்தியில்லாத சூழலைப் பார்க்காமல் எல்லாக் காலத்துக்கும் உண்மையுள்ள வேதாகமத்தை நாம் பின்பற்ற வேண்டும்.
சிந்தனை : பக்தி, வெளிப்புறம் தெரியும் அடையாளங்களால் அல்ல உள்ளே இருக்கும் ஆண்டவரின் வார்த்தைகளிலேயே இருக்கின்றது.
ஜெபம் : ஆண்டவரே பக்தியும் உண்மையுமுள்ள உம் பிள்ளையாக என்னை எப்போதும் காத்துக் கொள்ளும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org