தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
பாதுகாப்பு வளையம்
லாப்ஸ்டர்கள் எனப்படும் கடல் நண்டு குடும்பத்தைச் சேர்ந்த உயிரினத்தின் உடலில் ஓடு இருக்கும். இந்த ஓட்டை அவ்வப்போது இவைகள் விட்டுவிட வேண்டும். பின்னர் இன்னொரு ஓடு அதன் இடத்தில் வளர்ந்துவிடும். அவைகள் வளர்ந்து வரும்போது இந்த ஓடு தான் அவைகளைப் பிற உயிரினங்களிடமிருந்து பாதுகாக்கும். ஓட்டைவிட பெரியதாக வளரும் போது அவைகள் ஓட்டை விட்டு வெளியே வர வேண்டும். உள்ளேயே இருந்தால் அவற்றின் பாதுகாப்பு ஓடு அவற்றின் சவப்பெட்டியாக மாறிவிடும். பழைய ஓட்டை விட்டுவிட்டு அடுத்த ஓடு வளரும் வரை அவைகள் காத்திருக்கும் நேரத்தில் ஆபத்துக்கள் வர அதிகம் வாய்ப்புக்கள் உண்டு. ஓடு இல்லாமல் வாழும் அந்த காலம் லாப்ஸ்டர்களுக்குப் பயம் நிறைந்த காலமாக இருக்கும். கடலின் அடியில் இருக்கும் நீர் சுழற்சி இவற்றை அடித்துக் கொண்டு போய் மீன்களுக்கு உணவாக அவற்றை விட்டுவிடலாம். சில நேரங்களில் லாப்ஸ்டர்கள் ஓடுகளுக்கிடையேயான காலத்தில் இறந்து போய்விடும். ஆனால் ஓட்டுக்குள்ளே இருந்தாலும் இறந்து போகத்தான் செய்யும்.
நமது வாழ்வில் பாதுகாப்பாக இருப்பது கடவுளின் கரம் தான். தாவீது கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் என்று ஜெபிக்கிறார். நமது கண்களை நாம் நம்மை அறியாமலேயே பாதுகாப்போம். குழந்தைகளைக் கொஞ்சும் போது கண்ணே மணியே கண்ணின் மணியே என்று கொஞ்சும் அளவுக்கு கண் மிக முக்கியமானது. ஏதாவது ஆபத்து வருவது போல் இருந்தால் இமைகள் தாமாகவே மூடிக் கொள்கின்றன. முகத்துக்கு ஏதாவது தாக்குதல் வந்தால் நாம் கண்களைப் பாதுகாக்கிறோம்.
சிந்தனை : நாம் கடவுளின் கண்மணியாக அவரது இமைக்குள் இருக்கிறோமா?
ஜெபம் : ஆண்டவரே இந்த உலகின் ஆபத்துக்களைப் பார்க்கும் போது உம்மை அல்லாமல் எனக்கு வேறு பாதுகாப்பு இல்லை என்று அறிகிறேன். கண்மணியைப் போல என்னைக் காத்தருளும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org