தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
தேவை ஒரு சூப்பர் ஸ்டார்
சினிமாக்களில் மக்களோ, அழகான பெண்களோ ஆபத்தில் இருக்கும் போது சூப்பர் மேன், எம் ஜி ஆர், ஜேம்ஸ் பாண்ட் எப்படியாவது வந்து ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றிவிடுவார்கள். சகாயர் என்பதற்கு உதவி செய்பவர் என்று அர்த்தம். இந்த உலகத்தில் எல்லா நேரங்களிலும் உதவி செய்பவர்கள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. நாம் தனிமையாக இருக்கலாம் அல்லது மற்றவர்கள் நம்மை தனியே விட்டுவிட்டுச் செல்லலாம். ஆனால் தாவீது தனது நிலையைச் சொல்லி கடவுளே என்னை விட்டுத் தூரமாகாதேயும். ஆபத்து என் அருகில் இருக்கின்றது. எனக்கு உதவி செய்யவும் யாருமே இல்லை என்று ஜெபிக்கிறார். எனக்கு உதவி செய்ய வேகமாக வாரும் என்று அழைக்கின்றார். மேலும் தனது ஆபத்துக் காலத்தில் அவர் செய்த பொருத்தனைகளைச் செலுத்தி மக்கள் முன்னிலையில் கடவுளைத் துதிப்பேன் என்றும் சொல்கிறார். அவரது விசுவாசம் அவருக்கு இந்த வரிகளை எழுதத் தூண்டியிருக்கின்றது.
சிங்கம், கரடி, ராட்சதன், சவுல் அரசன், தனக்கு போட்டியாக அரசனான மகன் அப்சலோம், பெலிஸ்திய அரசர்கள் போன்ற பல வடிவங்களில் ஆபத்து அவருக்கு அருகில் இருந்தது. ஆனால் எல்லாவற்றிலும் இருந்து கடவுள் அவரைக் காப்பாற்றினார். தாவீதும் தான் செய்த பொருத்தனைகளைக் கடவுளுக்குப் படைத்து மக்கள் முன்பதாகக் கடவுளை மகிமைப்படுத்துகின்றார். நமக்கும் உதவியாக மட்டுமல்ல பாதுகாப்பாகவும் கடவுள் இருக்கின்றார்.
சிந்தனை : நமக்கு உதவிக்கு யாரும் இல்லாமல் இருக்கும் போது தான் கடவுளின் உதவி எவ்வளவு மேலானது என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
ஜெபம் : ஆண்டவரே எனக்கு ஆபத்து வராமல் காத்துக் கொள்ளவும், ஆபத்தில் எனக்கு உதவியாக இருக்கவும் உம்மை மட்டுமே நம்பியிருக்கிறேன். என்னை விட்டுத் தூரமாகதேயும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org