தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 22 நாள்

அக்கிரமன்

தாவீது தனது நீதியைப் பற்றியும் குற்றமில்லாமையையும் பற்றி பல சங்கீதங்களில் பாடியிருக்கிறார். ஆனால் தனது அக்கிரமம், பாவம், மீறுதல் பற்றியும் பல சங்கீதங்களில் பாடியிருக்கின்றார். கடவுள் மட்டுமே மன்னிக்கும் அளவுக்குப் பெரியது என் அக்கிரமம். அவரது இரக்கம் மட்டுமே எனக்கு மன்னிப்புத் தரும் என்று சொல்லும் அளவுக்கு எனது நல்ல செயல்கள் இருக்கின்றன என்கிறார் தாவீது.

தயவு கிருபை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தனது பாவங்களை மன்னிக்கும்படி மன்றாடுகிறார் தாவீது. தயவு என்பது தண்டனை கிடைக்க வேண்டிய ஆளுக்குக் கிடைக்கும் மன்னிப்பு. தனது இளவயதின் பாவங்களையும் மீறுதல்களையும் நினைவுகூர்ந்து, அவற்றுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காமல் செய்யும் என்கிறார். கிருபை என்பது தகுதி இல்லாத ஒருவருக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். மன்னிப்பைப் பெற்றிருந்தாலும் பழைய குற்றங்கள் காரணமாக புதிய ஆசீர்வாதங்களுக்குத் தகுதி இல்லாதவனாக இருந்தாலும் எனக்கு உமது ஆசீர்வாதங்களைத் தாரும் என்று கேட்கிறார் தாவீது. 

கடவுளின் இரக்கங்களும், காருணியங்களும் அநாதிகாலமுதல் அதாவது உலகங்கள் உருவாகி காலங்கள் உருவாகுவதற்கு முன்பிருந்தே இருக்கின்றது. அப்படியே கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். இந்த இரு உண்மைகளும் தாவீதுக்கு வரலாற்றிலிருந்தும், வேதாகமத்திலிருந்தும், அவரது அனுபவங்களிலிருந்தும் தெரிந்திருந்ததால் தான் தைரியமாக அவர் கடவுளிடம் மன்னிப்புக்காக ஜெபிக்கிறார். 

சிந்தனை : நமது பக்தியையும் அக்கிரமங்களையும் ஒப்பிட்டால் கடவுளால் மட்டுமே நம்மை மன்னிக்க முடியும்.

ஜெபம் : என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். ஆமென்.

நாள் 21நாள் 23

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org