தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
அசையேன்
பத்திரிக்கையாளர் ஒருவர் விசுவாசியுடன் தினசரிப் பத்திரிக்கை வாங்கச் சென்றிருந்தார். விசுவாசி ஒரு பேப்பர் வாங்கிவிட்டு அதை விற்றவனுக்கு நன்றி சொன்னார். விற்றவனோ அதைக் கண்டு கொள்ளவில்லை. நாகரீகம் தெரியாதவனா இருக்கிறானே என்றார் நண்பர். வருஷக்கணக்காக இவனிடமிருந்து தான் பேப்பர் வாங்குகிறேன் அவன் ஒரு நாளும் நன்றி சொன்னதற்குப் பதிலே சொன்னதில்லை என்றார் விசுவாச நண்பர். ஏன் இன்னும் அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் பத்திரிக்கையாளர். நான் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ஏன் அவனைத் தீர்மானிக்க விட வேண்டும்? என்று பதிலாகக் கேட்டார் விசுவாசி.
பிறரது நடக்கையால் தனது நல்ல செய்கைகளை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது தான் உறுதியான விசுவாசியின் அடையாளமாகும். இதையே தாவீது சொல்கிறார், ’இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை’ என்று. கர்த்தருடைய பர்வதம் என்பது உறுதியானதாகும் அதில் யார் ஏறமுடியும் என்று ஒரு பட்டியலையே கொடுக்கிறார் தாவீது. உத்தமன், நீதியை நடப்பிக்கிறவன், மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன், புறங்கூறாமலும், தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான், ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன், கர்த்தருக்குப் பயந்தவர்களை கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான், தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
சிந்தனை : அசைக்கப்பட முடியாத உறுதி நமது நல்ல செயல்களில் இருக்க வேண்டும்.
ஜெபம் : ஆண்டவரே உமது பர்வதத்தில் ஏற, அதில் தங்க எனக்கு அசையாத நற்குணங்களைத் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org