திட்ட விவரம்

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 ல் 4 நாள்

இயேசுவின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு, அவர் நாற்பது நாட்கள் உணவு இல்லாமல் வனாந்தரத்திற்குச் செல்கிறார். இஸ்ரவேலின் நாற்பது ஆண்டுகள் அவர்கள் முணுமுணுத்து, யாவேவுக்கு விரோதமாக கிளர்ந்தெழுந்த பயணத்தை வனாந்தரத்தின் மூலம் மீண்டும் செய்கிறார். ஆனால் இஸ்ரவேல் தோல்வியடைந்த இடத்தில், இயேசு வெற்றி பெறுகிறார். சோதிக்கப்படும்போது, இயேசு தனது தேவ அடையாளத்துடன் தனக்கு சேவை செய்ய மறுத்து, அதற்குப் பதிலாக மனிதகுலத்தின் துன்பங்களோடு அடையாளம் காட்டுகிறார். அவர் எல்லாவற்றிலும் யாவே வை நம்புகிறார், மேலும் இஸ்ரவேல் மற்றும் எல்லா மனிதகுலத்தின் தோல்விகளையும் மாற்றியமைப்பவர் என்பதை நிரூபிக்கிறார்.

இதற்குப் பிறகு, இயேசு தனது சொந்த ஊரான நாசரேத்துக்குத் திரும்புகிறார். அவர் ஜெப ஆலயத்திற்கு வருகை தருகிறார், எபிரெய வேதாகமத்திலிருந்து வாசிக்க அழைக்கப்படுகிறார். அவர் ஏசாயாவின் புத்தகத்தைத் திறந்து, வாசித்து, "நீங்கள் கேட்பதனால் இன்று இந்த வேதவாக்கியங்கள் நிறைவேறியுள்ளது." என பேசுவதற்கு முன் கீழே அமர்ந்திருக்கிறார். கூடியிருந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர், அவர்களுடைய கண்களை அவரிடமிருந்து விலக்கி வைக்க முடியவில்லை. ஏசாயா பேசியது அவர் பற்றித்தான் – தரித்திரருக்கு சுவிஷேசத்தைக் கொண்டு வந்தவர், நோயுற்றவர்களைக் குணப்படுத்தியவர், அவர்களுடைய அவமானத்தின் வெளிப்பாடுகளிலிருந்து விடுவித்து அபிஷேகம் செய்யப்பட்டவர். தவறு என்ன என்பதைத் திருத்தி, உலகத்தை மீண்டும் சரியானதாக்குவதற்கு அவர்தான் அவருடைய தலைகீழான ராஜ்யத்தை ஸ்தாபிப்பார்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்