BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி
இதன் அடுத்த பகுதியில், லூக்கா சரியான நேரத்தைக் காட்டுகிறார். யோவான் இப்போது யோர்தான் நதியில் ஒரு மனந்திரும்புதல் ஊழியத்திற்கு தலைமை தாங்கும் ஒரு தீர்க்கதரிசி, மேலும் ஏராளமான மக்கள் ஞானஸ்நானம் பெற வருகிறார்கள்–– ஏழைகள், பணக்காரர்கள், ஆயக்காரர்கள் மற்றும் போர் வீரர்கள் கூட. இந்த மக்கள் அனைவரும் ஒரு புதிய வாழ்க்கைக்கு தங்களை அர்ப்பணிக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு முன்பு, இதே நதியைக் கடந்து இஸ்ரவேல் தங்கள் நிலத்தை சுதந்தரிக்க வந்தனர், தேவன் அவர்களுக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தார். அவருக்குத் தனியாக சேவை செய்யவும், அண்டை வீட்டாரை கனம் பண்ணவும், ஒன்றாக நீதியைப் பெறவும் அவர்கள் அழைக்கப்பட்டனர். பழைய ஏற்பாட்டில் உள்ள சம்பவங்களிலிருந்து அவர்கள் இதைத் திரும்பத் திரும்பத் தவறவிட்டார்கள் என்பதை நாம் அறிவோம், எனவே யோவான் மீண்டும் தொடங்குவதற்கு இஸ்ரவேலை அழைக்கிறார்––யோர்தான் நதி வழியாக திரும்பிச் சென்று தங்கள் தேவனிடம் மறுஅர்ப்பணிப்புடன் வரவேண்டும். இந்த மனந்திரும்புதல் ஊழியம் தேவன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதற்கு அவர்களைத் தயார்படுத்தும்.
இப்போது யோர்தானில் இயேசு தனது ராஜ்ய வேலையைத் தொடங்கத் தயாராக இருக்கிறார். இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார், அவர் ஜலத்திலிருந்து வெளியே வரும்போது, வானம் திறந்து, வானத்திலிருந்து ஒரு குரல், “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று கூறுகிறது. இப்போது இங்கே தேவனின் வார்த்தைகள் எபிரெய வேதாகமத்தின் எதிரொலிகளால் நிரம்பியுள்ளன. இந்த முதல் வரி சங்கீதம் 2-இலிருந்து வந்தது, அங்கு எருசலேமில் ஒரு ராஜா வந்து தேசங்களிடையே தீமையை எதிர்கொள்வார் என்று தேவன் வாக்குதத்தம் கொடுத்தார். அடுத்த வரி ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து வந்தது, அது மேசியாவைக் குறிக்கிறது, அவர் இஸ்ரவேலின் சார்பாக ஒரு வேலைக்காரராக துன்பப்பட்டு இறப்பார்.
இதற்குப் பிறகு, இயேசுவின் வம்சத்தை தாவீது (இஸ்ரவேலின் ராஜா), ஆபிரகாம் (இஸ்ரவேலின் தந்தை), ஆதாம் (மனிதகுலத்தின் தந்தை) மற்றும் தேவன் (அனைவரையும் படைத்தவர்) என லூக்கா பின்னாலிருந்து ஆராய்கிறார். இதில், இஸ்ரவேலை மட்டுமல்ல, மனிதகுலத்தையும் மீட்டெடுக்க தேவனிடமிருந்து வந்த மேசியானிய ராஜாவாக இயேசுவைப் பார்க்க லூக்கா நமக்கு உதவுகிறார்.
இந்த திட்டத்தைப் பற்றி
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com