BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி
லூக்காவின் அடுத்த அதிகாரங்களுக்கு வரும்போது, ஏசாயாவின் புத்தகத்திலிருந்து வாசித்தபின் இயேசுவின் வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்வோம். ஏசாயா குறிப்பிடும் எல்லாம் இயேசுவைப் பற்றியதாகும். அவர் அபிஷேகம் செய்யப்பட்டவர், தரித்திரருக்கு சுவிஷேசத்தைக் கொண்டு வருவார், இருதயம் நொறுங்குண்டவர்களைகுணமாக்குவார், சிறைப்பட்டவர்களை விடுவிப்பார்.
"இன்று இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று இயேசு கூறினார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வரும் சம்பவங்கள் இயேசுவின் சுவிஷேசம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது. லூக்காவின் இந்த பகுதியில், சோர்வடைந்த மீனவர்களுக்கு இயேசு அற்புதம் செய்தது, குஷ்டரோகியைக் குணப்படுத்தியது, ஒரு முடக்குவாதமுள்ளவரை மன்னிப்பது மற்றும் சமூக ரீதியாக வெறுக்கத்தக்க ஆயக்காரரை தனது ஊழியத்தில் சேர்ப்பது போன்ற நற்செய்தி தெரிகிறது. இவை அனைத்தும் மதப் பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் அதற்கு மேலாக, ஓய்வுநாளில் இயேசு சூம்பின கையுடையவரைக் குணமாக்குகிறார். இப்போது வேதபாரகரும் பரிசேயரும் இயேசு ஏன் தங்கள் யூத ஓய்வு நாள் சட்டங்களை மீறுகிறார், இதுபோன்ற ஏழைகளைத் தேர்வு செய்து சுதந்திரமாக அவர்களோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் இயேசு துன்பப்பட்டவர்களுக்காக எழுந்து நின்று, யூதத் சட்டத்தின் இருதயத்தையும், அவருடைய தலைகீழான ராஜ்யத்தின் தன்மையையும் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் விளக்குகிறார். அவர், ஆரோக்கியமானவர்களை அல்ல, நோயுற்றவர்களைக் கவனிக்கும் ஒரு மருத்துவரைப் போன்றவர் என்று அவர்களுக்குச் சொல்கிறார். ஓய்வு நாள் என்பது காயப்பட்டவர்களை சொஸ்தமாக்குவதாகும் என்று அவர் தெளிவுபடுத்துகிறார். இயேசு ஒரு மீட்பர். அவர் சமூகத்தில் மேம்பட்டவர்களை ஊழியத்திற்கு நியமிக்கவில்லை; மாறாக, அவர் துன்பப்பட்டவர்களை மீட்டெடுக்கிறார். துன்பப்பட்டவர்கள் அவரைப் பின்பற்றும்போது, அவர்கள் மீட்கப்பட்டு அவருடைய ஊழியத்தில் சேருகிறார்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com