BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 ல் 31 நாள்

அப்போஸ்தலருடைய நடபடிகளின் அடுத்த பகுதியில், இயேசுவின் சுவிஷேசத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு யூதரல்லாத கிறிஸ்தவர்கள் யூதமுறைக்கு மாற வேண்டும் (விருத்தசேதனம், ஓய்வு நாள் அனுசரித்தல் மற்றும் கோஷர் உணவுச் சட்டங்களை கடைப்பிடிப்பதன் மூலம்) என்று கோரும் சில யூதக் கிறிஸ்தவர்கள் இருப்பதாக பவுல் கண்டுபிடிக்கிறான். ஆனால் பவுலும் பர்னபாவும் தீவிரமாக இதற்கு உடன்படவில்லை, அவர்கள் விவாதத்தை தீர்க்க எருசலேமில் உள்ள ஒரு தலைமைக் குழுவிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கே இருக்கும்போது, பேதுரு, பவுல் மற்றும் யாக்கோபு (இயேசுவின் சகோதரர்) எல்லா தேசங்களையும் உள்ளடக்குவதே தேவனின் திட்டமாக எப்போதும் இருந்ததைக் காட்டுகிற வேதவசனங்களையும் அவர்களின் அனுபவங்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள். சபை பின்னர் ஒரு முக்கிய முடிவை எடுத்து, யூதரல்லாத கிறிஸ்தவர்கள் புறமத ஆலய பலியிடுதல்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும் என்றாலும், அவர்கள் ஒரு இனரீதியான யூத அடையாளத்தை பின்பற்றவோ அல்லது தோராவின் சடங்கு சட்டங்களுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் கீழ்ப்படியவோ தேவையில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இயேசு யூத மேசியா, ஆனால் அவர் எல்லா தேசங்களின் உயிர்த்தெழுந்த ராஜாவும் ஆவார். தேவனுடைய ராஜ்யத்தில் உறுப்பினர் என்பது இனத்தையோ சட்டத்தையோ அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக இயேசுவை விசுவாசித்து கீழ்ப்படிவதை அடிப்படையாகக் கொண்டது.

வேதவசனங்கள்

நாள் 30நாள் 32

இந்த திட்டத்தைப் பற்றி

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com