BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி
யூதர்களில் பலர் தங்கள் மேசியாவைப் பற்றி குறிப்பிட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். அவர்களது வாக்குத்தத்தம் அளிக்கப்பட்ட ராஜா சிங்காசனத்தில் ஏறி ரோம ஒடுக்குமுறையிலிருந்து மீட்பார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, இயேசு வந்து சமுதாயத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் கூட்டு கொள்ளவும், தாழ்மையுடன் தேவனுடைய ராஜ்யத்தை அறிவிக்கவும் ஆரம்பித்தபோது, சிலர் அவரை மேசியாவாக அங்கீகரிக்கவில்லை, அவருடைய ஆட்சியைக் கடுமையாக எதிர்த்தனர். முரண்பாடாக, இயேசுவின் ஆட்சியை நிலைநாட்ட தேவன் பயன்படுத்திய கருவிதான் அவர்களின் எதிர்ப்பு, சிலுவையில் அறையப்படுதல், உயிர்த்தெழுதல் மற்றும் பரலோகம் ஏறுதல் ஆகியவற்றின் மூலம், யூதர்கள் மற்றும் அனைத்து தேசங்களின் ராஜாவாக இயேசு பரலோகத்தில் சிங்காசனத்தில் வீற்றிருந்தார். இந்த அடுத்த பகுதியில், தெசலோனிக்கா, பெரியா மற்றும் ஏதென்ஸில் இந்த செய்தியைப் பிரசங்கித்த பவுலின் அனுபவத்தைப் பற்றி லூக்கா சொல்கிறார்.
தெசலோனிக்காவில் இருந்தபோது, மேசியா துன்பப்பட வேண்டும், ராஜாவாக ஆட்சி செய்ய மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் எப்போதும் சொன்னார்கள் என பவுல் எபிரெய வேதாகமத்திலிருந்து விளக்கினான். பண்டைய தீர்க்கதரிசியின் விளக்கத்திற்கு இயேசு பொருந்துகிறார் என்று பவுல் சுட்டிக்காட்டினான், மேலும் பலரும் தூண்டப்பட்டனர். பவுலுக்கு விசுவாசிகள் அதிகரித்தபோது, பொறாமை கொண்ட சில யூதர்கள், பட்டணம் முழுவதையும் தலைகீழாக மாற்றிவிட்டு, ஒரு புதிய ராஜாவை அறிவித்ததாக குற்றம் சாட்டுவதற்காக பட்டணத்தில் செல்வாக்குள்ளவர்களை தூண்டினர். ரோம காலனிகள் பேரரசரை வருத்தப்படுத்த விரும்பவில்லை, எனவே இது பவுலைக் கொல்லக்கூடிய அளவிலான மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஆகும். இயேசுவின் ராஜ்யத்தைப் பற்றிய சுவிஷேசத்தை பெரியா பட்டணத்திற்குப் பிரசங்கிக்க பவுல் தெசலோனிக்காவிலிருந்து அனுப்பப்பட்டான். அங்கே இருந்தபோது, கேட்க, படிக்க, அவனுடைய செய்தி எபிரெய வேதாகமத்துடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த ஆவலுடன் இருந்த ஆண்களையும் பெண்களையும் பவுல் கண்டான். பெரியாவில் பலர் இயேசுவை விசுவாசிக்க தொடங்கினர், ஆனால் தெசலோனிக்காவைச் சேர்ந்த யூதர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக பெரியாவுக்குச் சென்றபோது பவுலின் பணி பாதியில் தடைசெய்யப்பட்டது. இது பவுல் ஏதென்ஸுக்குச் செல்ல வழிவகுத்தது, அங்கு அவர்களின் “அறியப்படாத தேவனின்” உண்மையான அடையாளத்தையும் இயேசுவின் உயிர்த்தெழுதலின் முக்கியத்துவத்தையும் விளக்கும் யோசனைகளின் மைய சந்தையில் நுழைந்தான்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com