BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி
இதன் அடுத்த பகுதியில், ஸ்தேவானின் துயரமான கொலையினால் இயேசுவின் சுவிஷேசத்தை நிறுத்த முடியாது என்று லூக்கா காட்டுகிறார். உண்மையில், இந்தத் துன்புறுத்தல் எருசலேமுக்கு வெளியே சீடர்களில் பலரை யூதரல்லாத சுற்றியுள்ள யூதா மற்றும் சமாரிய பகுதிகளுக்கு சிதறப்படும் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. சீஷர்கள் வெளியே செல்லும்போது, இயேசு செய்யும்படி கட்டளையிட்டதைப் போலவே, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் செய்தியையும் அவர்களுடன் கொண்டு வருகிறார்கள். சீஷர்கள் இயேசுவின் சரித்திரத்தை அறிவிக்கிறார்கள், மக்கள் அற்புதமாக விடுவிக்கப்பட்டு குணமடைகிறார்கள். ஒரு புகழ்பெற்ற மாய வித்தைக்காரன், தேவனின் வல்லமை தன்னுடைய வல்லமையை விட மிகப் பெரியது என்பதைக் காண்கிறான், எத்தியோப்பியா ராணியின் அரசவை அதிகாரி ஞானஸ்நானம் பெறுகிறான். ராஜ்யம் பரவி வருகிறது, தேவனின் திட்டத்தை எதுவும் தூக்கி எறிய முடியாது, இயேசுவைப் பின்பற்றுபவர்களை சிறையில் அடைக்க அவர்களது சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றும் ஒரு மதத் தலைவனான சவுல் என்ற ஒரு மனிதனாலும்கூட முடியாது.
சிறையில் அடைக்க அதிகமான சீஷர்களைத் தேடி சவுல் தமாஸ்குவுக்குப் பயணிக்கையில், அவன் குருடாகும்படி ஒளிரும் ஒரு ஒளியும், வானத்திலிருந்து ஒரு குரலும் நிறுத்துகின்றன. ஏன் தன்னை துன்பப்படுத்துகிறான் என்று இயேசு தானே சவுலைக் கேட்கிறார். இந்த எதிர்கொள்ளலும் தொடர்ந்து வரும் அற்புதமான அறிகுறிகளும் இயேசு உண்மையில் யார் என்பதைப் பற்றி சவுலின் மனதை தீவிரமாக மாற்றுகின்றன. சவுலின் திட்டங்கள் தலைகீழாக மாறிவிட்டன. தமாஸ்குவில் இயேசுவின் சீஷர்களைத் துன்புறுத்துவதற்குப் பதிலாக, சவுல் அவர்களில் ஒருவராகி, உடனடியாக இயேசுவை தேவனுடைய குமாரனாக அறிவிக்கத் தொடங்குகிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com