BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்மாதிரி
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F1280x720.jpg&w=3840&q=75)
லூக்காவின் இந்த அடுத்த பகுதியில், இயேசு தனது ராஜ்யம் இந்த உலகத்தின் சூழ்நிலைகளை எவ்வாறு தலைகீழாக மாற்றுகிறது என்பதை விளக்கும் ஒரு சம்பவமாக சொல்கிறார், அது இப்படியே செல்கிறது.
ஆடம்பரமான ஆடைகளை அணிந்து, ஒரு சொந்த வீட்டைக் கொண்ட ஒரு ஐசுவரியவான் இருக்கிறான். லாசரு என்ற காயப்பட்ட ஒரு தரித்திரன் இருக்கிறான், அவன் ஐசுவரியவானின் வாசலுக்கு வெளியே ஒவ்வொரு நாளும் தன் பசியை ஆற்ற, மேஜையிலிருந்து விழும் சிறு துண்டுகளைத் தேடுகிறான். ஆனால் ஐசுவரியவான் அவனுக்கு எதையும் கொடுக்கவில்லை, கடைசியில் அவர்கள் இருவரும் இறக்கிறார்கள். லாசரு நித்திய ஆறுதலளிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான், அதே நேரத்தில் ஐசுவரியவான் வேதனைக்குள்ளான இடத்தில் எழுந்திருக்கிறான். ஏதோ ஒரு வகையில் ஐசுவரியவான் லாசருவை காண முடியும், அப்படிப் பார்த்தவுடன் அவனைக் குளிரப் பண்ணுவதற்கு லாசரு தண்ணீர் துளிகளை வழங்க அனுப்பப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறான். ஆனால் ஐசுவரியவானுக்கு இது நடக்காது என்று கூறப்படுகிறது, மேலும் பூமியில் அவன் வாழ்ந்த வாழ்க்கை, லாசருவுக்கு அவனது உதவி தேவைப்பட்டபோது அவன் எப்படி ஆடம்பரமாக வாழ்ந்தான் என்பதை நினைவுபடுத்துகிறார். எனவே ஐசுவரியவான் லாசருவுக்கு பதிலாக தன்னை பூமியிலுள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பும்படி கெஞ்சுகிறான், எனவே இந்த வேதனையான இடத்தைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்யலாம். ஆனால் எபிரேய தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களில் அவனுடைய குடும்பத்திற்குத் தேவையான அனைத்து எச்சரிக்கைகளும் உள்ளன என்று அவனுக்கு கூறப்படுகிறது. லாசரு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தால், அது நிச்சயமாக அவனுடைய குடும்பத்தினரை நம்ப வைக்கும் என்று ஐசுவரியவான் வாதிடுகிறான். ஆனால் அது வேலை செய்யாது என்று அவனிடம் கூறப்பட்டது. மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்.
இந்த சம்பவத்தை சொன்னபின், மற்றவர்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் பற்றி இயேசு எச்சரிக்கிறார். இந்தத் துன்பங்களைத் தவிர்ப்பதற்காக, ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ளவும், அந்த அளவுக்கு இல்லாதவர்களைத் திருத்தவும் அனைவருக்கும் அவர் கற்றுக்கொடுக்கிறார். மனந்திரும்ப கேட்கிறவர்கள் மன்னிக்கப்பட வேண்டும், அந்த மன்னிப்பு மீண்டும் மீண்டும் தேவைப்பட்டாலும் கூட. இயேசு இரக்கமுள்ளவர். மிகவும் தாமதமாகிவிடும் முன் அனைவரும் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இயேசு துன்பங்களை மாற்றுவதற்கு வந்தார், ஆனால் எப்படி? அவர் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறார், அதைப் பெறும் அனைவருக்கும் மன்னிப்பை தியாகமாக அளிக்கிறார். அதேபோல், அவரைப் பின்பற்றுபவர்கள் மற்றவர்களுக்கு கற்பிப்பதும் மன்னிப்பை வழங்குவதேயாகும்.
இயேசுவின் சீடர்கள் இதையெல்லாம் கேட்டு, இயேசுவின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்குத் தேவையான அளவு தேவன் மீது விசுவாசம் இல்லை என்பதை உணர்கிறார்கள், எனவே அவர்கள் அதிக விசுவாசத்தைக் கேட்கிறார்கள்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F1280x720.jpg&w=3840&q=75)
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய பைபிள் ப்ராஜெக்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையதளத்தை காண அழைக்கிறோம்: www.bibleproject.com