நம் மத்தியஸ்தராகிய இயேசுவை பின்பற்றுதல்மாதிரி

Following Jesus Our Mediator

7 ல் 7 நாள்

நம் மத்தியஸ்தராகிய இயேசு

இந்த வாரம் முழுவதும், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பயப்படுவோர், பாவிகள், மற்றும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அனைவரிடமும் இயேசு சென்றடைவதை நாம் பார்த்து வந்தோம். தன் மரணமும் உயிர்தெழுதலுமான உச்சக்கட்ட மத்தியஸ்த செயலை செய்து, நாம் தேவனுடன் ஒரே முறையாக ஒப்புரவாகும்படி, இயேசு நம் பாவங்களுக்கான தண்டனையை சுமந்துக் கொண்டார்.

ஆப்பிரிக்க ஆய்வு வேதாகமத்தில் "இயேசு, மனுக்குலத்தின் மத்தியஸ்தர்" என்ற தலைப்பின் கீழ் உள்ள குறிப்பில் இப்படியாக சொல்லப் படுகிறது:

ஆப்பிரிக்க கலாச்சாரங்களில் காணப்படும் மத்தியஸ்தம் என்பது முரண்பாடுகளை சரிசெய்வதில் ஒரு முக்கியமான கருவி. மரபுப்படி, அனேக ஆப்பிரிக்க திருமணங்கள் ஞானப் பெற்றோர் முன்னிலையில் ஒழுங்கு செய்யப்பட்டன. இடையீடு தேவைப்படும் பிரச்சனை ஏதாவது ஏற்பாட்டால், அந்த தம்பதியினர் இந்த மக்களிடம் தான் செல்வார்கள். இந்நாட்களில் சமுதாயங்களில் முரண்பாடு ஏற்பட்டால், இரண்டு சாராரையும் சேர்ந்த பெரியவர்கள் ஒரு மூன்றாம் தரப்பினர் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சந்திப்பார்கள். தேசங்கள் போரிடும் போது, விரோதங்களை தீர்க்கும் முயற்ச்சியில், ஐக்கிய நாடுகளிலிருந்து சமாதான தூதுவர்களை அனுப்புவர். ஞானப்பெற்றோர், மூன்றாம் தரப்பினர், மற்றும் சமாதானத் தூதுவர் எல்லாரும் ஒரு மத்தியஸ்தரின் பணியை செய்கின்றனர். முரண்பாட்டில் இருக்கும் தரப்பினருக்கு இடையே மத்தியஸ்தம் செய்து அமைதியையும், சமாதானத்தையும் மீண்டும் கொண்டுவர உதவுகிறார்கள்.

கிறிஸ்து ஒரு மத்தியஸ்தராக வந்தார். அவர் ஒரு பூரண மத்தியஸ்தர்.அவரிடம் பாவம் இல்லை, நாம் செய்த அக்கிரமங்களுக்கு அவர் குற்றமற்றவராக இருந்தார். ஆனால், சக்தியுடையவருக்கும் சக்தியற்றவருக்கும் இடையே மத்தியஸ்தராக, அவர் நம் இடத்தை எடுத்துக் கொண்டார்.  

கிறிஸ்து உச்சக்கட்ட விலையை செலுத்தி, அவரில் விசுவாசிக்கும் எவரும் அந்த தண்டனையை அடைய மாட்டார்கள் என்று வாக்களித்தார். மாறாக, அவரில் விசுவாசிக்கும் ஒருவர் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறார். கிறிஸ்துவின் மூலம், அவர் மூலம் மட்டுமே, மக்கள் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.” (1 தீமோத்தேயு 2:5-6).

சிந்திக்க அல்லது கலந்தாய்வு செய்ய

இயேசு நம் மத்தியஸ்தராக இருக்க வேண்டியது ஏன் அவசியம்?

நாம் பெற வேண்டிய தண்டனையை சுமந்துக் கொண்டு, இயேசு பூரண மத்தியஸ்தராக பணிவிடை செய்தார். இதை நமக்காக செய்ய இயேசு ஏன் மனதாயிருந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நீங்கள் தேவனுடன் சமாதானமாக இருக்கிறீர்களா? இல்லையென்றால், அவருடன் ஒப்புரவாக ஒரே வழி என்ன?

மனுக்குலத்தின் மிகப்பெரிய மத்தியஸ்தராகிய இயேசுவின் மேல் நீங்கள் நம்பிக்கை வைக்கவில்லையென்றால், உங்களுடன் இதைக் குறித்து ஜெபிக்க ஒரு நபரைக் கண்டுப்பிக்கும் வரை, ஒரு நாள் கூட கழிய விடாதீர்கள்.

வேதவசனங்கள்

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Following Jesus Our Mediator

சாலை ஓரத்திலிருந்து நம்பிக்கையின்றி கதறும் கண்பார்வையற்ற பிச்சைக்காரன், அசிங்கம் என்று சொல்லி கலாச்சாரத்தால் துச்சமாக எண்ணப்படும் ஒழுக்கமற்ற பெண், அனைவராலும் வெறுக்கப்படும் ஊழல் பேர்வழியான அரசாங்க பணியாளர் -- சமுதாயத்தின் விளிம்புகளில் இருக்கும் இப்படிப்பட்ட மக்கள் ஒரு பரிசுத்தமான தேவனுடன் உறவுக்கொள்ள எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆப்பிரிக்க ஆராய்வு வேதாகமத்தில் லூக்கா புத்தகத்திலுள்ள கருத்துகளை சார்ந்த இந்த வாசிப்பு திட்டத்தில், தேவனுக்கும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் இயேசு பாலம் அமைப்பதை பின்தொடருங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக Oasis International Ltd க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://Oasisinternationalpublishing.com க்கு செல்லவும்.