நம் மத்தியஸ்தராகிய இயேசுவை பின்பற்றுதல்மாதிரி
இயேசுவின் பணி
இயேசுவின் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், அவரை பற்றிய செய்தி அந்த பகுதியில் பரவிக் கொண்டிருந்தது. அவரது சொந்த ஊராகிய நாசரேத்திலுள்ள மக்கள் அவரை பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க, தேவாலயத்தில் வேதம் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தப் போது, ஏசாயா சுருளை விரித்து தன்னைப் பற்றியும் தன் பணியை பற்றியும் உள்ள பழமையான வாக்குத்தத்தத்தை இயேசு வாசித்தார். அவர் ஏழைகள், சிறைப்பட்டோர், பார்வையற்றோர், மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு "நற்செய்தி" கொண்டு வர வந்தார். மிகவும் ஒதுக்கப்பட்டோரையும் தேவன் மிகவும் நேசித்து, அவர்களை மீட்க ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். அந்த திட்டம் இயேசுவாகிய நமது மத்தியஸ்தரின் மரணம் மற்றும் உயிர்தெழுதலில் முழுமையாக நிறைவேறும்.
ஒரு ஆப்ரிக்க ஆராய்வு வேதாகமத்தில் பழமொழிகள் மற்றும் கதைகள் "கடினமான உண்மைகள்" என்ற தலைப்பில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது:
நாசரேதிலுள்ள மக்கள் இயேசுவுக்கு விரோதமாக எழுந்தனர், ஏனென்றால் யூதருக்கு பதிலாக யூதரல்லாத மற்ற மக்கள் தேவ கிருபை பெற்றதாக இயேசு கூறிய போது, அவர்களை அவர் குற்றம்சாடுவதாக நினைத்தனர் (லூக்கா 4:23-28). தென் கிழக்கு நைஜீரியாவில் ஒரு இக்போ பழமொழி இப்படியாக சொல்லுகிறது, "காய்ந்த எலும்புகளைப் பற்றி பேசினால் வயதான பெண்களுக்கு எப்போதும் சஞ்சலம் தான்."
மக்கள் தங்களைப் பற்றிய உண்மையை கேட்கும் போது, அது அவர்களுக்கு சங்கடமாக தான் இருக்கும். ஒரு செய்தி மக்களை உருக்குவதாக இல்லையென்றால், அதில் ஒரு வேளை கேட்பவருக்கு பொருந்தும் உண்மை எதுவும் இல்லாமல் இருக்கலாம்.
நீங்கள் நற்செய்தி நூல்களை வாசிக்கும் போது, சில கடினமான சொற்களாலும் வேதனையான உண்மைகளாலும் சந்திக்கப் படலாம். கிறிஸ்துவின் செய்திக்கு உங்கள் இதயத்தை திறந்து வாசிப்பதும் கவனிப்பதுமே அத்தியாவசியம்.
சிந்தித்து கலந்தாராய்வு செய்ய
இயேசு தனது பணியை எப்படி விவரிக்கிறார்?
அவரது பணியை உங்கள் வாழ்க்கையில் என்னென்ன விதங்களில் செயல்முறைப் படுத்தலாம்?
நற்செய்தியை கொண்டு வருவதே இயேசுவின் பணியாக இருந்தாலும், தன் சொந்த ஊரிலுள்ள மக்களே அவரே புறக்கணித்தனர். அவரது கிருபை நிறைந்த வார்த்தைகள் அவர்களை வியக்க செய்தாலும் கூட அவர் பேசிய சத்தியம் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது ஏன்?
இயேசுவின் நற்செய்தியை உண்மையாக வாழ்ந்துக் காட்டுபவர் யாரையாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சாலை ஓரத்திலிருந்து நம்பிக்கையின்றி கதறும் கண்பார்வையற்ற பிச்சைக்காரன், அசிங்கம் என்று சொல்லி கலாச்சாரத்தால் துச்சமாக எண்ணப்படும் ஒழுக்கமற்ற பெண், அனைவராலும் வெறுக்கப்படும் ஊழல் பேர்வழியான அரசாங்க பணியாளர் -- சமுதாயத்தின் விளிம்புகளில் இருக்கும் இப்படிப்பட்ட மக்கள் ஒரு பரிசுத்தமான தேவனுடன் உறவுக்கொள்ள எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆப்பிரிக்க ஆராய்வு வேதாகமத்தில் லூக்கா புத்தகத்திலுள்ள கருத்துகளை சார்ந்த இந்த வாசிப்பு திட்டத்தில், தேவனுக்கும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் இயேசு பாலம் அமைப்பதை பின்தொடருங்கள்.
More