நம் மத்தியஸ்தராகிய இயேசுவை பின்பற்றுதல்மாதிரி
இயேசுவும் ஊழலானோரும்
ஊழலான அரசாங்க அலுவலர்களை தங்களால் ஒடுக்கப்படுகிற மக்கள் வெறுக்கின்றனர், அவர்களைக் கண்டு பயப்படுகின்றனர். ஆனால் இயேசு ஒடுக்குவோருக்கும் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கும் இரங்கினார்.
ஆப்பிரிக்க ஆய்வு வேதாகமத்தில் "வாழ்க்கையை மாற்றிய சந்திப்பு" என்ற தலைப்பின் கீழ் உள்ள செயற்படுத்தல் குறிப்பில் இப்படியாக உள்ளது:
இயேசு யார் என்று பார்க்க சகேயு ஆசைப்பட்டார். முன்பாக ஓடி இயேசுவை தெளிவாக பார்க்க வேண்டும் என்பதற்காக மரத்தில் ஏறி, அதற்கு தேவையான முயற்சியையும் எடுத்தார். இயேசுவை பார்ப்பதில் மட்டுமே சகேயு திருப்த்தி அடைந்திருப்பார். ஆனால் இயேசுவோ, சகேயுவுக்கு அதை விட அதிகமான அர்த்தம் கொண்ட அனுபவத்தை அளித்தார்.
இயேசு சகேயுவை தனிப்பட்ட விதத்தில் சந்தித்த பின், தன் வரி வசூலிக்கும் பணியை அவரால் வழக்கம் போல தொடர முடியவில்லை. முன்பு மக்களை ஏமாற்றியிருந்தார், ஆனால் ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் திருடியதை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் அறிந்திருந்தார். தன்னை சூழ்ந்திருந்த ஏழ்மைக்கு காரணம் தன் உண்மையின்மையே என்று சகேயு அறிக்கை செய்தார். தன் சமுதாயத்தை குறித்த புதிய பொறுப்புணர்வு அவருக்கு ஏற்பட்டது.
இயேசுவை உண்மையாக அறிய விரும்புபவர்களுக்கு சகேயு ஒரு எடுத்துக்காட்டு. ஏற்ற நேரத்தில், இயேசு அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை முறையை காண்பித்தார். சகேயுவும் தனது மதிப்பீடுகளையும் நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு, அந்த புதிய வாழ்க்கை முறையை தழுவிக் கொண்டார். நாம் இயேசுவிடம் திரும்பினால், நம் வாழ்க்கை மாறும்.
சகேயுவின் சம்பவத்தில் உள்ள ஒரு செய்தி என்னவென்றால், நற்செய்தி அனைவரையும், அதாவது, ஊழலானவர்கள், மற்றவர்களை தவறாக நடத்தியவர்களைக் கூட அடைய முடியும் என்பதே. நீங்கள் சமுதாயத்தில் மிகவும் துச்சமாக எண்ணப்படுபவராக, சிறைக் கைதியாக, போதைப் பொருள் கொடுப்பவராக, அல்லது இவற்றை விட மோசமான நிலையில் நீங்கள் இருந்தாலும் கூட, இயேசுவின் அன்பளிப்பாகிய இரட்சிப்பும் ஒரு புதிய வாழ்க்கை முறையும் உங்களுக்காக இருக்கிறது.
சிந்திக்க அல்லது கலந்தாய்வு செய்ய
சகேயுவின் விருந்தினாராக இயேசு இருக்க கூடாது என்று மக்கள் சொன்னப் போதும் கூட, இயேசு அங்கு சென்றார். ஒரு பெயர் போன பாவியின் வீட்டுக்கு இயேசு சென்றது ஏன்?
தன் மோசமான செயல்களின் மத்தியிலும், சகேயு ஏன் இயேசுவைப் பார்க்க ஆசைப்பட்டார் என்று நினைக்கிறீர்கள்?
இயேசுவின் வருகை சகேயுவின் வாழ்க்கையிலும் அவரது சமுதாயத்திலும் என்ன பலனை ஏற்படுத்தியது?
இயேசு உங்கள் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாரா? அப்படியானால், அது உங்கள் சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சாலை ஓரத்திலிருந்து நம்பிக்கையின்றி கதறும் கண்பார்வையற்ற பிச்சைக்காரன், அசிங்கம் என்று சொல்லி கலாச்சாரத்தால் துச்சமாக எண்ணப்படும் ஒழுக்கமற்ற பெண், அனைவராலும் வெறுக்கப்படும் ஊழல் பேர்வழியான அரசாங்க பணியாளர் -- சமுதாயத்தின் விளிம்புகளில் இருக்கும் இப்படிப்பட்ட மக்கள் ஒரு பரிசுத்தமான தேவனுடன் உறவுக்கொள்ள எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆப்பிரிக்க ஆராய்வு வேதாகமத்தில் லூக்கா புத்தகத்திலுள்ள கருத்துகளை சார்ந்த இந்த வாசிப்பு திட்டத்தில், தேவனுக்கும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் இயேசு பாலம் அமைப்பதை பின்தொடருங்கள்.
More