இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்மாதிரி
நாம் நல்லதானவற்றை போகவிட்டால் தான் அதிலும் மேலானவற்றைப் பற்றிக்கொள்ள முடியும். மேம்பட்ட வாழ்வு வாழ, தேவையற்ற காரியங்களைக் குறைத்துக் கொண்டு தேவையானவற்றை அதிகரித்துக் கொள்ளவது நல்லது. சாலமோன் பிரசங்கி 4 ம் அதிகாரத்தில் இவ்வாறாகக் கூறுகிறார்: "வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்", இதன் அர்த்தம் என்னவென்றால் எளிமையான வாழ்க்கை வாழ்வதே நல்லது. இந்த வாரத்தில் நீங்கள் கர்த்தருடைய வார்த்தை கூறுவதன்படி, இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டு வாழ்வதைப்பார்க்கிலும், ஒருகைப்பிடி நிறையக் கொண்டு வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.