இயேசுவில் தரித்திருங்கள் - 4 நாள்கள் வருகையைப் பற்றிய தியானம்மாதிரி
இது வருடத்தின் மிக அற்புதமான நேரம், கிறிஸ்து பிறப்பு பாடல்கள் கூறுவது போல், இன்னும் ஜெபத்தின் தேவை உள்ளது - அது கடவுளின் அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும், நன்றி செலுத்துவது அல்லது விடுமுறை காலத்தில் வரக்கூடிய மன அழுத்தம் அல்லது சிரமங்களைக் கையாள்வதில் அவரது உதவியைக் கேட்பதற்காகவும் இருக்கலாம். ஜெபம் நம் ஆத்துமாவை கடவுளின் பிரசன்னம், விசுவாசம் மற்றும் அடைக்கலத்தை வாஞ்சிக்க செய்கிறது.
ஆனால் நீங்கள் எப்போதாவது என்ன ஜெபிப்பது என்று தெரியாமல் இருந்திருக்கிறீர்களா? ஒருவேளை உங்கள் ஜெபங்கள் மந்தமானதாகவோ அல்லது ஒரே மாதிரியாகவோ இருக்கலாம், அதினால் நீங்கள் தவறாக ஜெபிப்பது போல் உணர்கிறீர்களா? நீங்கள் வேத வசனங்களை ஜெபிக்கும்போது உங்கள் ஜெபங்களில் உங்கள் நம்பிக்கை பலப்படும்.
வேதம் ஜெபங்களால் நிறைந்துள்ளது! ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை உயிர்ப்பிக்க நாம் பின்பற்றக் கூடிய ஜெபங்களைக் காண்கிறோம். இந்த ஜெபங்கள் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன - சங்கீதப் புத்தகத்தைப் பாருங்கள்!
கடவுளின் பிரசன்னத்தில் வேதத்தின் கதைகள், வரலாறு, கவிதைகள் மற்றும் உவமைகளைப் படிக்கும் பொழுது, ஆவியானவரில் கவனம் செலுத்தினால், நம் வாழ்க்கை, உலகம் மற்றும் நமக்குத் தெரிந்த நபர்களுடன் தொடர்புடைய பகுதிகளை அடையாளம் காண்போம். காலப்போக்கில் இந்த எண்ணங்களை உடனடியாக ஜெபமாக மாற்றுவது இயற்கையாகிவிடும்.
லூக்கா 2:8-18ஐ வாசியுங்கள். இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பற்றி நீங்கள் எப்படிக் கேள்விப்பட்டு அனுபவித்தீர்கள்? இந்தக் கதையில், ஒரு தேவதூதர் கடினமாய் உழைக்கும் மேய்ப்பர்களைச் சந்தித்து, பெத்லகேமில் முக்கியமான ஒன்று நடப்பதாக அறிவித்தார் (வச. 11). எனவே, மேய்ப்பர்கள் தாவீதின் நகரத்திற்குச் சென்றனர், அங்கு அவர்கள் இயேசு, மரியாள் மற்றும் யோசேப்பைக் கண்டார்கள். அவர்கள் குழந்தையைப் பார்த்தவுடன், அவர்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றியும், அவரைப் பற்றி தேவதூதர்கள் கூறியதைப் பற்றியும் தங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் சொன்னார்கள் (வச. 17-18).
குறிப்பாக இந்த வருடத்தில் இயேசுவைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி, மேய்ப்பர்களைப் போல் நீங்கள் எவ்வாறு செயல்பட முடியும்? உங்களுக்குத் தெரிந்தவர்களின் இதயங்களில் கடவுள் செயல்படும்படி ஜெபியுங்கள். மக்களை நியாயந்தீர்ப்பதை விட நல்ல கேட்பவராகவும் நண்பராகவும் இருங்கள். இந்த கிறிஸ்துமஸில் வெறும் வார்த்தைகள் அல்லாமல், சேவைச் செயல்களின் மூலம் நற்செய்தியை வெளிப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் உறவுகளின் தரம் மக்களை இயேசுவிடம் நெருங்கி வர உதவ வேண்டும் என்று ஜெபியுங்கள்.
வேதாகமத்தை ஜெபிக்கும் ஆன்மீகப் பயிற்சி மற்றும் இந்த வாசிப்புத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிய, தாமஸ் நெல்சனின் அபைட் வேத குறிப்பேடுகளைப் பார்க்கவும். .
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் வருகிறது! அதனுடன் இயேசு கிறிஸ்து வருகை - இயேசுவின் பிறப்பிற்கும் அதைக் கொண்டாடவும் தயாராகி வருகிறது. ஆனால் பரபரப்பான விடுமுறை அட்டவணை, சரியான வெகுமதிகளுக்காக கடைகளுக்கு செல்லுவது அல்லது குடும்பக் கூட்டங்களை நடத்துவது போன்றவற்றால் அந்த முக்கிய உண்மை தொலைந்து போகிறதா? கிறிஸ்மஸ் கால பரபரப்பில், கடவுளின் வார்த்தையுடன் ஈடுபடுவதற்கான புதிய வழிகளை தேடுங்கள், உங்களை அவருடன் நெருக்கமாக்குங்கள். தாமஸ் நெல்சனின் அபைட் வேதாகம இதழ்களில் இருந்து இந்த 4 நாள் வாசிப்புத் திட்டத்தின் மூலம் உங்கள் ஆத்துமாவை உயிர்ப்பியுங்கள்.
More