இயேசுவில் தரித்திருங்கள் - 4 நாள்கள் வருகையைப் பற்றிய தியானம்மாதிரி

Abide in Jesus - 4-Day Advent Devotional

4 ல் 2 நாள்

வருடத்தின் இந்த நேரத்தில் நமது நாள்காட்டி நிகழ்ச்சிகளால் விரைவாக நிரப்பப்படும். நண்பர்களுடனான கிறிஸ்துமஸ் விருந்துகள், குடும்பக் கூட்டங்கள், வேலைக் கடமைகள், தேவாலய நிகழ்ச்சிகள் - மற்றும் சமைத்தல், சுத்தம் செய்தல், ஷாப்பிங், அலங்கரித்தல் அனைத்தையும் மறந்துவிடாதீர்கள். நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம், இது ஆத்துமாவில் விழித்திருப்பதை மிகவும் கடினமாக்குகிறது.

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் - நாம் மாடுகளைப் போல இருக்க வேண்டும்.

என்ன...மாடுகளா?!?

சிந்தித்துப் பாருங்கள் - பசுக்கள் நாள் முழுதும் அசை போட்டுக்கொண்டே இருக்கும். பசுக்கள் வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்கள் தேவை, எனவே அவை பொறுமையாக, புற்களை விழுங்காமல், அவற்றின் ஊட்டச்சத்தை மெதுவாக அசைபோடும். அதேபோல், ஒவ்வொரு நாளும் நாம் ஆவிக்குரிய உணவை விழுங்குவதற்குப் பதிலாக, நாம் மெதுவாக அதை உள்வாங்கி கொண்டு, நாள் முழுவதும் கடவுளுடைய வார்த்தையை மீண்டும் மீண்டும் " மெல்ல வேண்டும்". இதைத்தான் வேதாகம எழுத்தாளர்கள். தியானம். என்று அழைக்கிறார்கள் இன்னொரு வார்த்தை ஆழ்ந்த சிந்தனை.

கடவுளின் பிரசன்னத்தில் காத்திருப்பதே சிந்தனையின் குறிக்கோள். பேசுவதை விட அவர் சொல்வதை கேட்பது. குறிப்பாக இந்த பருவத்தில் அமர்ந்து அமைதியாக இருக்க முயற்சி தேவை. ஆனால் கடவுளுடைய வார்த்தை நம் ஆத்துமா வாழ மிகவும் அவசியமான உணவு. நீங்கள் அவருடைய சத்தியத்துடன் அமர்ந்து, அதை உங்கள் ஆத்துமா "ஜீரணிக்க" அனுமதித்தால், உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றியுள்ள உலகிலும் கடவுளின் பிரசன்னத்தை நீங்கள் அதிகம் உணர்வீர்கள்.

மத்தேயு 1:22-25ஐ இருமுறை வாசியுங்கள். உங்களுக்குத் தனித்து நிற்கும் ஒரு சொல் அல்லது சொற்றொடரைத் தேடுங்கள்.

அடுத்து, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேர்ந்தெடுத்த சொல் அல்லது சொற்றொடருடன் இணைக்கக்கூடிய பகுதியைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் ஏன் இந்த வார்த்தையை குறிப்பாக தேர்ந்தெடுத்தீர்கள், உங்கள் வாழ்க்கைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? இந்த தருணத்தில் நீங்கள் ஏன் இதினால் ஈர்க்கப்பட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள்?

பின்னர் ஜெபியுங்கள், அவர் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்தும்படி கடவுளிடம் கேளுங்கள். எதிர்பார்ப்புடன் ஜெபியுங்கள், அவருடைய பதிலுக்காக பொறுமையாக காத்திருங்கள்.

இறுதியாக, நீங்கள் ஆவியானவருடன் அமர்ந்திருக்கும்போது, கேளுங்கள். மறுபடியும் அந்த நாளின் பிற்பகுதியில் அதைக் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் மேலும் சிந்தித்துப் பார்க்கும்போது கடவுள் உங்களுக்கு மேலும் எதையும் வெளிப்படுத்தியிருக்கிறாரா?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Abide in Jesus - 4-Day Advent Devotional

கிறிஸ்துமஸ் வருகிறது! அதனுடன் இயேசு கிறிஸ்து வருகை - இயேசுவின் பிறப்பிற்கும் அதைக் கொண்டாடவும் தயாராகி வருகிறது. ஆனால் பரபரப்பான விடுமுறை அட்டவணை, சரியான வெகுமதிகளுக்காக கடைகளுக்கு செல்லுவது அல்லது குடும்பக் கூட்டங்களை நடத்துவது போன்றவற்றால் அந்த முக்கிய உண்மை தொலைந்து போகிறதா? கிறிஸ்மஸ் கால பரபரப்பில், கடவுளின் வார்த்தையுடன் ஈடுபடுவதற்கான புதிய வழிகளை தேடுங்கள், உங்களை அவருடன் நெருக்கமாக்குங்கள். தாமஸ் நெல்சனின் அபைட் வேதாகம இதழ்களில் இருந்து இந்த 4 நாள் வாசிப்புத் திட்டத்தின் மூலம் உங்கள் ஆத்துமாவை உயிர்ப்பியுங்கள்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக HarperCollins/Zondervan/Thomas Nelson ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து இங்கே செல்லவும்: https://www.thomasnelsonbibles.com/abide-bible-journals/