இயேசுவில் தரித்திருங்கள் - 4 நாள்கள் வருகையைப் பற்றிய தியானம்மாதிரி
கிறிஸ்மஸ் அருகில் வந்து விட்டது! கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் மகிழ்ச்சியான நேரமாக இது இருந்தாலும், இந்தக் காலம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் சமயமின்மை ஆகியவற்றால் பொலிவிழந்து காணப்படலாம், அது நமது ஆத்துமாவை வெறுமையாக்கிவிடும். வருகையின் காலத்தில் நாம் எப்படி நம் ஆத்துமாவை உயிர்ப்போடு வைத்து விழித்திருப்பது?
மாற்கு 13-ல் இயேசு தனது உவமையில் கூறுவது போல், நாம் "விழிப்புடன் இருக்க" குறிப்பெடுப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும்.
நாம் என்ன படிக்கிறோம் என்பதைப் பற்றி தியானிக்க குறிப்பெடுப்பது உதவுகிறது - நாம் படித்ததைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, அதை அப்பியாசப்படுத்தவும் தான். வேதத்தை குறிப்பெடுப்பது என்பது அடிப்படையில் கடவுளுடன் ஏற்படும் ஒரு திறந்த, நேர்மையான உரையாடல் ஆகும். நம்முடைய சந்தேகங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடலாம், கடவுளின் ஆலோசனையைப் பெறலாம், மேலும் நம்மிடம் மாற வேண்டிய மனப்பான்மைகளையும் செயலையும் கண்டு கொள்ளலாம். இது உங்கள் தனிப்பட்டது என்பதால் குறிப்பெடுப்பதில் சரியான அல்லது தவறான வழி என்று எதுவுமில்லை.
இதை முயற்சிக்கவும்: உங்கள் வேதாகமத்தில் மாற்கு 13:32-37ஐ திறக்கவும், ஆனால் படிக்கத் தொடங்காதீர்கள். முதலில், ஒரு ஜெபத்துடன் ஆரம்பியுங்கள், கடவுள் உங்களிடம் பேசவும், வார்த்தையின் மூலம் தம்மை வெளிப்படுத்தவும் கேளுங்கள். ஒரு திறந்த இதயத்திற்காகவும், அவர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை கவனிக்க எச்சரிக்கையாகவும் இருக்க ஜெபியுங்கள். இப்போது மாற்கின் பகுதியைப் படியுங்கள். இறுதியாக, உங்களுக்கு அருகிலுள்ள ஒரு குறிப்பேட்டில், நீங்கள் படித்தது தொடர்பான பின்வரும் கேள்விகளை எழுதவும்:
- "எச்சரிக்கையாக இருங்கள்!" என்று இயேசு தம் சீடர்களுக்கு ஏன் கட்டளையிட்டார். (வ.33)? இந்தக் கட்டளையை நீங்கள் எவ்வாறு பின்பற்றுகிறீர்கள்?
- இயேசுவின் வருகைக்காக நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்? இந்த ஓய்வில்லாத நேரத்தில் எத்தனை முறை இதைப் பற்றி சிந்திக்கிறீர்கள்? இந்த கிறிஸ்துமஸை மிகவும் கவனமாகப் அணுக நீங்கள் என்ன செய்யலாம்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் வருகிறது! அதனுடன் இயேசு கிறிஸ்து வருகை - இயேசுவின் பிறப்பிற்கும் அதைக் கொண்டாடவும் தயாராகி வருகிறது. ஆனால் பரபரப்பான விடுமுறை அட்டவணை, சரியான வெகுமதிகளுக்காக கடைகளுக்கு செல்லுவது அல்லது குடும்பக் கூட்டங்களை நடத்துவது போன்றவற்றால் அந்த முக்கிய உண்மை தொலைந்து போகிறதா? கிறிஸ்மஸ் கால பரபரப்பில், கடவுளின் வார்த்தையுடன் ஈடுபடுவதற்கான புதிய வழிகளை தேடுங்கள், உங்களை அவருடன் நெருக்கமாக்குங்கள். தாமஸ் நெல்சனின் அபைட் வேதாகம இதழ்களில் இருந்து இந்த 4 நாள் வாசிப்புத் திட்டத்தின் மூலம் உங்கள் ஆத்துமாவை உயிர்ப்பியுங்கள்.
More