துவங்க 60மாதிரி

60 to Start

60 ல் 47 நாள்

"எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்."⏎⏎கர்த்தாவே, உம்மிடம் நெருங்கிச் சேரத் தடையாக இருக்கக் கூடிய எல்லா உறவுகளையும் என்னை விட்டு விலக்கும். உண்மையாகவும் ஒளிவுமறைவில்லாமலும் நடப்பேன்.

கர்த்தாவே, எபேசியர் 6:12-18ல் கூறியுள்ளபடி தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொள்கிறேன். 1) சத்தியம் என்னும் கச்சை, 2) நீதியென்னும் மார்க்கவசம் 3) சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையை தொடுத்த கால்கள் 4) தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் 5) இரட்சணியமென்னும் தலைச்சீரா. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணுகிறேன்.

கர்த்தாவே, சங்கீதம் 91 ல் கூறப்பட்டுள்ள பாதுகாவலை நான் கோருகிறேன். எல்லா வித கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் என்னைத்தப்புவிப்பீர் என்று எனக்குத் தெரியும். உமது செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவேன். என்னைச் சுற்றி எவ்விதமான தீமைகள் நடந்தாலும் அது என்னை சேதப்படுத்தாது. தீமையினின்று என்னைக் காக்கும்படி, எனக்காக உம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவீர்.நீர் என்னை நேசிக்கிறதினாலும் உம் நாமத்தை நான் அறிக்கையிடுகிறபடியாலும் நீர் என்னை விடுவிப்பீர். நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவதால், எனக்கு மறுஉத்தரவு அருளிச்செய்து என்னை விடுவித்து கனப்படுத்துவீர். நீடித்த நாட்களால் என்னைத் திருப்தியாக்கி, உம் இரட்சிப்பை எனக்குக் காண்பிப்பீர்.
நாள் 46நாள் 48

இந்த திட்டத்தைப் பற்றி

60 to Start

இந்த அறுபத்தைந்து நாள் திட்டம் இயேசுவுடனான உங்கள் உறவை துவங்கத் (மறுபடி துவங்கத் ) தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி நீங்கள் மூன்று செயல்கள் செய்யப் போகிறீர்கள் : சுவிசேஷங்களில் இயேசுவோடு உறவாடுவீர்கள், நிருபங்களில் எவ்வாறு அவரது தொண்டர்கள் அவர் பிரசங்கித்தவற்றை வாழ்ந்து காட்டினார்கள் என்று வாசிப்பீர்கள், ஜெபத்தின் மூலம் அவரைக் கிட்டிச் சேர்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Trinity New Life Church க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.trinitynewlife.com க்கு செல்லவும்.