வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல்மாதிரி

Living Changed: Embracing Identity

6 ல் 5 நாள்

நமது வாழ்வின் மீதான அதிகாரம்

நாம் சிறுவர்களாக இருக்கும்போது, நம் பெற்றோர்கள் நமக்காக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அல்லது சக்தியைக் கொண்டுள்ளனர். நாம் வளர்ந்து சுதந்திரமாக இருந்தாலும், சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். வேலையிலும், உறவுகளிலும், நமது கலாச்சாரத்திலும் எதிர்பார்ப்புகள் உள்ளன. நிலைபாடு செய்ய நிறையவே இருக்கிறது, ஆனால் இறுதியில், நம் வாழ்வில் யாருடைய கருத்துக்கு அதிகாரம் உள்ளது என்பதை தீர்மானிக்கும் தேர்வுரிமை நமக்கு மாத்திரமே உள்ளது.

நான் சிறுவயதில் இருந்தபோது, என் அப்பா என்னை “பெரிய எலும்புகள் கொண்டவன்” என்று கூறியதை நான் நினைவு கூர்கிறேன். அவர் என்னை காயப்படுத்த விரும்பவில்லை, அவர் என்னை மிகவும் நேசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், அவரது இயலான விமரிசனம் எனக்கு வேதனை கொடுப்பதை தடுக்கவில்லை. இந்த விமரிசனத்தை நான் இருதயதில் கொண்டு அதை பல வருடங்கள் மனதில் எதிரோலிக்க செய்தேன். ஒருபோதும் சிறியவனாக இருக்க முடியாது என்றும் போதுமானவனாக இருக்க முடியாது என்றும் அது எனக்கு தொடர்ந்து நினைவூட்டியது.

ஒருவேளை, என்னைப் போலவே, நெருங்கிய குடும்ப உறுப்பினர் கவனக்குறைவாகச் சொன்ன விஷயத்தால் நீங்களும் புண்பட்டிருக்கலாம். உங்கள் அம்மா உங்களை ஒவ்வாதவர் என்றோ அல்லது உங்கள் சகோதரி உங்களை அருகாமையில் கூட வேண்டாம் என ஒரு வேளை கூறியிருக்கலாம். ஒரு வேளை நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள் என்பதற்கு உங்கள் முதலாளியின் புகழ்ச்சிகை சார்ந்தே இருக்கலாம். ஒரு வேளை சமூக வளையங்கள் நீங்கள் மிக்கவர் அல்லது போதுமாவர் என கூற அனுமதிக்கலாம். நீங்கள் யார் என்பதற்கும், யாராக இருக்க வேண்டும் என்பதற்கும் யாருக்கு அதிகாரம் அளிக்கன்றீர்கள்? ஆண்டவரும் அவரது இறைவசனங்கள் மாத்திரமே உங்கள் வாழ்வின் நிவிதான அதிகாரமாக இருக்க வேண்டும்.

மத்தேயு புத்தகத்தில் இயேசுபிரானுக்கும் சாத்தானுக்கும் இடையேயான ஒரு சங்கிரமித்தல் பற்றி படிக்கின்றோம். பிசாசு இயேசுபிரானை சோதிக்க அவரது அடையாளத்தை தாக்க முயற்சி செய்கிறது. “நீ தேவபுத்திரன் தான் என்றால்” என அது கூறுகிறது. இயேசுபிரானின் மறுமொழியை நான் நேசிக்கிறேன்! அவர் தற்காப்பு எடுக்கவில்லை வாதாடவில்லை. அவர் யாரென்று அவருக்கு தெரியும்: தேவபுத்திரன், சோர்க்காசனத்தின் வாரிசு, இராஜாகளுகளெல்லாம் இராஜா கர்த்தாதி கர்த்தா! கவனியுங்கள் இரண்டு முறை பிசாசு இயேசுபிரானின் அடையாளத்தையே வினாவும் உத்தியை மேற்கொண்டு கைவிடுகிறது. ஏனேனில் சாத்தான் ஆக்கபூர்வ திறன் இல்லை. திரும்ப திரும்ப அதே தாக்குதல் அதே பொய்களை எறிந்து நமது கவசத்தில் நலிந்த இடங்களை காண அவன் கொணருவான். அதனால் நாமும் அரண்காத்து, இயேசுபிரானை போலவே, நமது மிகப்பெரிய ஆயுதம் கொண்டு போர் செய்ய வேண்டும்.

தேவ வசனங்கள் ஆவியின் வாள் என விவரிக்கபடுகிறது. நம்மை நோக்கி பறந்து வரும் வஞ்சகங்களை வெட்டியெறிய நாம் பிரயோகிக்கும் போது, நமது அடையாளத்தை ஆண்டவர் அதிகாரம் மேற்கொள்ள அனுமதிக்கின்றோம் மேலும் பகைவனின் சூழ்ச்சிகள் பலன் இல்லாமல் போக செய்கிறோம். நமது அடையாளத்தை நமது வாழ்தொழில், கடந்த காலம், திருமண நிலை, குழந்தைகள், மற்றவர் நம்மை பற்றி என்ன சொல்கிறார்கள், நாம் தேவாலத்திற்கு என்ன செய்துள்ளோம் என்பனவற்றில் வைக்க கூடாது. நமது சமூகம், விமர்சகர்கள், அல்லது கலாசாரத்தின் வாயிலாக பதில்வராது. நம்மை பற்றி நாம் நம்புவதற்கான அதிகாரம் ஆண்டவருக்கு மாத்திரமே உள்ளது. நமது மெய்யான அடையாளம் அவரிடம் மாத்திரமே நிலையுறும்.

நடவடிக்கை படி:

இயேசுபிரானிடம் இருந்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். சாத்தானின் தாக்குதலுக்கு அவரது மறுமொழி உங்களது போர்த்திட்டம் ஆகட்டும். நீங்கள் யாராக இருப்பதற்காக ஆக்கபட்டீர்கள் என்பதில் ஐயம் ஏற்படுத்த பகைவனுக்கு எவ்விதமான கால்பிடியும் கொடுக்காதீர்கள். பகைவனின் பொய்கள், நமது உலகதின் நியாயமற்ற எதிர்பார்ப்புகள் மற்றும் நொகையான பேச்சிற்கு எதிராக ஆவியின் வாளை பிரயோகிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பரலோகத்தில் உள்ள உங்கள் பிதாவால் நேசிக்கப்படுகிறீர்கள், தகுதியானவர், விரும்பப்படுகிறீர்கள், போஷிக்கபடுகறீர்கள். உங்கள் இதயத்தில் குடிகொள்ள நீங்கள் அனுமதித்த எவ்விதமான கபடங்கள் மாற்றீடும் வரை அந்த உண்மையை மீண்டும் மீண்டும் அறியுரையுங்கள். நீங்கள் யாரேனில் அவரது நேசிக்கபட்ட குழந்தையே.

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Living Changed: Embracing Identity

நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக மாற்றமடைந்த பெண்களின் ஊழிங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழ்கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பாருங்கள்: https://www.changedokc.com