வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல்மாதிரி
உங்கள் உள்ளான உரையாடலை மாற்றுங்கள்
உங்களை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது, உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
எனது உள் மனதில் தோன்றிய பதில் தேவன் என்னை எப்படிபட்ட பெண்ணாக உருவாக்கினாரோ அதன் பிரதிபலிப்பாக இல்லை. என் உள் உரையாடலை தேவ உதவியால் மாற்றவில்லை எனில், எனது பதில் இப்படியாக தான் இருந்திருக்கும்: “நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் 45 வயதானவள் முன்பு போல இளமை அல்லாதவள் மேலும் அதை நிரூபிக்க முகச் சுருக்கங்களும் நரை முடியும் உடையவள். நான் அதிகமாக கத்தினாலும், எனக்கு திருமணம் முடிந்து ஏறத்தாழ 25 வருடங்கள் ஆகிறது. எனது மருத்துவரை பொறுத்தவரை, நான் அதிக எடை உடையவள். நான் ஓடும்போது என்னால் மூச்சு விட முடியவில்லை, கீரைகளை விட மிட்டாயும், உருளை வறுவலும் பிடிக்கும். எனது சபையில் நான் ஊழியக்காரி, ஆனால் நான் அதற்கு தகுதியற்றவள் மேலும் என்னுடைய கடந்த காலத்தின் காரியங்களைப் பார்த்தால் நான் ஊழியத்தில் திறம்பட செயலாற்ற தகுதி அற்றவள்.”
இந்த பதில் எனது திருமண நிலை, எடை, பாலினம், வேலை மற்றும் இந்த உலகம் என்னைக் குறித்து சொல்லும் சில பொய்களையும் உள்ளடக்கியுள்ளது, ஆனால் உண்மையில் நான் யார் என்பதை விவரிக்கவில்லை. இதில் சிலவைகள் மெய் என்றாலும், அவை உண்மையில் பெரிய விஷயமல்ல. அவை எனது சூழ்நிலைகளேயன்றி எனது அடையாளம் அல்ல.
உண்மை என்னவென்றால், முதலாவதும் முக்கியமானதும், நான் தேவனுடைய பிள்ளை. நான் ஒரு நோக்கத்திற்காக நோக்கத்தோடு உருவாக்கப்பட்டேன். நான் தலைசிறந்த படைப்பு, அண்ட சராசரத்தையும் படைத்தவரால் கலைநயத்தோடு உருவாக்கப்பட்டவள். இப்போது அதனை நான் அறிவேன், ஆனால், முதலாம் பதிலில் இருந்து இரண்டாம் பதிலுக்கு வருவதற்கான மாற்றம் ஒரே இரவில் நடந்து விடவில்லை.
நான் முதன் முதலாக பெண்கள் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டதை உணர்ந்தபோது, நான் நேசிக்கப்பட்டவளாக உணரவில்லை. மேடை மேலே நின்று மற்ற பெண்களிடம் நீங்கள் தேவ சாயலால் அழகாக உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது ஏனெனில் என்னைக் குறித்தே நானும் அவ்வாறே உருவாக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உண்மையாக உணரவில்லை. தேவன் என்னை பார்க்கும்போது எப்படி பார்க்கிறாரோ அப்படியே நானும் என்னைபா பார்க்க உதவுமாறு தேவனிடம் உதவி கேட்டேன் மேலும் என்னைப் பற்றின என்னுடைய கண்ணோட்டத்தை அவரால் மாற்றக்கூடும் என்று அவருடைய வல்லமையின் மீது நம்பிக்கை வைத்தேன்.
பல ஆண்டுகள் சரணடைதலையும் நம்பிக்கையும் பயிற்சி செய்த பிற்பாடு, இப்பொழுது என்னால் என்னை தேவ சாயலாக உருவாக்கப்பட்டவளாக பார்க்க முடிகிறது. இது கண்ணாடியில் என்ன பிரதிபலிக்கிறது என்பதை பொறுத்தது அல்ல. இது உள்ளான சமாதானத்தில் இருந்தும், தேவன் தவறு செய்வதில்லை என்று உணர்ந்து ஒத்துக்கொள்வதில் இருந்தும் வரும் மனதின் பிரதிபலிப்பு. அவர் என்னை படைத்ததும் ரூபவதி என்று அழைத்ததுமே எனக்கு போதுமானது.
நாம் யார் என்று தேவன் சொல்வதை தழுவிக் கொள்ளுதல் நமது நம்பிக்கையை மாற்றும். தேவன் நல்லவர் என்று அறிந்து உணர்ந்து கொள்ளுதலும், அவர் நிர்னயித்தபடியே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்னும் எண்ணமும் புதிய வாழ்க்கை தரக்கூடியது. கர்த்தர் நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டு எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நாம் கிரகிக்கும்போது, நம்மை நாமே நேசிப்பதற்கு ஏதுவாகிறது. நமது உள்ளான உரையாடல் உடனே மாற்றக்கூடியது அல்ல, நாம் அதனை சுயமாக செய்யவும் முடியாது. நாம் கர்த்தரிடம் உதவி கோர வேண்டும்.
செயலாற்றல்:
உங்கள் அடையாளத்தைக் குறித்த போராட்டம் இருக்குமானால், கர்த்தரிடம் அவர் உங்களை எவ்வாறு பார்க்கிறார் என்று கேளுங்கள். உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் பொய்யான நம்பிக்கைகளை காண்பித்துத் தரவும் தேவனிடம் உதவி கோருங்கள் அவற்றை தேவனுடைய சத்தியங்களால் மாற்றுங்கள். அதை மாற்ற எவ்வளவு காலமானாலும் அக்காலங்களில் தேவன் உங்களோடு இருக்கிறார், மறுபடியும் மறுபடியும், நீங்கள் தகுதியானவர்கள், அழகானவர்கள், திறமையுடயவர்கள் மேலும் நேசிக்கத்தகுந்தவர்கள். நீங்கள் எவ்வளவு காலம் இயேசுவை பின்பற்றினாலும், உங்களைக் குறித்த உங்கள் எண்ணமும் பேச்சும் தேவன் சொல்வதை விட சற்றுக் குறைவாக இருக்குமானால், உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் அடையாளத்தை தழுவிக்கொள்ள உதவும்படி தேவனிடம் கேளுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும்.
More