உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?மாதிரி

Can I Really Overcome Sin and Temptation?

5 ல் 5 நாள்

ஏற்கனவே நான் சோதனையில் விழுந்திருந்தால் என்ன செய்வது?

மிகவும் தாமதமாகியிருந்தால் என்ன செய்வது?

நீங்கள் உங்கள் சுயபெலத்தோடு போராடியதால் – சோதனையில் விழுந்திருப்பீர்கள்.

இப்போது சர்வத்தையும் படைத்த தேவனுக்கு முன்பாக குற்ற மனசாட்சியோடு கூட நிற்கிறீர்கள்.

நம்மில் எவருமே இதற்கு விதிவிலக்கல்ல: “நமக்கு பாவமில்லை என்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிரவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1 யோவான் 1:8).

நாம் செய்ய வேண்டியது இது தான்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்.” (வசனம் 9).

நீங்கள் விழுந்த பாவத்தை உங்கள் பரம தகப்பனிடம் கொண்டு செல்லுங்கள் – இப்பொழுதே.

உங்கள் தவறை ஒத்துக்கொண்டு, உங்கள் விழுதலில் இருந்து மீண்டு எழும்ப மனந்திரும்புதலின் உணர்வோடு கூட அவரிடம் மன்னிப்பை கேளுங்கள்.

உங்களை பாவங்களற கழுவி, உங்களை பரிபூரணமாக சுத்திகரித்து, உங்கள் அக்கிரமங்களை இனி நினையாமலிருப்பார் என்கிற வாக்குத்தத்தத்தை சுதந்தரித்து ஜெபியுங்கள்.

தேவன் மன்னிப்பு நிறைந்தவர் என்பதால், ஒவ்வொரு முறையும் நாம் துணிந்து பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிடலாமா?

பாவங்கள் மன்னிக்கபட்டாலும், அதன் விளைவை நீங்கள் சுமக்க வேண்டி வரலாம்.

ஒரு மரக்கட்டையில் ஆணி அடித்துவிட்டு, அதை மீண்டு பிடுங்கிவிட முடியும் – ஆனால் அந்த ஆணி விட்டு சென்ற தழும்பு அங்கேயே இருக்கும். ஒருமுறை மறுக்கப்பட்ட கீழ்படிதலை மறுமுறை நாம் அடைய முடியாமல் போகலாம். உண்மை தன்மைக்கான பிரதிபலனை நாம் நித்திய காலத்திற்கு இழந்துவிடக்கூடும்.

நம்முடைய பிதாவாகிய தேவன் மன்னிக்கிறவர் தான், ஆனால் செய்த பாவத்தினால் ஏற்பட்ட காயம் இன்னும் வேதனையை ஏற்படுத்தலாம் – நமக்கும் மற்றவர்களுக்கும்.

ஆனாலும், நம்முடைய இடத்தில் பிதா தம்முடைய ஒரே குமாரனான இயேசுவையே கொடுத்திருக்கிறபடியால், நம்முடைய மன்னிப்பு உறுதியானது: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8).

குற்ற உணர்ச்சி தேவனுக்குரியதல்ல.

நம்முடைய பிதாவாகிய தேவன், தம்முடைய குடும்பத்தை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள். நாம் அவருடைய பிள்ளைகளை போல நடவாதிருந்தாலும், நம் மீது அவர் வைத்திருக்கும் நேசம் குறைவதில்லை.

தகுதியில்லாத நமக்கு கர்த்தர் ஆசீர்வாதங்களை தருவது தான் அவருடைய கிருபை. நமக்கு தகுதியான ஆக்கினையை நமக்கு தராமல் இருப்பது தான் அவருடைய இரக்கம்.

நம்முடைய பரம தகப்பன் இவ்விரண்டையும் உடையவர்.

இன்று அவருடைய மன்னிப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?

ஆம் என்றால், தாமதம் வேண்டாம். இப்பொழுதே உங்கள் பிதாவாகிய தேவனிடம் பேசுங்கள். அவருடைய பிள்ளை அவரை நோக்கி கூப்பிடுகிற அந்த தருணத்திற்கென்று அவர் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

---

சோதனைகளை மேற்கொள்வதை குறித்து நீங்கள் மேலும் வாசித்து அறிந்துக்கொள்ள விரும்பினால், Dr. Denison அவர்கள் எழுதிய புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். புத்தக தலைப்பு: 7 கொடிய பாவங்கள் , முதல் அத்தியாயம் இலவசம்.

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Can I Really Overcome Sin and Temptation?

"நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்" என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: "நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்". நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

More

இந்த தியான திட்டத்தை எங்களுக்கு அளித்தமைக்கு 'டெனிசன் போரம்' என்ற இணைய பக்கத்திற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: http://www.denisonforum.org