உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?மாதிரி
சாத்தானுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தங்களை நான் ஜெயிப்பது எப்படி?
சாத்தான் நிஜமானவன் தான், ஆனால் தோற்றுப்போனவன்.
பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே இயேசு பூமிக்கு வந்தார் (1 யோவான் 3:8). இயேசு சிலுவையிலே மரித்த போதே, பாவமும் மரித்து போனது. அவர் உயிரோடு எழுந்த போது, பாதாளம் தோற்று போனது. ஒரு நாள், அவியாத நெருப்பாகிய நரக அக்கினியிலே, பிசாசானவன் எறிந்து போடப்படுவான். (வெளிப்படுத்தல் 20:10). அன்று, நரகத்தில் சாத்தான் ஆட்சி செய்ய முடியாது – அங்கே அவன் சதாகாலமும் தண்டிக்கப்படுவான்.
சாத்தான் நம்முடைய பிதாவாகிய தேவனோடு கூட போரிடுகிறான், அந்த போர் நடக்கும் போர்க்களமாகவே நாம் இருக்கிறோம். சாத்தானால் தேவனை நேரடியாக காயப்படுத்த முடியாது. எனவே தான் அவரது பிள்ளைகளாகிய நம்மை தாக்குவதின் மூலம் நம் பிதாவாகிய தேவனை தாக்குகிறான். ஒருவரை நேரடியாக தாக்குவதை காட்டிலும், அவருடைய பிள்ளைகளை தாக்குவது, அதிக மன பாதிப்பை கொடுக்கும்.
சத்துருவுடனான நம்முடைய ஆவிக்குரிய யுத்தத்தில் நாம் ஜெயிப்பது எப்படி?
முதலாவது, தேவ பெலத்தோடு அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.
“தேவனுக்கு கீழ்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.” (யாக்கோபு 4:7). நீங்கள் சோதிக்கப்படும்போது, அந்த தருணத்தை தேவனிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு, பிசாசுக்கு எதிர்த்து நிற்பதை தெரிந்து கொள்ளுங்கள்: “பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” (எபேசியர் 4:27). சோதிக்கப்படுகிற நேரத்தில், உங்கள் மனதிலோ சிந்தையிலோ பாவத்துக்கு இடம்கொடுக்க மறுப்பது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருக்கபோவதில்லை.
இரண்டாவது, தேவ வல்லமையினால் உங்களுக்கான வெற்றியை சுதந்தரித்து கொள்ளுங்கள்.
தாங்கிக்கொள்ள கூடிய பெலனை கொடுக்காமல், நம்முடைய பிதாவாகிய தேவன் நமக்கு எந்த சோதனையையும் அனுமதிக்கிறவர் அல்ல, அவர் ஏற்கனவே அதை நமக்கு வாக்கு கொடுத்திருகிறார் (1 கொரிந்தியர் 10:13). சோதனையோடு கூட பிசாசு உங்கள் வாழ்வினுள் நுழையும் போது, இந்த வாக்குத்தத்தத்தை பிடித்துகொண்டு, இந்த வார்த்தையின் மீது நில்லுங்கள்.
மூன்றாவது, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளுங்கள்.
எபேசியர் 6 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம்: “என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்து கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு.” (வசனங்கள் 10–12).
சத்தியம், நீதி, சமாதானத்தின் சுவிசேஷம், விசுவாசம், இரட்சிப்பு, தேவ வசனம், ஜெபம் ஆகியவைகளை உள்ளடக்கியது தான், இந்த ஆவிக்குரிய “சர்வாயுதவர்க்கம்” (வசனங்கள் 14–18). இவைகளின் மேல் நில்லுங்கள். இவைகளில் உங்களை பழக்குங்கள். தேவனுடைய வல்லமையாக இவைகளை விசுவாசியுங்கள். இவைகள் உங்களுடைய சோதனைகளில் உங்களுக்கு ஜெயத்தை பெற்று கொடுக்கும்.
எனவே, அழிவிற்குரிய இந்த எதிரியால் சோதிக்கப்படுவதை எதிர்பார்த்திருங்கள்.
சிங்கங்கள் தங்களுடைய இரையை தாக்கும் நேரத்தில் தான் கர்ஜிக்கும். தேவ பெலத்தோடு துணிந்து நில்லுங்கள். ஒருவேளை விழுந்து விட்டாலும், கிருபையும் மன்னிப்பும் அதிகமாக கொண்டிருக்கிற தேவனிடம் வந்து, உங்கள் ஜெயத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்த முறை பிசாசு உங்களுடைய கடந்த காலத்தை நினைவுப்படுத்தும்போது, நீங்கள் அவனுடைய எதிர்காலத்தை அவனுக்கு நினைவுப்படுத்துங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
"நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்" என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: "நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்". நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம்.
More