உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?மாதிரி
நிஜமாகவே சாத்தான் என்று ஒருவன் இருக்கிறானா?
பாவத்தை குறித்து பேசுவதற்கு முன்பாக நாம் சாத்தானை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அவனுடைய கிரியைகள் தவிர்க்க முடியாதது: மனமுறிவு, பட்டினி, துஷ்பிரயோகம், வியாதி, ஒழுக்கக்கேடுகள்... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
சாத்தான் நிஜமானவன் தான் ஆனால் தோற்றுப்போனவன். இந்த இரண்டையுமே நீங்கள் நம்புவதை அவன் விரும்புவதில்லை. ஆனால், முடிவு உங்களுடையதே. இந்த தியான திட்டம் உங்களுக்கு இந்த சத்தியத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று நாம் மனதார ஜெபிக்கிறேன்.
சாத்தான் நிஜமானவன்
சாத்தானை பல பெயர்கள் கொண்டு பரிசுத்த வேதாகமம் குறிப்பிடுகிறது. அதில் நாம் அனைவரும் நன்கு அறிந்து இரண்டு வார்த்தைகள், “சாத்தான்” மற்றும் “பிசாசு”. சாத்தான் என்ற வார்த்தைக்கு “குற்றம் சாட்டுகிறவன்” என்று பொருள். இந்த வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் முப்பத்து நான்கு முறை வருகிறது. பிசாசு என்ற வார்த்தைக்கு “அவதூறு செய்பவன்” என்று பொருள். இந்த வார்த்தை பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் மாத்திரம் முப்பது ஆறு முறை வருகிறது.
இவைகள் மாத்திரமல்ல. “வலுசர்ப்பம்”, “மிருகம்”, “அசுத்த ஆவி” போன்ற பல்வேறு வார்த்தைகளிலும் சாத்தான் அறியப்படுகிறான். சாத்தானுடைய வேலைகள் என்ன என்பதை யோவான் 8:42–47 வசனங்களில் இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார்.
முதலாவது, இரட்சிக்கப்படாத ஒரு ஆத்துமாவின் மீது சாத்தான் உரிமை பாராட்டுகிறான்.
யோவான் 8 ஆம் அதிகாரத்தில், இயேசு தமக்கு எதிராக நிற்பவர்களை குறித்து பேசும் போது, அவர்கள் தங்கள் “தகப்பனாகிய” பிசாசினால் உண்டானவர்கள் என்று சொல்கிறார் (வசனம் 44). அவன் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” (2 கொரிந்தியர் 4:4), இந்த “உலகத்தின் அதிபதி” (யோவான் 12:31) இந்த பொல்லாங்கான உலகத்தை கட்டுபடுத்துகிறவன் (1 யோவான் 5:19). பிசாசினால் ஆதிக்கம் செலுத்தப்படுகிற உலகத்தில் தான் நாம் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறொரு ஆளுமைக்குள் இருக்கிற தேசத்தில் நுழைந்திருக்கிற இராணுவ வீரர்கள் போல தான் இந்த பூமியில் நாம் இருக்கிறோம். நாம் இவ்வுலகதிற்குரியவர்கள் அல்ல.
இரண்டாவது, பிசாசானவன் சத்தியத்திற்கு நமது மனக்கண்களை குருடாக்குகிறான்.
அவன் “பொய்யனும் பொய்க்கு பிதாவுமாய் இருக்கிறான்” (யோவான் 8:44). இதனால் தான், பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளாத எந்த ஒரு மனுஷனும் ஆவிக்குரிய காரியங்களை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியாது (1 கொரிந்தியர் 2:14). நம்முடைய இருதயத்தில் விதைக்கப்படுகிற வேத வசனங்களை எடுத்து போடுவதற்கு தீவிரம் காட்டுகிறான் (மத்தேயு 13:1–9).
மூன்றாவதாக, பிசாசு தேவனுடைய வார்த்தையை பொய் என்பான்.
ஆதியாகமம் 3-ஆம் அதிகாரத்தில் இருந்தே சாத்தானின் கிரியை இது தான், தேவ வார்த்தையை விட்டு நம்மை வழிவிலக செய்வது. இயேசுவிடமே வசனத்தை தவறாக மேற்கோள் காட்டி திசை திருப்ப முயற்சித்தவன் (மத்தேயு 4:1–11), நிச்சயமாக நம்மிடமும் முயற்சிப்பான். தேவ வார்த்தை என்று நாம் கேட்கும் எல்லா வார்த்தைகளும் தேவனுடைய வார்த்தைகள் அல்லவே. நம்முடைய எதிராளியாகிய பிசாசுக்கு நம்மை காட்டிலும் அதிக வசனங்கள் தெரியும். அவைகளை தவறாக திரித்து நாம் புரிந்து கொள்ளும்படி முயற்சிப்பான்.
நான்காவதாக, பிசாசானவன் “ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகன்” (யோவான் 8:44).
பிசாசானவன் எவனை விழுங்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றி திரிகிறவன் (1 பேதுரு 5:8). அவனுக்கு இரையாக அவன் விரித்த வலையில் விழுகிறவர்கள், தங்களுடைய சரீரத்தில், சிந்தையில் ஒருவரை ஒருவர் பாதிக்கிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள். தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளின் சமாதான வாழ்வை கெடுத்து, மனுகுலத்தை அழிப்பதே அவனுடைய தலையாய நோக்கம்.
ஐந்தாவதாக, சாத்தான் அசுத்த ஆவிகளை ஆளுகிறான்.
தேவனுக்கும், தேவ பிள்ளைகளுக்கும் எதிரான காரியங்களில் இந்த அசுத்த ஆவிகள் சாத்தானுடைய சேனையாக செயல்படுகிறது.
மொத்தத்தில், பிசாசு தேவனை எதிர்க்கிறான்.
யோவான் 8-ஆம் அதிகாரத்தில், பிசாசானவன் மதத்தலைவர்களை இயேசுவுக்கு எதிராக திருப்பி, இயேசுவை கொலை செய்யும்படிக்கு வாஞ்சையை கொடுக்கிறான். பின்னர், இயேசுவை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களை நடத்துகிறான்.
எல்லாவிதத்திலும் பிசாசு தேவனுக்கு எதிரானவன்:
- நம்முடைய தேவன் வெளிச்சம்; சாத்தான் இருள்.
- தேவன் பரிசுத்தரும் பட்சிக்கிற அக்கினியுமாய் இருக்கிறார்; சாத்தான் பாவத்தையும், வியாதியையும், பெலவீனத்தையும் உடையவனாய் இருக்கிறான்.
- தேவன் ஆவியாயிருக்கிறார்t; சாத்தான் அசுத்த சரீரத்தை உடையவன்.
- தேவன் உங்களை நேசிக்கிறார்; சாத்தான் உங்களை வெறுக்கிறான்.
- தேவன் உங்களுகென்று தம்முடைய ஒரே குமாரனை கொடுத்தார்; பிசாசு உங்களுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ள விரும்புகிறான்.
- தேவன் உங்களுடைய பிதா; சாத்தான் உங்களுடைய எதிரி.
சாத்தான் நிஜமானவன் தான். ஆனால் மறந்துவிடாதீர்கள்: அவன் தோற்றுப்போனவன்
இந்த திட்டத்தைப் பற்றி
"நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்" என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: "நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்". நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம்.
More