ஒற்றுமையின் வலிமைமாதிரி
ஒற்றுமையின் வலிமை
உங்களில் அநேகர் இசை கச்சேரிகளை பார்த்திருப்பீர்கள். நிகழ்ச்சிக்கு துவங்குவதற்கு முன்பாகவே நீங்கள் சென்றால், ஒவ்வொரு இசை கலைஞனும் தன்னுடைய இசை கருவியை தனித்தனியாக வாசித்து பார்த்து நிகழ்ச்சிக்கு தயாராவதை உங்களால் பார்க்க முடியும். அந்த வேளைகளில் ஒவ்வொரு இசை கருவியின் சத்தத்தையும் உங்களால் தனித்தனியே கேட்க முடியும். நிகழ்ச்சி துவங்கிய பின்னரோ, அனைத்து இசை கருவிகளும் ஒன்றாக இசைக்கப்படும்போது அழகிய இசையை கோர்வையாக நாம் கேட்க முடிகிறது. எதனால்? அந்த இசை கச்சேரியை முன்னின்று நடத்துபவர் அனைத்து இசைக் கலைஞர்களையும் ஒரே இசைக்கு நேராய் இயக்குகிறார். அந்த இசை கலைஞர்களும் அவரது இயக்கத்திற்கு ஒத்துழைக்கும்போது, இயக்குனர் மனதில் இருக்கும் அந்த அழகிய இசை பார்வையாளர்கள் காதுகளை சென்றடைகிறது.
மற்றொரு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், "ஒற்றுமையே வலிமை". ஒன்றாக இணைவதில் ஒரு ஆதாயம் இருக்கிறது. ஒற்றுமை என்று வரும்போது தேவ நாமும் மகிமைப்படுகிறது. யோவான் சுவிசேஷ புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் மிக நீளமான ஜெபம் ஒன்று பதிவு செய்யபட்டிருக்கிறது. அந்த ஜெபத்தில் கூட இயேசு கிறிஸ்து சீஷர்களின் ஒற்றுமையை மையப்படுத்தியே ஜெபித்திருப்பதை உங்களால் பார்க்க முடியும். தேவ பிள்ளைகளின் ஒற்றுமையாக இருக்கவேண்டியதின் அவசியத்தையும், ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் இந்த வசனங்களில் உங்களால் பார்க்கமுடியும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபை ஒரே தரிசனத்தை நோக்கி ஒன்றிணையும்போது, நாம் இந்த உலகத்தையே மாற்ற முடியும். அதற்கு நாம் இனம், மொழி, ஜாதி, கலாச்சாரம் கடந்து ஒன்றாக செயல்பட வேண்டும். இத்தனை வேற்றுமைகளை கடந்தால் தான் நாம் நம்மிடத்தில் தேவன் ஊற்றின அன்பை இந்த உலகத்தில் விளங்க செய்து, நம்பிக்கையற்று அழிந்துக்கொண்டிருக்கும் இந்த உலகத்திற்கு நம்பிக்கை அளிக்க முடியும்.
நம்முடைய ஒற்றுமை இயேசுவுக்கு இத்தனை முக்கியமானால், அதை கட்டாயம் நாமும் முக்கியமாக கருத வேண்டும். இந்த நேரத்தில்கூட சில நிமிடங்கள் எடுத்து இந்த ஒற்றுமை நம்மிடையே எற்படுத்தபடுவதற்காக ஜெபியுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், சபையில், நீங்கள் வசிக்கும் பகுதியில் தேவன் இந்த ஒற்றுமையை ஊற்றுவாராக.
இந்த தியானத்திட்டம் கட்டாயம் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று நாங்கள் கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம். மேலும் அதிகமாக எங்கள் மூலமாக கற்றுக்கொள்ள இந்த இணையதளத்தை பார்வையிடுங்கள்: here.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மற்ற இன மக்களை ஏற்றுகொள்வது என்பது வேறு, அனைவரும் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு. இன்றைக்கு மக்கள் அநேகர் முந்தின வகையை சேர்ந்தவராகவே இருக்கின்றனர். நம்மை காட்டிலும் வேறுபட்ட இனமக்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் அவர்கள் வேற்றினத்தை சேர்ந்தவர்கள் என்பது நமது சிந்தையில் நீங்காமல் இருக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சமுக உணர்வுகளில் நடத்தப்படும் பேரணிகள், போராட்டங்களில் கூட கலந்துகொள்பவராக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி நிறைவுறும்போது, அவரவர் தங்கள் தங்கள் வழிகளில் சென்று தங்கள் அலுவல்களை வழக்கம் போல தொடர ஆரம்பித்து விடுவார்கள். எனவே அனைத்து தரப்பு மக்களிடையே வேற்றுமை உணர்வுகள் முற்றிலும் களைந்த உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த, 'ஒருவரை ஒருவர் புன்முறுவலோடு சந்திப்பது, வணக்கம் சொல்வது' ஆகிய எளிமையான செயல்களை தாண்டின ஏதோ ஒன்று அவசியப்படுகிறது. இந்த 4 நாட்கள் தியான திட்டத்தில் Dr. டோனி இவான்ஸ் அவர்கள் வேதாகமம் கற்றுக்கொடுக்கும் ஒற்றுமையை குறித்து நமக்கு போதிப்பார்கள்.
More