உயிருள்ள நம்பிக்கை: உயிர்தெழுதல் நாளுக்கு முன்மாதிரி

Living Hope: A Countdown to Easter

3 ல் 3 நாள்

“என்னை பின்தொடருங்கள்.”

தேவன் மெளனமாக இருக்கும் போது, பேதுரு துக்கத்திலும் இருளிலும் உட்கார்ந்திருந்தார். இயேசு சிலுவையில் அறையப்படும் படி இழுத்து செல்லப் படுவதற்கு சற்று முன், இயேசுவை தெரியாது என்று மற்றவர்களுக்கு முன் பேதுரு மறுத்து விட்டார். இப்போது கடந்த சில நாட்களாக, இந்த வேதனை முடியும் என்ற நம்பிக்கை கூட இல்லாமல், பேதுரு தன் துக்கத்தையும் குற்ற உணர்வையும் உணர ஆரம்பித்தார்.  

ஆனால், மூன்றாம் நாள் அதிகாலையில், இயேசுவின் கல்லறை காலியாகவும் கல் புரட்டப்பட்டதாகவும் காணப்பட்டது. மற்ற சீடர்களோடு சேர்ந்து பேதுரு அந்த நாளின் நிகழ்வுகளை பற்றி பேசியும் சிந்தித்தும் கொண்டிருக்கும் போது, முழுவதும் உயிருள்ளவராகஇயேசு திடீரென பேதுருவுக்கு முன் தோன்றுகிறார்! 

தான் செய்த தவறுகளை எண்ணி வெட்கத்துடன் பேதுருவை வாழ விடுவதற்கு மாறாக, இயேசு பேதுருவை தனியாக அழைத்து சென்று பேதுருவை தன் நோக்கத்திற்கு நேராக உந்தித் தள்ளும் கேள்வி ஒன்றை அவரிடம் கேட்கிறார்: 

“என்னை நேசிக்கின்றாயா?”

பேதுரு மறுதலித்த அந்த உறவை மீண்டும் உறுதி செய்யும் விதத்தில் இயேசு இந்த கேள்வியை கேட்டார். மரணத்தின் மேலும் இருளின் மேலும் இயேசு வல்லமை உடையவராய் இருப்பதால், தான் செய்த தவறுகளால் பேதுரு வரையறுக்கப்பட அவசியமில்லை. தன் வாழ்க்கைக்கென தேவன் வைத்திருந்த அழைப்பை அவர் இன்னும் தழுவவும், இயேசு அவரில் கண்ட தலைவராகவும் இருக்க அவரால் முடிந்தது. 

பேதுருவைப் போல, இயேசுவை நேசிக்கவும், அவரால் நேசிக்கப்படவும் "சரி" என்று சொல்லும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்கள் வாழ்க்கை எப்படி குழப்படியாக இருந்தாலும், இயேசுவை விட்டு எவ்வளவு தூரமாக நீங்கள் உணர்ந்தாலும், அவருடைய அன்பிலிருந்து உங்களை எதுவும் பிரிக்க முடியாது. உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவில் மட்டுமே வேரூன்றியிருக்கும் போது, நீங்கள் செய்த தவறுகளோ அல்லது இப்போது உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளோ உங்கள் நோக்கத்தை நிர்ணயிக்க முடியாது. 

தேவனால் மீட்க முடியாத சூழ்நிலையோ, தவறோ எதுவும் இல்லை என்று உயிர்த்தெழுதல் நமக்கு உறுதியாக காட்டுகிறது. ஏசுவால் ஆட்கொள்ள முடியாத பயமும் இல்லை, அவர் சுகப்படுத்த முடியாத வாழ்க்கையும் இல்லை. நம் சார்பில் மரணத்தை மேற்கொண்ட உயிர்த்தெழுந்த தேவனின் வல்லமைக்கு எதிராக எந்த இருளும் நிற்க முடியாது. நம் தேவனால் செய்ய முடியாததும் எதுவும் இல்லை.  

ஜெபம்: இயேசுவே, எனக்காக மரணத்தை மேற்கொண்டதற்காக உமக்கு நன்றி. உம் அன்பிலிருந்து எதுவும் என்னை பிரிக்க முடியாது என்பதற்காகவும், எந்த தவறும் உம் திட்டத்திலிருந்து என்னை நீக்க முடியாது என்பதாலும் நன்றி. என்னை யாராக இருக்க அழைத்திருக்கிறீர் என்று எனக்கு நினைவுப் படுத்தும். நான் மதிப்பற்றவனாக உணரும் போது, உம் உயிர்த்தெழுதலை நினைவுக்கூறவும், நீர் மட்டுமே என் இரட்சிப்பு என்பதில் களிக்கூறவும் எனக்கு உதவும். நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை பின்தொடர இன்று முடிவு செய்கிறேன்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Living Hope: A Countdown to Easter

இருள் உங்களை சூழும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மூன்று நாட்களும், உயிர்த்தெழுதல் சம்பவத்தில் மூழ்கி, கைவிடப்பட்டவராக, தனிமையாக, மதிப்பற்றவராக நீங்கள் உணரும் போது, நம்பிக்கையை எப்படி பற்றிக் கொள்வது என்று கண்டறியுங்கள்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்