உயிருள்ள நம்பிக்கை: உயிர்தெழுதல் நாளுக்கு முன்மாதிரி

Living Hope: A Countdown to Easter

3 ல் 2 நாள்

“தையரியமாக இருங்கள்.” 

இயேசுவின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் வரை உள்ள நேரத்தைப் பற்றி வேதாகமம் அதிகமாக சொல்லவில்லை. ஆனால் அது பஸ்கா பண்டிகையின் போது நிகழ்ந்தது என்று நமக்கு தெரியும். பஸ்கா பண்டிகை என்பது தேவன் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ததை நினைவுக்கூர்ந்து ஒரு வாரம் கொண்டாடும் பண்டிகையாக இருந்தது. 

பண்டிகையின் போது, யூதர்கள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து உணவு உண்டு, பழுதற்ற ஆடுகளை தேவாலயத்தில் பலியிடுவார்கள். பின்னர் ஓய்வு நாளில் ஓய்வெடுக்க ஆயத்தப் படுவார்கள். ஓய்வு நாளுக்கு முந்தின நாளில் தான் இயேசுவின் உடல் கல்லறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.  

இது நிகழ்ந்தப் போது, நீங்கள் இயேசுவின் சீடனாக இருப்பதாக கற்பனை செய்துப் பாருங்கள். உங்களுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் நியாமில்லாமல் கொல்லப்பட்டதோடு, ஓய்வு நாள் முடியும் வரை அவருடைய மரணத்தைக் கூட துக்கம் அனுசரிக்க முடியாத சூழ்நிலை.  

அவர்கள் அனுபவித்த வேதனை, நாம் அனைவரையும் மீட்கும் திட்டம் என்ற ஒரு பெரிய கதையின் பகுதி தான் என்பதை சீடர்கள் அப்போது உணரவில்லை. உயிர்த்தெழுதல் வரவிருப்பதை தேவன் அறிந்திருந்தார், ஆனால் சீடர்கள் அறியவில்லை. 

எல்லா சூழ்நிலைகளுக்கும் மேல் தேவன் ஆண்டவராக இருக்கிறார் என்று ஓய்வு நமக்கு நினைவுப்படுத்துகிறது. நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க வாக்களித்திருக்கும் அவரை கவனம் செலுத்த ஓய்வு உதவுகிறது. நாம் கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க தேர்ந்தெடுக்கும் போது, தேவனை ஆராதிக்க தேர்ந்தெடுக்கிறோம்.  

இன்றைக்கு உங்களை சுற்றி என்ன நிகழ்ந்தாலும், உங்களை சுற்றியுள்ள உலகம் கவலைப்பட தேர்ந்தெடுத்தாலும், நீங்கள் தேவனில் இளைப்பாற தேர்ந்தெடுங்கள். அவரால் முடியாதது ஒன்றும் இல்லை.

ஜெபம்: இயேசுவே, இன்றைக்கு உங்களில் இளைப்பாற எனக்கு உதவும். என்னை சுற்றி நிகழும் எல்லாவற்றையும் விட நீர் பெரியவர் என்று அறிந்திருக்கிறேன். நீர் என் ரட்சிப்பாய் இருப்பதால் உம் ஒருவர் மேல் நம்பிக்கை வைத்துள்ளேன். பதில்களுக்காக இன்னும் நான் காத்துக்கொண்டு இருந்தாலும், என் மனக்குமுறல்களுக்கு நீர் ஏற்கனவே பதில் கொடுத்து விட்டீர் என்று நான் நம்புகிறேன். எனவே, இன்றைக்கு உம் மேல் என் கண்களைப் பதிய வைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Living Hope: A Countdown to Easter

இருள் உங்களை சூழும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மூன்று நாட்களும், உயிர்த்தெழுதல் சம்பவத்தில் மூழ்கி, கைவிடப்பட்டவராக, தனிமையாக, மதிப்பற்றவராக நீங்கள் உணரும் போது, நம்பிக்கையை எப்படி பற்றிக் கொள்வது என்று கண்டறியுங்கள்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.