பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை மாதிரி
இந்த இக்கட்டான நேரங்களில் மனிதர்களை நாம் எதிர்கொள்வது எப்படி?
இப்படிப்பட்ட பேரிடர் காலங்களில், நாம் சுயநலமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதையே நம்முடைய மனது விரும்பும். ஆனாலும் நமக்காக தம்மை வெறுத்து, ஜீவனை தந்த கிறிஸ்து இயேசுவிலிருக்கும் சிந்தையே நம்மிலும் இருக்கவேண்டுமென்று வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
மூலமொழியில் இந்த வசனம், போலியாக காட்டப்படக்கூடிய வெளிபிரகாரமான அன்பை அல்ல, உள்ளத்திலிருந்து காண்பிக்கப்படும் உண்மையான அன்பையே குறிக்கிறது. போலியாக இல்லாமல் உண்மையான அன்போடு நாம் ஒருவரையொருவர் நேசிக்க கடமைபட்டிருக்கிறோம்!
மற்றவரை நாம் நேசிப்பதற்கு நாம் சில நேரங்களில் ஏதேனும் விலைகிரயத்தை செலுத்தவேண்டியநிலை ஏற்படலாம். இயேசுவும் தமது அன்பை அவருடைய ஜீவனை விலைகிரயமாக கொடுத்து காண்பித்தார். நாமும் தியாக மனபான்மையோடே பிறரை நேசிக்க வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. இப்படி செய்வதினால், தேவன் நமக்குள் ஊற்றிய அன்பை விளங்கப்பண்ணுகிறோம்.
எந்த காலத்திலும் நன்மை செய்வதற்கான அவசிய தேவையும் வாய்ப்புகளும் ஏராளமாக இருக்கிறது. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். எனவே நன்மையை பிறர் வாழ்வில் விதைப்பதற்கு விரும்புவோம், பிரயசப்படுவோம்!
ஒருவருக்கு நாம் செய்யக்கூடிய மிக சிறந்த நன்மை, இயேசுவை அவர்களுக்கு அறிமுகம் செய்வது! தேவன் இந்த பாவத்தின் விளைவில் கஷ்டப்படும் மனிதகுலத்தை மீட்க ஏற்படுத்திய இந்த மேன்மையான வழியை பிறர்க்கு பகிர்ந்து கொள்வதே நாம் அவர்களுக்கு செய்யக்கூடிய மிக சிறந்த நன்மையாகும். இது ஊழியக்காரர்களுக்கு மாத்திரமல்ல, அனைவருக்குமான வேத கட்டளை. மனிதர்களுக்கு இயேசு தேவை. இயேசுவுக்கும் சீஷர்கள் தேவை. எனவே நாம் அவருடைய வார்த்தைகளை கேட்டு, கீழ்படிவதோடு நிறுத்திவிடாமல், அவைகளை பிறரோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் சிந்தனைக்கு சில கேள்விகள்:
- இவைகள் தேவனை குறித்து நமக்கு கற்றுகொடுப்பது என்ன?
- இவைகள் நம்மை குறித்தும் மற்ற மனிதர்களை குறித்தும் நமக்கு கற்றுகொடுப்பது என்ன?
- கொரோனா நோயை நாம் எதிர்கொள்வதை குறித்த காரியத்தை நன்கு புரிந்துகொள்ள இவைகள் எந்த வகையில் உதவி செய்கிறது?
- இன்று நீங்க கற்றுக்கொண்ட காரியங்களுக்கு நீங்கள் எந்த வகையில் உங்களை ஒப்புகொடுத்து கீழ்படிய விரும்புகிறீர்கள்?
- இந்த வசனங்களை எவர்களிடம் பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள்?
இந்த திட்டத்தைப் பற்றி
சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது, இந்த சூழ்நிலையில் தேவன் நமக்கு தரும் தீர்வு என்ன, மரணமானாலும் ஜீவனானாலும் அவைகளை குறித்த நமது நம்பிக்கை என்ன என்பதை குறித்து வேதம் நமக்கு என்ன கற்றுகொடுக்கிறது ஆகிய காரியங்களை குறித்து இந்த தியானத்திட்டதின் கீழ் நாம் படிக்க இருக்கிறோம்.
More