பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை மாதிரி
இந்த இக்கட்டான நேரங்களில் தேவனை நாம் எதிர்கொள்வது எப்படி?
இந்த உலகத்தை பாவத்தின் விளைவிலிருந்து மீட்டு பாவப்பிடியிலிருக்கும் மனிதர்களுக்கு புதிய வாழ்வை ஏற்படுத்தி கொடுக்கும்படியாக தேவனே பாவமனிதனின் சாயலில் உருவெடுத்து வந்து, சிலுவையிலே சர்வலோக பாவ பரிகார சின்னமாக பலியானார். அவருடைய இரத்தத்தின் விலைகிரயத்தினாலே நாம் புதிய வாழ்விற்குள் நுழைந்திருக்கிறோம். தேவனும் இயேசுவினுடைய தியாகத்தை ஏற்றுக்கொண்டதின் பலனாக அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். இயேசுவின் உயிர்த்தெழுதலில் புதிய வாழ்வில் நாமும் பங்கடையும்படியாக, நம்முடைய பழைய பாவ வாழ்கையை விட்டு, வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிற இயேசுவிடம் திரும்பும்படியாக தேவனும் நம்மை அழைக்கிறார். இதனை தான் மனம்திரும்புதல் என்று வேதம் சொல்லுகிறது. இது நமக்கான ஆசீர்வாதம் மாத்திரமல்ல, முழு மனித வம்சங்களுக்குமானது.
கவலைகள் பெருத்திருக்கும் இந்த வாழ்கையில், நம்மை உற்சாகபடுத்தும் வார்த்தைகளை தேவன் இன்று நமக்கு தருகிறார்.
நம்மை ஜீவனின் பாதைக்கு அழைக்கும் தேவனின் சத்தத்தை நிராகரிப்பதை காட்டிலும் முட்டாள்த்தனமான காரியம் வேறெதுவும் இல்லை. நாம் தேவனின் சத்தத்தை அறிந்துகொள்வதோடு நிறுத்திவிடாமல், அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்து கீழ்படிவதே சரியானதாகும். தேவன் உங்களோடு பேசுவது என்ன?
பல நேரங்களில் நாம் சரியான புரிந்துக்கொள்ளுதல் இல்லாமலே அநேகம் காரியங்களை குறித்து பேசி விவாதிக்கிறோம். நாம் இன்று வாசித்த வேதபகுதியில், யோபுவுக்கு முன்பாக தேவன் அநேகம் கேள்விகளை முன்வைக்கிறார். நம்முடைய படித்த அறிவுள்ள மூளையை கொண்டு "என்னால் இதனை விளக்க முடியும்" என்று கூட சொல்ல துணியலாம். ஆனால், நம்முடைய அறியாமையினாலே சத்தியத்தை தவரவிடுவோம். எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் தேவன் தமது கரத்தின் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறார். கொரோனா தோற்று போன்றதான பேரிடர்கள் இந்த உலகத்திற்கு தெளிவாக உணர்த்தும் காரியம் இதுவே.
நம்முடைய வழிகளை காட்டிலும் மேலான வழிகளை கொண்டிருந்து, அகில உலகத்தையும் அதிலுள்ளவைகளையும் அறிந்து அடக்கி ஆளும் தேவனிடம், "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற மனநிலையுடன் எதிர்கொள்ளாமல், தேவனுடைய எண்ணங்களுக்கு, சித்தத்திற்கு கீழ்படிவதே நாம் தேவனை சரியாக எதிர்கொள்ளும் முறையாகும்.
உங்கள் சிந்தனைக்கு சில கேள்விகள்:
- இவைகள் தேவனை குறித்து நமக்கு கற்றுகொடுப்பது என்ன?
- இவைகள் நம்மை குறித்தும் மற்ற மனிதர்களை குறித்தும் நமக்கு கற்றுகொடுப்பது என்ன?
- கொரோனா நோயை நாம் எதிர்கொள்வதை குறித்த காரியத்தை நன்கு புரிந்துகொள்ள இவைகள் எந்த வகையில் உதவி செய்கிறது?
- இன்று நீங்க கற்றுக்கொண்ட காரியங்களுக்கு நீங்கள் எந்த வகையில் உங்களை ஒப்புகொடுத்து கீழ்படிய விரும்புகிறீர்கள்?
- இந்த வசனங்களை எவர்களிடம் பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள்?
இந்த திட்டத்தைப் பற்றி
சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது, இந்த சூழ்நிலையில் தேவன் நமக்கு தரும் தீர்வு என்ன, மரணமானாலும் ஜீவனானாலும் அவைகளை குறித்த நமது நம்பிக்கை என்ன என்பதை குறித்து வேதம் நமக்கு என்ன கற்றுகொடுக்கிறது ஆகிய காரியங்களை குறித்து இந்த தியானத்திட்டதின் கீழ் நாம் படிக்க இருக்கிறோம்.
More