மறுரூபமாக்க மறுரூபமாகுமாதிரி

மறுரூபமாக்க மறுரூபமாகு

3 ல் 2 நாள்

தூய ஆவியானவருடன் இணைந்து பிரசங்கித்தலும் கற்பித்தலும்

கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே ……….. அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்  (1 கொரி 1: 4-6). 

மேற்சொல்லிய வசனங்களின்படி, பவுலுடைய மறுரூபம் (மனமாறுதல்) அவரோடு மட்டும் நின்றுவிடாமல், மற்றவர்களையும் ஆவிக்குரிய  வாழ்வில், ஆவிக்குரிய சத்துவத்தையும் அளிக்கிறதாயிருந்தது. தேவனுடைய கிருபை தனக்குக் கிடைத்தற்காக அவர்  தேவனுக்கு கடன்பட்டதாக  உணர்கிறார்.  அவர்  மூலமாக,  மறுரூபத்தை நம்மில் உருவாக்கும், உள்ளார்ந்த மனதை வியப்படைய வைக்கும்.  நமது இருதங்களைப் பலப்படுத்துகிற, தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை நாம் அறிகிறோம்.  நிகழ்காலங்களையும் எதிர் கால வெளிப்படுத்தல்களையும் உள்ளடக்கிய தேவனுடைய செய்தியே முக்கியமென்றும் செய்தி கொடுப்பவர்  (பவுல்) முக்கியமல்ல என்றும் வலியுறுத்துகிறார்.   அந்த செய்தி ஒரு தத்துவமல்ல ;  மாறாக அது ஆரம்பமுதல் முடிவுவரை உள்ள பரிசுத்த வேதவனங்களுக்கு ஆதாரம்.

விசுவாச  விதைகளை  விதையுங்கள்; மீதியை தேவனிடம் விட்டுவிடுங்கள்.

“ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்..”

'சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாயும், ரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாகவும் இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறபடி நாம் அதைப் புரிந்து, ஏற்றுக்கொண்டு அதன் பிரதிபலன்களையும், விளைவுகளையும் தேவனின் வல்லமைக்கே விட்டுவிட வேண்டும்.  ஆகவே நாம் நற்செய்தியைப் பகிர்ந்து கொடுக்கும்பொழுது  முடிவுகளை தேவனிடமே அர்ப்பணித்துவிட வேண்டும்.  அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்கு,  அவருடைய திட்டங்களைத் தெரிவிக்கிறார்.   நம்மில் இயங்குகிற தூய ஆவியானவர்  மூலமே தேவனுடைய நோக்கத்தை நாம் அறிய முடியும். தேவனுடைய வார்த்தைகளும்,  தூய ஆவியானவரும் தேவனின் உண்மைகளை தெரிவிக்கின்றன. தூய  ஆவியானவர்  இன்றி  ஒருவனும்  இயேசு  கிறிஸ்துவை  தேவன் என்று  பகிரங்கமாக  உரிமை  பாராட்ட முடியாது. புரிந்து கொள்ளுதலின்  வரம்  தூய  ஆவியானவரிடம்  இருந்தே  வருகிறது. அதுவே தேவனுடைய சித்தத்தை   நமக்குத்  தெரிவிக்கிறது. 

சொல்லும்  செயலும்  (பேச்சும்  நடத்தையும்)

தேவனுடைய வார்த்தையை  ஏற்றுக் கொண்டும்,  அதைப்  பிரசிங்கித்தும்  வருகிற  நாம்  வளர்ச்சியடைந்த  தேவனுடைய மக்களாக  வாழ  வேண்டும்.  தேவனுடைய  வார்த்தையால்  போஷிக்கப்பட்ட  நாம்  பரிசுத்தமான  வாழ்க்கை  வாழவேண்டும்.  நாம்  தேவனின்  ஆலயம்  என்பதை  மனதில்  வைத்து,  சண்டைகள்,  பொறாமைகள்  விக்கிரக  வணக்கங்கள்  ஆகியவற்றிற்கு  விலகி  வாழ  வேண்டும்.  விசுவாச  விதைகளை  விதைப்பதிலும்  அதற்கு  தண்ணீர்  பாய்ச்சுவதிலும்  நமது  கவனத்தைச்   செலுத்த வேண்டும்.  ஆனால்  பலனை  தேவனிடம் விட்டுவிட  வேண்டும். அது  தேவனுடைய  ராஜ்யத்திற்கு  நாம்  குழுவாக  செய்யும்  பணி.   நம்முடைய  ஒவ்வொரு  பணியையும்  தேவன் வெளிப்படுத்துவர்.  பரிசோதித்து  பொன்னாக  விளங்கிய  பணிக்கு  நிச்சயமாகவே  வெகுமதி  கிடைக்கும்.   நாம்  ஆசீர்வதிக்கப்படுவோம்  என்பதை  மனதில்  உணர்ந்து,  நமக்குச்  சோதனைகளும்,  கஷ்டங்களும்  வரும்பொழுது  கலங்க  வேண்டாம்.  திகைக்க  வேண்டாம்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

மறுரூபமாக்க மறுரூபமாகு

தேவன் நம்மை அழைத்ததின் நோக்கத்தை அறிந்து அனுபவிப்பது, சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வது, பிறருக்கு அவருடைய இரட்சிப்பின் கிரியையை அறிவிப்பது, எதிர் கால நம்பிக்கையுடன் நிகழ்காலங்களைக் கடத்தல், தேவன் தெரிந்து கொண்ட தகுதியுள்ள பாத்திரமாக வாழ்வது, திருச்சபைகளில் ஐக்கியத்தை வளர்ப்பது, கிறிஸ்துவை மட்டுமே தலைவராகக் கொள்வது, தேவனுடைய வார்த்தையைப் போதித்து பிரகடனப்படுத்துவதாகும்.

More

ഈ പദ്ധതി നൽകിയതിന് സി ജെബരാജിന് നന്ദി പറയാൻ ഞങ്ങൾ ആഗ്രഹിക്കുന്നു. കൂടുതൽ വിവരങ്ങൾക്ക്, സന്ദർശിക്കുക: http://jebaraj1.blogspot.com/